26.7 C
Chennai
Friday, Mar 13, 2026
22 62a2700590554
Other News

சுவையான காராமணி வடை – செய்வது எப்படி

காரவடை என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவாகும். ஹோட்டல் போல் சுவையாக சுடுவது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான விஷயங்கள்

வெள்ளைக் காராமணி – 1 கப்

வரமிளகாய் – 2

சோம்பு – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – சிறிது துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்

பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை

உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை விளக்கம்

முதலில் காராமணியை நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவேண்டும். அதன் பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, அத்துடன், வரமிளகாய், சோம்பு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பௌலில் போட்டு, அதில் பெருங்காயத் தூள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து, கறிவேப்பிலையும் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள கலவையை உருண்டைகளாக பிடித்து லேசாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சூப்பரான சுவையில் காராமணி வடை தயார்.

Related posts

லியோ படத்தை சென்னையில் பார்த்த திரிஷா

nathan

டெல்லி மகளிர் ஆணைய உத்தரவின் பேரில் காவல்துறை நடவடிக்கை!

nathan

ஆண்டியின் உறவால் சினிமாவை விட்டு விலகினாரா கரண்?

nathan

மாசி மாத ராசி பலன் 2025 : 12 ராசி

nathan

மீன் வியாபாரி வாழ்வை மாற்றிய லாட்டரி சீட்டு!

nathan

ஆளவந்தான் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது..!நடைபெறும் ரீ-ரிலீஸ் வேலைகள்…

nathan

உலகின் 8வது அதிசயமாக அங்கோர் வாட் கோயில்

nathan

உல்லாசத்திற்கு அழைத்த டிரைவரை அடித்து கொன்ற திருநங்கை..

nathan

பாடகி சுசித்ரா மீது மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் வழக்கு…

nathan