25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
22 62b0e
சமையல் குறிப்புகள்

இப்படி ஒரு முட்டை ஆம்லெட்டை ருசித்தது உண்டா? ஆஹா பிரமாதம்

தேவையான பொருட்கள்
முட்டை – 4, புதினா – கால் கப், கொத்தமல்லி தழை – கால் கப், வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, மிளகு தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன்.

இப்படி ஒரு முட்டை ஆம்லெட்டை ருசித்தது உண்டா? 10 நிமிடத்தில் செய்வது எப்படி? | Egg Omelet Recipe In Tamil

செய்முறை விளக்கம்
முதலில் வெங்காயத்தை எடுத்துக்கொண்டு பொடி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அதனோடு இரண்டு பச்சை மிளகாய் சிறிய துண்டுகளாக நறுக்கிகொள்ள வேண்டும்.

பின்னர், புதினா தழை மற்றும் கொத்தமல்லித்தழையை தண்ணீரில் சுத்தமாக அலசி வைக்க வேண்டும். தொடர்ந்து நான்கு முட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, அவற்றுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், முக்கால் ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்க வேண்டும். அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, அரை ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.

இப்படி ஒரு முட்டை ஆம்லெட்டை ருசித்தது உண்டா? 10 நிமிடத்தில் செய்வது எப்படி? | Egg Omelet Recipe In Tamil

எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுப்பை அணைத்துவிட்டு, தண்ணீரில் அலசி வைத்துள்ள கொத்தமல்லி தழை மற்றும் புதினாவை சேர்த்து லேசாக கிளறி விட்டு, வதக்கிய அனைத்து பொருட்களையும் கலந்து வைத்துள்ள முட்டையில் சேர்க்க வேண்டும்.

பிறகு இவை அனைத்தும் ஒன்று சேர நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் அடுப்பின் மீது ஒரு தோசைக்கல்லை வைத்து அரை ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.

எண்ணெய் நன்றாக சூடானதும் கலந்து வைத்துள்ள முட்டை கலவையில் இருந்து ஒரு கரண்டி அளவு ஊற்றி, ஆம்லெட் செய்ய வேண்டும். இவை நன்றாக வெந்ததும் ஆம்லெட்டை திருப்பிப் போட்டு, 2 நிமிடம் கழித்து எடுத்து விட வேண்டும். சுவையான முட்டை ஆம்லெட் ரெடி.

Related posts

சுவையான காரமான பட்டாணி ரெசிபி

nathan

ருசியான அவல் கார பொங்கல்!….

sangika

பூரி மசாலா

nathan

சுவையான ஆந்திரா ஸ்டைல் தக்காளி ரசம்

nathan

ஸ்பெஷல் மாங்காய் பச்சடி

nathan

சாதம் மீதி இருக்கா? சூப்பரா கட்லெட் செய்யலாம்!

nathan

அசத்தலாக சிக்கன் பெப்பர் கிரேவி! வெறும் 10 நிமிடத்தில்

nathan

குடைமிளகாய் கறி

nathan

சுவையான காலிஃப்ளவர் மசாலா தோசை

nathan