28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
1448002594 5097
வீட்டுக்குறிப்புக்கள்

குடும்ப தலைவிகளுக்கான கிச்சன் டிப்ஸ்

குடும்ப தலைவிகளுக்கு எப்பொழுதும் வேலை வேலை தான். அதனால் அவர்கள் வேலையை எளிதாகவும், விரைவாகவும் செய்து முடிக்க இங்கே சில குறிப்புகள்

1.) தேங்காயை உடைத்தவுடன் கழுவி குளீர்சாதன பெட்டியில் வைத்தால், அதன் மேல் ஏற்படும் பிசுபிசுப்பு ஏற்படாது. மேலும் எளிதில் எடுக்க வரும்.

2.) காய்கறிகள் வாங்கும் போது கவனமாக தேர்வு செய்ய வேண்டும். புடலங்காய் கசப்பாக இருந்தால், அவை பாம்பு ஏறிய காய் என்பார்கள். ஆகவே சிறிது கிள்ளி சுவைத்து பார்த்து வாங்க வேண்டும்.

3.) புளியை அவ்வபோது கரைத்துகொண்டிருப்போம். இதனால் மீதம் உள்ள புளி வீணாகும். இதனை தவிர்க்க புளி பேஸ்ட் தயார் செய்து வைத்து கொள்ளலாம்.

4.) பூண்டை அவ்வபோது உரித்து கொண்டிருந்தால் நேரம் வீணாகும். ஆகையால் பூண்டை தண்ணீரில் ஊற வைத்து எடுத்தால் எளிதில் வந்து விடும்.

5.) பலகாரம் செய்த பிறகு மீதமாகும் சுட்ட எண்ணெயில் வாழைக்காய், கருணைக்கிழங்கு வறுவல் செய்தால் சுவை மிகுதியாக இருக்கும்.

6.) பாகற்காயில் உள்ள கசப்பு போக சிறிது உப்பு சேர்த்து பிசைந்து 5 நிமிடம் வைத்துவிட்டு பிறகு கழுவி விட்டு சமைத்தால் கசப்பு தன்மை குறைவாக இருக்கும்.

7.) வாழைக்காய் நறுக்கும் போது கரையாகும், இதனை தடுக்க சிறிது எண்ணெய் பூசிக்கொண்டால் கரை ஏற்படாது.

8.) பூக்களை கவரில் வைப்பதை விட ஒரு டைட் டப்பாவில் போட்டு வைக்கலாம்.

9.) வேலைக்கு செல்லும் பெண்களுக்கு காலையில் நேரம் கிடைப்பதில்லை, இதனால் கிழங்கு போன்றவற்றை முதல் நாள் இரவே வேகவைத்து கொள்ளலாம்.

10.) முள்ளங்கி சமைக்கும் போது லேசாக வதக்கி சமைத்தால், எளிதில் சளி பிடிக்காது.
1448002594 5097

Related posts

பெண்களே நீங்கள் அதிகம் கோபப்படுபவரா? அப்ப இத படிங்க!…

sangika

வெள்ளி பாத்திரங்கள் பளிச்சிட :

nathan

உங்களுக்கு தெரியுமா வீட்டில் செல்வம் பெருக வளர்க்க வேண்டிய செடிகள்???

nathan

முக்கியமான அபாயகரமான நோய்க்கு ஏசி தான் காரணமாக இருக்கிறது!

sangika

துர்நாற்றம் போக்க சிறந்த வழி! கட்டாயம் இத படிங்க!

sangika

உங்கள் சமயலைறையில் சத்துக்கள் வீணாகமல் சமைப்பது எப்படி.

nathan

டெலிவிஷன் எது ரைட் சாய்ஸ்?

nathan

உங்களுக்கு தெரியுமா பணம் கொட்டும் கை ரேகை!! 6 அறிகுறி !!

nathan

இவைகளை மறந்தும் செய்து விடாதீர்கள்

nathan