23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
4 face 1572
முகப் பராமரிப்பு

முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்கனுமா? இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!

முகத்தில் உள்ள கொழுப்பைக் குறைப்பது என்பது பலருக்கு மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்றாகும். ஆனால் இதை நீங்கள் எளிதான முறையில் குறைக்கலாம்.

சில பயிற்சிகள் இதற்கு பெரிதும் உதவும். அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்குமா? இந்தப் பயிற்சிகளில் ஒன்றைச் செய்தால் போதும்

முக பகுதியில் உள்ள கொழுப்பை விரைவாக குறைக்க முதல் வழி வாயின் கீழ் பகுதியை முன்னும் பின்னுமாக அசை போடுவது தான். முன்னும் பின்னுமாக தாடையை அசைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக இவற்றில் உள்ள கொழுப்புகள் குறைய தொடங்கும். தினமும் இந்த பயிற்சியை 8 முதல் 10 முறை செய்து வரலாம்.

அவ்வப்போது நாக்கால் மூக்கை தொடுவது போல செய்து வந்தால் இந்த கொழுப்பு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இந்த பயிற்சியை விளையாட்டாக 5 முறை செய்து வரலாம்.

உங்களது கழுத்தை இடது புறமாக திருப்பி வாயின் கீழ் தாடையை முன்னும் பின்னுமாக அசைத்து வரவும். இவ்வாறு செய்வதால் முக பகுதியில் உள்ள கொழுப்புகள் குறையும். அத்துடன் தசைகளும் இறுக்கமாக மாறும். இதை தினமும் 5 முறை செய்து வரலாம்.

உங்களை விட உயரமாக இருக்கும் ஒருவருக்கு மேல் நோக்கிய படி முத்தம் கொடுப்பது போல தொடர்ந்து 5 முறை செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் 5 முதல் 8 நொடிகள் அதே நிலையில் இருத்தல் வேண்டும். இது சிறந்த பலனை தரும்.

உங்களது வாயை குவித்து வைப்பது போல செய்து வந்தால் அருமையான பலனை தரும். அதாவது, தொடர்ந்து 5 நொடிகள் உங்களது வாயை குவித்து வைக்க வேண்டும். இதை தொடர்ந்து 6 முறை ஒரு நாளைக்கு செய்து வரவும்.

வாயை நன்றாக திறந்து சிரிக்க வேண்டும். இது தான் ஆறாவது பயிற்சி முறை. இவ்வாறு சிரித்த படி 3 நொடிகள் இருந்தால் போதும். இந்த பயிற்சியை 5-8 முறை செய்து வருவது சிறந்த பலனை தரும்.

கன்னத்து பகுதியை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்ற வேண்டும். இந்த பயிற்சியை 5 முறை செய்து வரலாம். இதுவும் முகத்தில் உள்ள கொழுப்பு பகுதிகளை குறைக்க கூடிய எளிமையான பயிற்சி முறையாகும்.

Related posts

உங்களுக்கு ஹார்மோன் மாற்றத்தால் ஏற்பட கூடிய பருக்களை மறைய செய்யணுமா..?அப்ப இத படிங்க

nathan

தெரிஞ்சிக்கங்க…பழங்களை பயன்படுத்தி ஃபேஷியல் செய்வது எவ்வாறு….?

nathan

அத்திப்பழத்தை வைத்து எல்லா முக பிரச்சினைகளையும் சரி செய்ய இத படிங்க!…

sangika

சாக்லேட் எப்படி உங்களுக்கு சூப்பர் அழகை தரும் தெரியுமா?

nathan

கருவளையத்தினால் கவலையாக இருக்கிறீர்களா? இதோ அருமையான டிப்ஸ்

nathan

உங்களுக்கு பைசா செலவில்லாம உடனே வெள்ளையாகணுமா? அப்ப இத படிங்க!

nathan

கொரிய பெண்கள் ரொம்ப அழகாக இருக்க ‘இந்த’ விஷயங்கள தான் தெரியுமா?

nathan

முதுமையை தள்ளிப்போடும் தேங்காய் எண்ணெய் மசாஜ்

nathan

சிவப்பு சந்தனத்தை முகத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan