26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
1 16303
மருத்துவ குறிப்பு

இதயத்துடிப்பு கடுமையாக உயர்ந்தால்…. உடனே என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

மிகுந்த அதிர்ச்சி தரக்கூடிய சம்பவங்களைக் கேட்டாலோ அல்லது நேரில் பார்த்தாலோ பலருக்கு இதயத் துடிப்பு அதிகரித்துவிடும். துடிப்பு அதிகரிக்கும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

இப்படி இதயப் படபடப்பிற்கு உடனே மருத்துவ சிகிச்சை செய்வது நல்லது.ஆனால் அதற்கு முன்பாக சில எளிமையான முதலுதவிகளையும் மேற்கொள்வது நல்லது.

இதயத் துடிப்பு அதிகரிக்க பொதுவான காரணங்கள்

மாரடைப்பு
ஏட்ரியல் (இதய மேலறை சுருக்கம்)
தைராய்டு
ஒழுங்கற்ற இதயத் துடிப்பு
இதயத் துடிப்பை கட்டுப்படுத்தும் சில வீட்டு வைத்தியங்கள்
இதயத் துடிப்பை கட்டுப்படுத்தும் சில வீட்டு வைத்தியங்கள்
சில உணவுகளை தவிர்க்கவும்

இதயம் படபடக்க ஆரம்பித்ததும் தூண்டக் கூடிய விஷயங்களை முதலில் நிறுத்துவது புத்திசாலித்தனம். இதயத் துடிப்பை மேலும் அதிகரிக்கும் மருந்துகள், புகையிலை பொருட்கள், இருமல், சளி, பசியை அடக்கக்கூடிய மருந்துகள், காஃப்பைன், இரத்த அழுத்த மருந்துகள், காற்றேற்றப்பட்ட பானங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இவை இதயத் துடிப்பை தூண்டி படபடப்பை அதிகரித்து விடும். எனவே உங்கள் இதயத் துடிப்பு அதிகரிக்கும் போதெல்லாம் இந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிருங்கள்.

நீர்ச்சத்தை பராமரிக்க வேண்டும்

இதயத் துடிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு நீரிழப்பு ஒரு பொதுவான காரணமாகும். உடலில் நீரிழப்பு குறைவாக இருந்தால் இரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்தில் அழுத்தம் உண்டாகிறது. இதுவே பின்னர் அதிகரித்த இதய துடிப்புக்கு வழிவகுத்துவிடும். எனவே இதை தடுக்க தினமும் போதுமான அளவு குடிநீரை குடிக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதற்கு முதலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

அறிகுறிகள்
அறிகுறிகள்
அடர்ந்த மஞ்சள் நிற சிறுநீர்

உலர்ந்த வாய்

ஒழுங்கற்ற இதயத் துடிப்பு

தலைவலி

சோர்வு

வறண்ட சருமம்

பயிற்சிகளை மேற்கொள்ளவும்

நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது மன அழுத்தம். இது இதயத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. நீங்கள் அதிக மன அழுத்தத்தில் இருப்பது உங்கள் இதயத் துடிப்பை அதிகரித்து விடும். எனவே மன அழுத்தத்தை விடுத்து உங்கள் மனதை ரிலாக்ஸ் செய்ய சில பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம்.

ஆழ்ந்த சுவாசம்

தியானம்

யோகா

உடற்பயிற்சிகள்

பொழுதுபோக்குகள்

நடைப்பயிச்சி

உங்களை புதுப்பிக்க முயற்சி செய்தல்

செல்லப் பிராணிகளுடன் விளையாடுதல்

புத்தகம் படித்தல் போன்றவை

மூளை நரம்பை தூண்டுதல்
மூளை நரம்பை தூண்டுதல்
இதயத்தையும் மூளையையும் இணைக்க ‘வாகஸ்’​​என்ற நரம்பு உள்ளது. இதன் மூலம் அதிகரித்த இதய துடிப்பை மூளையின் தூண்டுதல் மூலம் கட்டுப்படுத்த முடியும். எனவே இந்த இணைப்பு நரம்பை தூண்ட சில பயிற்சிகள் உள்ளன. *

கடினமாக இருமுங்கள்

வாந்தி எடுப்பது போன்று கடினமான சத்தம் விடுதல்

உங்கள் மூச்சைப் பிடித்து, பின்னர் வயிற்றை நோக்கித் தள்ள வேண்டும்

முகத்தில் ஜில்லென்ற நீரை சடாரென்று தெளித்து கழுவுங்கள்

குளிர்ந்த நீரில் குளியுங்கள்

ஓம் என்ற மந்திரத்தை 1008 தடவை உச்சரியுங்கள். இதனால் மன அழுத்தமும் ஓடி விடும் இதயப் படப்படப்பும் குறைந்து விடும்.

மது அருந்த வேண்டாம்

ஆல்கஹால் எந்த வகையிலும் உங்கள் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. எனவே இதை தவிர்ப்பது தான் உங்கள் உடம்பிற்கு நல்லது. சிறிதளவு மது அருந்துவது கூட இதயப் படபடப்பு உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே இந்த ஆல்கஹாலை தவிர்ப்பது ஏட்ரியல் ஃபைப்ரிலேஷனை தடுக்க முடியும் பயன்படுகிறது.

எலக்ட்ரோலைட்களை சமநிலையில் வையுங்கள்

நமது உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் சமநிலையில் இருந்தால் தான் மற்ற உடல் பாகங்களுக்கு தங்கு தடையின்றி சிக்னல் செல்ல முடியும். இந்த எலக்ட்ரோலைட்கள் சமநிலை என்பது இதய செயல்பாட்டுக்கு மிகவும் முக்கியமானது. அப்படி முக்கியமான எலக்ட்ரோலைட்டுகள் சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் ஆகியவை.

எலக்ட்ரோலைட்டுகளை சமநிலையில் வைக்க உதவும் உணவுகள்

சோடியம் : உப்பு, சூப்கள், இறைச்சிகள்

பொட்டாசியம் : வாழைப்பழம், அவகேடோ, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கீரைகள்

மக்னீசியம் : மீன், நட்ஸ், அடர்ந்த பச்சை இலைக் காய்கறிகள்

கால்சியம் : பால் பொருட்களான பால், யோகார்ட், காட்டேஜ் சீஸ் (பன்னீர்) சில சமயங்களில் மருத்துவர்கள் உங்களுக்கு எலக்ட்ரோலைட் மாத்திரைகளை வழங்குவர். அது உங்களுக்கு உதவியாக இருக்கும். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாகவே எடுத்துக் கொள்ளாதீர்கள்.

Related posts

மாமியார் vs மருமகள்: உளவியல் சொல்லும் தீர்வு என்ன ?

nathan

மர்ம & விஷ காய்ச்சல் ஏன் வருகிறது ?

nathan

உங்களுக்கு இப்படி வர்ற கால் ஆணிய ஆரம்பத்துலயே எப்படி சரி பண்ணலாம்?

nathan

நாட்டு வைத்திய கருத்தரித்த பெண்களுக்கு

nathan

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் இந்த பூ….இருந்த தடமே தெரியாதாம்

nathan

நெஞ்சு சளியை விரட்டும் நிரந்திர வீட்டு வைத்தியம்

nathan

நகம் கூட நம்மை பற்றிச் சொல்லுமாம்..தெரியுமா..??

nathan

தெரிஞ்சிக்கங்க…மாரடைப்பை ஏற்படுத்தும் இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை இயற்கையாக கரைக்கலாம்!

nathan

ஐந்தே நிமிடங்களில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமா? – இந்த சைனீஸ் மசாஜ் போதும்!

nathan