26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
1633491600 1633491599393
மருத்துவ குறிப்பு

இஞ்சியில் மருத்துவ குணங்கள் அதிகம்!தெரிந்துகொள்ளுங்கள் !

இஞ்சிச் சாற்றை பாலில் கலந்து சாப்பிட்டு வர வயிற்று நோய்கள் குணமாகி, நோய்கள் நீங்கும். மலச்சிக்கல், உடல்சோர்வு, நெஞ்சு வலி, இஞ்சியை கழுவி பச்சடி சாப்பிட வேண்டும்.

இஞ்சியை சுட்டு சாப்பிடுவதன் மூலம் பித்த, கப நோய்கள் நீங்கும். இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிடுவதன் மூலம் பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் என்பன நீங்கும். அதேவேளை, சுறுசுறுப்பும் ஏற்படும்.காலையில் இஞ்சி சாறில் உப்பு கலந்து மூன்று நாட்கள் பருகுவதன் மூலம் பித்த தலைச்சுற்று மற்றும் மலச்சிக்கல் தீரும். உடம்பும் இளமை பெறும்.

பத்து கிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை என இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும். இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்தி வெந்நீர் குடித்துவர தொந்தி கரையும். இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.

இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு கொதிக்க வைத்து அந்த நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

Related posts

எந்த உணவு சாப்பிட்டாலும் புளிப்புத் தன்மையுடன் மேலே ஏப்பம் வருகிறது. இதை acid reflux என்கிறார்கள். இ…

nathan

தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க இந்த ஒரே ஒரு கீரை மட்டும் போதும்!…

sangika

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் இரத்த சுழற்சி குறைவாக இருக்குனு அர்த்தம்…

nathan

தலையிலிருக்கும் பேனை ஒழிக்க சில எளிய வீட்டுக் குறிப்புகள்!

nathan

மனநோயின் அறிகுறிகள்

nathan

பெண்கள் கர்ப்பக் காலத்தில் பயன்படுத்த கூடாத வீட்டு உபயோகப் பொருட்கள்!

nathan

அலுவலக பணிகளில் பெண்களின் பங்கு

nathan

தைய்ராய்டு பிரச்சினையா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… இரத்த சோகை குறித்து பலருக்கும் தெரியாத சில விஷயங்கள்!

nathan