Courtesy:maalaimalarதேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 4 (கீறியது)
இஞ்சி – 1 இன்ச்
பூண்டு – 6 பல்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு…
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
மல்லி – 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 4
சோம்பு – 1 டீஸ்பூன்
கோங்குரா மசாலாவிற்கு…
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
பூண்டு – 4 பல்
புளிச்சக்கீரை – 2 கப்
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
* வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இதையும் படியுங்கள்: 10 நிமிடத்தில் செய்யலாம் பன்னீர் பஜ்ஜி
* புளிச்சக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள வெந்தயம், சோம்பு, மல்லி, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து 5-ஜ நிமிடம் மிதமான தீயில் வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, சிக்கனை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
இதையும் படியுங்கள்: கோவிலில் கொடுப்பது போலவே ருசியான வெண் பொங்கல் வீட்டிலேயே செய்யலாம் வாங்க…
* அடுத்து கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 1/4 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் கோங்குரா கீரையை சேர்த்து, சிறிது உப்பு மற்றும் அரைத்த பொடியை சேர்த்து நன்கு கிளறி, 3-4 நிமிடம் மசாலாவில் கோங்குரா கீரையை மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* கீரை நன்கு வெந்ததும், அதை குக்கரில் உள்ள சிக்கனுடன் சேர்த்து, குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, 2 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன் தயார்.
* இட்லி, தோசை, சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன்.