25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
22 62b70a
மருத்துவ குறிப்பு

மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று மாதவிடாய். மாதவிடாய் தாமதம், அதிகப்படியான உதிரப்போக்கு, உடல் சோர்வு, வலி ​​போன்ற மாதவிடாய் பிரச்சனைகளால் பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எத்தனையோ பெண்களுக்கு, எத்தனை மருந்து, மாத்திரைகள், மருத்துவர்களிடம் முயற்சி செய்தும், விரும்பிய பலன் கிடைக்காது.

சில சமயங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே, அவற்றைத் தடுக்க சில இயற்கை வழிகள் உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

 

தினமும் காலை அருகம்புல்லை அரைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும். மற்றும் வயிறு உபாதைகள் சார்ந்த பிரச்சனைகளுக்கும் இது நல்ல தீர்வளிக்கும்.

அன்னாசிப் பழத்தை தினமும் சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

ஆலமர இலைகளை பொடி செய்து வெண்ணெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குப் பிரச்னையில் இருந்து நல்ல தீர்வுக் கிடைக்கும்.

எள்ளைத் தண்ணீரில் போட்டு ஊற வைத்து. மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு காலத்தில் உண்டாகும் பிரச்சனைகள் குறையும்.

கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.

செம்பருத்திப் பூக்களை அரைத்து அதோடு எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு ஒழுங்காகும். செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.

சோம்பு, மாவிலங்கப்பட்டை, மிளகு மூன்றையும் சம அளவுக்குக் காய்ச்சி 100 மில்லி அளவுக்குக் குடித்தால், மாதவிலக்குப் பிரச்னைகள் விரைவில் சரியாகும்.

Related posts

தினந்தோறும் துளசி இலை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா மாதவிடாய் தாமதமாக காரணம் என்ன?

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்…!

nathan

கர்ப்பமா இருக்கும் போது பிட்டப்பகுதியில் வலி அதிகமா இருக்குமே..

nathan

கீரை டிப்ஸ்..

nathan

பெண்கள் கர்ப்பமடைய சரியான வயது எது?

nathan

அயோடினுக்கும் தைராய்டு பாதிப்புக்கும் என்ன தொடர்பு? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!!

nathan

இன்றைய காலத்தில் மங்கையரை வருத்தும் மாதவிடாய் பிரச்சினை

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்தத்தில் உள்ள கிருமிகளை நீக்கி சுத்தப்படுத்தும் அற்புதமான பழம்!!

nathan