25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
keralamattaricepaalpa
இனிப்பு வகைகள்

கேரளா மட்டை அரிசி பால் பாயாசம்!ஆஹா பிரமாதம்

கேரளா மட்டை அரிசி என்பது வேறொன்றும் இல்லை கேரளா அரிசி தான். இது உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது. குறிப்பாக இந்த பாயாசம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவாறு இருக்கும். இந்த கேரளா மட்டை அரிசியைக் கொண்டு பால் பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதன் செய்முறையைப் படித்து முயற்சித்துப் பாருங்கள். முக்கியமாக இதை ட்ரை செய்த பின்னர் எப்படி இருந்தது என்று உங்களின் அனுபவத்தை எங்களுடன் மறவாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கேரளா மட்டை அரிசி – 1/8 கப்

* பால் – 4 கப்

* சர்க்கரை – 1 கப்

* ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்

* உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை:

* முதலில் கேரளா மட்டை அரிசியை மிக்ஸர் ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்து கொள்ளுங்கள்.

* பின் அதை நீரில் நன்கு கழுவி, நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

* பிறகு அதில் கழுவி வைத்துள்ள மட்டை அரிசியைப் போட்டு நன்கு கிளறி, அரிசி நன்கு மென்மையாக வேகும் வரை வேக வைக்கவும்.

* அரிசி வேக சிறிது நேரம் எடுக்கும் என்பதால், குறைவான தீயில் வேக வைக்கவும்.

* அரிசி நன்கு மென்மையாக வெந்த பின்பு சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.

* இறுதியில் உப்பு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கேரளா மட்டை அரிசி பால் பாயாசம் தயார்…

Related posts

சூப்பரான சாக்லேட் குஜியா

nathan

இனிப்பு விரும்பிகளுக்கு பாணிக் கடும்பு (pudding)

nathan

சோன் பப்டி தீபாவளி ரெசிபி

nathan

வேர்க்கடலை உருண்டை

nathan

கேரட் பாயாசம்

nathan

சூப்பரான பனங்கற்கண்டு பால் பொங்கல் ரெடி!…

sangika

சுவையான நட்ஸ் பால்ஸ் வீட்டிலேயே செய்யலாம்…

sangika

ஆஹா பிரமாதம்- மைசூர் பருப்பு தால் செய்வது எப்படி

nathan

தித்திப்பான ரவை – தேங்காய் உருண்டை

nathan