35.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
rasi
அழகு குறிப்புகள்

இரண்டு ஆண்டுகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் யார்?

ஜூன் 5 அன்று, சனி பகவான் தனது வக்ர பெயர்ச்சியை, அதாவது பிற்போக்கு நகர்வை துவக்கியுள்ளார். அதற்கு முன் ஏப்ரல் 29ம் தேதி சனி பகவான் ராசியை மாற்றினார்.

சனி 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைந்தார். சனி 2024 வரை கும்ப ராசியில் இருப்பார். இருப்பினும், இதற்கிடையில், சில மாதங்களுக்கு, சனி மகர ராசியில் பிற்போக்கு இயக்கத்தில் நகர்வர்.

எனினும், பரவலாகப் பார்த்தால், கும்ப ராசியில் சனியின் சஞ்சாரம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த 3 ராசிக்காரர்கள் 2024 வரை அதிகப்படியான நன்மைகளை காண்பார்கள். இந்த நேரத்தில், இந்த ராசிக்காரர்களுக்கு அதிக பண வரவும், தொழிலில் அதிக முன்னேற்றமும் இருக்கும்.

மேஷம்:
மேஷ லக்னம் மற்றும் மேஷ ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி பல நன்மைகளைத் தரும். அவர்களின் வருமானம் அதிகரிக்கும். வேலை செய்பவர்களின் சம்பளம் உயரும். பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசியினருக்கு லாபம் அதிகரிக்கும். அவர்கள் பெரிய ஒப்பந்தங்களைப் பெறக்கூடிய அனுகூலமான காலமாக இது இருக்கும். பல புதிய வழிகளில் வருமானமும் உண்டாகும்.

வேலை மாற விரும்புபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். நீல ரத்தினம் அணிவதும், சனி பகவான் சம்பந்தமான பரிகாரங்களை செய்வதும் லாபத்தை அதிகரிக்கும்.

சனி வக்கிர பெயர்ச்சி! இரண்டு ஆண்டுகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் யார்?

ரிஷபம்:
ரிஷப லக்னம் மற்றும் ரிஷப ராசிக்காரர்களுக்கு 2024 வரையிலான காலம் சிறப்பாக இருக்கும். சனி கர்ம க்ஷேத்திரத்தின் வீட்டில் சஞ்சரிப்பார். இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களுக்கு நம்ப முடியாத அளவு வெற்றிகள் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும்.

ஒன்றன் பின் ஒன்றாக பல சாதனைகளை இந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு மரியாதை கிடைக்கும். கௌரவம் அதிகரிக்கும். வியாபாரிகளும் ஆதாயம் அடைவார்கள். புதிய யோசனைகளில் ஈடுபடுவதன் மூலம் அதிக லாபம் ஈட்டுவீர்கள்.

சனி வக்கிர பெயர்ச்சி! இரண்டு ஆண்டுகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் யார்?

தனுசு:
தனுசு லக்னம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி வரப்பிரசாதமாக அமையும். அனைத்திலும் வெற்றி கிட்டும். தைரியம், வீரம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை இந்த காலத்தில் அதிகரிக்கும். இது உங்களுக்கு வேலையில் வெற்றியைத் தரும்.

பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள். தொழிலதிபர்களும் சிறப்பாகச் செயல்படுவார்கள். எதிரிகளை வெல்வதற்கான சரியான தருணமாக இது இருக்கும்.

 

Related posts

கன்னம் தொய்வடைந்து இருப்பதை, கழுத்தில் உள்ள சுருக்கங்களை எல்லாம் கண்டு ஒரு நிமிடமாவது மனம் கலங்கி இருப்பீர்கள். எப்படி மீளலாம்

nathan

எவ்வாறு முழுமையாக இயற்கை முறையில் ஹார்மோன்களின் மாற்றங்களினால் உண்டாகும் முகப்பருக்களை போக்கலாம்….

sangika

ஆயிலி ஸ்கின் பிரச்னை.. ஆரஞ்சை 3 விதமாக பயன்படுத்தலாம்.

nathan

முகப் பொலிவு பெற

nathan

நம்ப முடியலையே…ஒரு வயது குட்டிப்பாப்பாவாக நயன்தாரா! புகைப்படம்..

nathan

ஃபேஷியல் செய்து கொள்ளக்கூடாதவர்கள் யார் யார் தெரியுமா?

nathan

பூக்கள் தரும் புது அழகு

nathan

நீங்களே பாருங்க.! லண்டனில் வசிக்கும் ஈழப்பெண்ணை மணந்த நடிகர் மணிவண்ணன் மகன்!

nathan

முகத்தில் பருக்களின் கருமையான தழும்புகள் இருந்து, அசிங்கமான தோற்றத்தைக் கொடுத்தால் எப்படி மீளலாம்

nathan