25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
31 1427778197 madurai lady delivers quadrat in delivery2 600
மருத்துவ குறிப்பு

குறைமாதக் குழந்தைகள்

குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?
நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறோம்.

பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண்களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தாலும், தாய்க்கு நீண்ட கால நோய்களான இதய பாதிப்பு, சிறு நீரக பாதிப்பு மற்றும் நீரிழிவு நோய் இருந்தாலும், பொருளாதார ரீதி யாக பின் தங்கிய நிலையில் இருந்தாலும், உடலில் எடை மற்றும் உயரம் குறைவாக இருந்தாலும், கர்ப்ப காலங்களில் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டாலும், அதிக வேலை மற்றும் மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களாலும் குறைமாதக் குழந்தைகள் பிறக்கின்றன.

ஒரே பிரசவத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறக்கும் போதும் இது போன்ற குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. ஆயிரம் கிராமிற்கு குறைவாக பிறக்கும் குழந்தைகள், 27 முதல் 28 வாரங்களில் பிறக்கும் குழந்தைகளை ப் பாதுகாக்க இங்குபேட்டர், வென்டிலேட்டர் மற்றும் சர்பக்டென்ட் சிகிச்சைகளைப் பயன்படுத்தி உயிர் பிழைக்க வைக்க முடியும். இந்தக்கருவிகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவை. குழந்தை பிறந்தவுடனேயே தாய்ப்பால் அருந்த முழுத் தகுதி அடைகிறது. ஒருவேளை சிசேரியன் செய்த தாய்க்கு, தாய்ப்பால் உடனடியாக கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் எவ்வளவு சீக்கிரம் கொடுக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.

நாள் ஒன்றுக்கு எட்டு முதல் பத்து முறை தாய்ப்பாலை கொடுப்பதால் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிறந்த குழந்தைகள், பாலை மட்டும் குடிக்காமல், காற்றையும் சேர்த்துக் குடிப்பதால் வாந்தி ஏற்படுகிறது. அதிக பாலை அருந்துவதாலும், அருந்திய பால் உணவுப் பாதையில் இருந்து மீண்டும் வாய்வழியே திரும்புவதாலும் வாந்தி ஏற்படுகிறது. இதனால் பயப்படத்தேவையில்லை, குழந்தைகளின் எடை குறையாது. ஆனால், தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால் மருத்துவரை அணுகி உணவுப் பாதை அடைப்பு மற்றும் மூளைக் காய்ச்சல் உள்ளதா என்பதை பரிசோதித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

பிறந்த குழந்தைகள் தினமும் ஐந்து முறைக்கு மேல் மலம்கழிக்கும்.
சில குழந்தைகள் பால் குடித்தவுடன் மலம் கழிக்கும். ஒரு சில குழந்தைகள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மலம் கழிக்கும். இவை அனைத்தும் இயற்கையான செயலே. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 72 மணி நேரம் மலம் கழிக்கவில்லை என்றால், மருத்துவரின் அறிவுரைப்படி தைராய்டு பிரச்னை மற்றும் மலக்குடலில் சுருக்கம் போன்ற பிரச்னைகள் உள்ளதா என்பதை அறிந்து சிகிச்சை தர வேண்டும். பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் பசு சீம்பால்..

பசுவின் சீம்பாலைக் கொண்டு பன்றிக் காய்ச்சலை குணப்படுத்த முடியும்
”கொலஸ்ட்ரம் எனப்படும் சீம்பாலில் இருந்து, நானோ முறைப்படி கொழுப்பை ஃபில்டர் செய்து எடுத்து விடுகிறோம். நானோ பெப்டைடு என்ற இந்தக் கலவைக்கு ‘ராதா – 108’ என பெயரிட்டு இருக்கிறோம். இந் த திரவத்தை நோய் பாதித்த வரின் வாயில் ஊற்றும்போது அது இதயத்திற்குச் சென்று உடலில் மற்ற பாகங்களுக்கும் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணுகிறது”

கர்ப்பிணிகளே! மீன் சாப்பிடுங்கள்!கர்ப்பிணிப் பெண்கள் மீன்வகை உணவுகளைச் சாப்பிட்டால், பிறக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்கர்ப்ப காலத்தில் மீன்வகை உணவுகளை அதிகம் சாப்பிட்டால், பிற க்கும் குழந்தைகள் அதிக மூளை வளர்ச்சியுடனும், மூளை சம்பந் தமான நோய்கள் தாக்காமலும் இருக்கும் என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த ஆய்வானது கர்ப்பிணிகளிடமும், அவர்களுக்கு குழந்தை பிறந்த பின்பும் தொடர்ந்து நடத்தப்பட்டது.

அதில், கர்ப காலத்தின்போது அதிக மீன் உணவுகளைச் சாப்பிட்ட தாய்மார்களின் குழந்தைகள் அதிக புத்திக்கூர்மையுடனும் அவர்களது கை மற்றும் கண் இணைந்து செயல்படுத்தும் தகவல் தொடர்பும் மிகச்சிறப்பாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குக் காரணமான ‘ஒமேகா-3 ஃபாட்டி ஆசிட்’ மீன்களில் அதிகமாக இருப் பதுதான். கர்ப்பிணிப் பெண்களி ன் 32 வாரகர்ப்பகாலத்தில் 340 கிராமிற்கு குறைவாக மீன் உட்கொண்ட கர்ப்பிணிக் குழந்தைகளின் புத்திக்கூர்மை சற்றுகுறைவாகவே இருந்தது.

அதேநேரம் குழந்தைகளின் உடம்பில் ‘ஒமேகா-3 ஃபாட்டி ஆசிட்’ அள வுக்கு அதிகமாக இருந்தால் குழந்தைகளின் புத்திக் கூர்மை மழுங்கவும் வாய்ப்புள்ளது! ஹீரோ டெர்மா பிக்மென்டோஸம் & புற ஊதாக் கதிர் களால் வரும் தோல் நோய் காலையில் வெளிப்படும் சூரிய வெளிச்சத்தினால் நமக்கு கால்சியம், ‘வைட்டமின்-டி’ போன்ற சத்துக்கள் கிடைக்கின்றன. அதே சமயம், சூரிய ஒளியின் மிகையான வெப்பத்தால், பல்வேறு நோய்களும் தோன்றுகின்றன. அப்படி ஏற்படும் நோய் களில் ஒன்றுதான் ‘ஹீரோடெர்மா பிக்மென் டோஸம்’.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் அமைப்பு சாதாரண மனிதர்களின் உடல் அமைப்பு போல் அல்லாமல் வேறுபட்டு இருக்கும். இது ஒரு அபூர்வ நோய். உடைகளால் மூடப்படாத இடங்களில்தான் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் படிப்படியாக தோலின் நிறம் மாறும். பின்னர் முகம் மற்றும் தோலின் கை கால்களில் அருவருக்கத் தக்க வகையில், திட்டுத் திட்டாக கரும்புள்ளிகள் தோன்றும். அதைத் தொடர்ந்து கொப்புளங்கள் ஏற்படும். இவை கடுமையான வலியை ஏற்படுத்தும். சில நாட்களில் அவை மறைந்து, தோல் நலிவடைந்து விடும். அப் போது, அந்தப் பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் விரிவடையும். இந்த நிலையில் சூரிய ஒளி பட நேர்ந்தால், பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.

இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு பகல் நேரத்தில் வெளிச்சத் தைப் பார்க்க முடியாமல் கண்களில் கூச்சம் எடுக்கும். இவர்களுக்கு சூரிய ஒளி தாக்கத்தினால் கருவிழிப்படலத்தில் அழற்சியும் ஏற்படலாம். இந்த ஹீரோடெர்மா பிக்மென்டோஸம்’ நோயினால் பாதி க்கப்பட்டவர்கள் தங்களது தோலை சூரிய ஒளி படாத வகையில் பாதுகாத்துக் கொள்ள வே ண்டும். மேலும், இரவு நேரங்களில் மட்டுமே வெளியே வரவேண்டும். தோலில் புடைப்பு மற்றும் பாதிப்பு உள்ள வர்களுக்கு சூரிய ஒளியில் இருந்து வெளியேறும் புற ஊதாக் கதிர் களால் தோல் புற்றுநோய்கூட ஏற்படலாம்.
31 1427778197 madurai lady delivers quadrat in delivery2 600

Related posts

கோபம் குறைக்க உதவும் 14 வழிமுறைகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா ஞாபக மறதி ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களின் சுவாச பிரச்சனையை போக்கும் மீன் எண்ணெய்

nathan

உங்கள் வீட்டில் ‘ஹெல்த் கிட்’ இருக்கிறதா?

nathan

அன்று தங்கப் பல்…இன்று கோல்டு ஃபில்லிங்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மார்பக புற்றுநோய் ஏற்பட இதுவும் முக்கிய காரணம்

nathan

கண்டிப்பாக வாசியுங்க…. ரத்த நாள அடைப்பை குணமாக்கும் கைமருந்துகள்

nathan

உடலில் உங்களுக்கு தெரியுமா இரத்தகட்டி இருப்பதை வெளிப்படுத்தும் 6 முக்கிய அறிகுறிகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா கேன்சர் ஏன் வருகிறது? தடுக்க என்ன வழி?

nathan