28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
1452688764 5334
சைவம்

கலவை காய்கறி அவியல் செய்வது எப்படி?

தேவையானப் பொருட்கள்:

வாழைக்காய் – 1
முருங்கக்காய் – 1
அவரைக்காய் – 5
பச்சை மிளகாய் – 2
காரட் – 1
உப்பு – 1/2 ஸ்பூன்
தயிர் – 1 கப்
தண்ணீர் – தேவைக்கேற்ப

அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:

தேங்காய் – 1 மூடி (துருவியது )
சீரகம் – 1 டீஸ்பூன்
பூண்டு – 2 பல்
மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:
1452688764 5334
மேற்குறிப்பிட்டுள்ள காய்கறிகள் அனைத்தையும் நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

தேங்காய், சீரகம், பூண்டு, மஞ்சள் பொடி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும்.

அரிந்து வைத்துள்ள காய்கறிகள் மற்றும் அரைப்பினை ஒரு கடாயில் வைத்து தேவைக்கேற்ப தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.

காய்கறிகள் நன்றாக வெந்த பின்னர் தயிர் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

கடைசியாக தேங்காய் எண்ணெய் விட்டு கிளறி இறக்க வேண்டும். சுவையான அவியல் தயார்.

Related posts

சைவ பிரியர்களுக்கான காளான் சாதம்

nathan

சத்து நிறைந்த கம்பு பருப்பு சாதம்

nathan

உருளைக்கிழங்கு குருமா

nathan

இஞ்சி குழம்பு

nathan

கத்தரிக்காய் மசியல்

nathan

சுவையான காளான் ரோஸ்ட்

nathan

நாண் ரொட்டி!

nathan

கடலை புளிக்குழம்பு

nathan

எலுமிச்சை சாதம்

nathan