தொடைத் தசையை வலுவாக்கும் லெக் ரொட்டேஷன் பயிற்சி (side lying leg raise) தொடைத் தசை வலுவாக்கும் பயிற்சிகள் பல உள்ளன. அவற்றுள் இந்த பயிற்சி மிகவும் எளிமையானது மற்றும் வீட்டிலேயே செய்யக்கூடியது.
தினமும் 15 நிமிடம் இதற்காக ஒதுக்கினால் போதுமானது. சில பிளோர் பயிற்சிகளை செய்த பின்னர் இந்த பயிற்சியை செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். இந்த பயிற்சி செய்ய முதலில் தரையில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். இடது கையைத் தலைக்கு மேல் நீட்டி, அதன் மீது தலையை வைத்துக்கொள்ள வேண்டும்.
வலது கையை முட்டிவரை மடித்து, இடது பக்கமாக தரையில் பதிக்க வேண்டும். வலது காலை சற்று மடித்து முன்புறமாக வைக்க வேண்டும். இப்போது, இடது காலை உயர்த்தி, கடிகார முள் திசையில் மெதுவாக ஒரு சுற்று சுற்ற வேண்டும். பிறகு, எதிர்திசையில் சுற்ற வேண்டும். இது ஒரு செட். இதேபோல இரண்டு கால்களுக்கும் தலா 15 செட்கள் செய்ய வேண்டும். பின்னர் படிப்படியான எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.
பலன்கள்: தொடையின் பக்கவாட்டுத் தசைகள் வலுவடையும். அப்டக்டார் தசைகள் இறுக்கம் அடைந்து கொழுப்புகள் கரையும்.