25.9 C
Chennai
Thursday, Mar 12, 2026
chicken popc
அசைவ வகைகள்

சிக்கன் பாப்கார்ன்

உங்களுக்கு சிக்கன் பாப்கார்ன் எப்படி செய்வதென்று தெரியாதா? கீழே சிக்கன் பாப்கார்ன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எலும்பில்லாத சிக்கன் – 250 கிராம்

* பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* பிரட் – 4

* முட்டை – 1

* பால் – 1 டேபிள் ஸ்பூன்

* மைதா – 1/2 கப்

செய்முறை:

* முதலில் சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டி, நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் கழுவிய சிக்கனை ஒரு பெளலில் போட்டு, அத்துடன் பூண்டு விழுது, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு பிரட் துண்டுகளை நன்கு பொன்னிறமாக டோஸ்ட் செய்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடி செய்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின் பிரட் தூளுடன் சீரகப் பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் பாலை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு தட்டில் மைதாவை போட்டுக் கொள்ள வேண்டும்.

* இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும்.

* பின்னர் ஒரு சிக்கன் துண்டை எடுத்து, முதலில் முட்டை கலவையில் பிரட்டி, பின் மைதாவில் பிரட்டி, அதன் பின் மீண்டும் முட்டையில் பிரட்டி, இறுதியாக பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட வேண்டும். இப்படி அனைத்து சிக்கனையும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான சிக்கன் பாப்கார்ன் தயார்.

Related posts

சூப்பரான கேரளா ஸ்டைல் சிக்கன் கட்லெட்

nathan

எவ்வாறு சுவையான சிக்கன் பிரியாணி தயாரிப்பது.

nathan

Chettinad chicken kulambu in tamil |செட்டிநாடு சிக்கன் குழம்பு |deepstamilkitchen

nathan

லெமன் ஃபிஷ் ஃப்ரை… இதுவரை மீனை இப்படி சாப்பிட்டு இருக்க மாட்டீங்க..!

nathan

சுவையான நெத்திலி மீன் வறுவல் செய்வது எப்படி

nathan

புதினா ஆம்லேட்

nathan

அடுப்பு இல்லாமல் அசத்தலான டிஷ்…இலங்கையின் தேசிய உணவு -மாசிக்கருவாடு சம்பல்!

nathan

எண்ணெய்யில் பொறித்த காரசாரமான மட்டன் லெக் பீஸ்

nathan

சுவையான ஆரஞ்சு சிக்கன்

nathan