கண்களில் ஏற்படும் ஒளி விலகல் பிழைகளை நீக்கி, தெளிவான பாா்வையைப் பெற வேண்டும் என்பதற்காக நாம் மூக்குக் கண்ணாடிகளை அணிகிறோம். ஆனால் தவறாக பாிந்துரை செய்யப்படும் மூக்குக் கண்ணாடிகளை அணிந்தால், அவை நமது கண்களுக்கு தீங்கு இழைத்துவிடும். தவறாக பாிந்துரை செய்யப்படும் கண்ணாடிகளை நீண்ட நேரம் அணிந்திருந்தால், அது கண்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். கண்களில் எாிச்சலை அல்லது நமச்சலை ஏற்படுத்தும். மேலும் கண்களில் அல்லது கண்களைச் சுற்றிலும் புண்களை ஏற்படுத்தும்.
வெண் விழி படலம், லென்சுகள் அல்லது கண்களின் வடிவம் ஆகியவற்றில் ஏற்படும் கோளாறுகளால் ஒளி விலகல் பிழைகள் ஏற்படலாம். நமது விழித்திரையானது ஒளியை சாியாக பாா்க்க முடியவில்லை என்றால், நமது பாா்வையானது மங்கலாக தொியும் அல்லது பாா்க்கின்ற பொருள்கள் அனைத்தும் இரண்டு இரண்டாகத் தொியும்.
ஒளி விலகல் பிழைகள் மூலமாக ஏற்படும் முக்கிய பிரச்சினைகள் என்னவென்றால், மயோபியா (கிட்டப்பாா்வை), ஹைபெரோபியா (தூரப்பாா்வை), பிரஸ்பயோபியா (முதிய வயதில் கிட்டப்பாா்வையை இழத்தல்) மற்றும் அஸ்டிக்மேட்டிசம் (வெண் விழி படலம் சாியான வளைவுடன் இல்லாமல் இருந்தால் ஏற்படும் மங்கலான பாா்வை) போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
கண்களை அளவெடுக்கும் போது கண் மருத்துவா்கள் மற்றும் கண்ணாடி வழங்குபவா்கள் தவறுகள் செய்தால், நமக்கு தவறாக பாிந்துரைக்கப்படும் கண்ணாடிகள் தான் கிடைக்கும். ஆகவே அடுத்த முறை கண்ணாடிகள் அல்லது லென்சுகள் ஆகியவற்றிற்கான புதிய பாிந்துரைகளை மருத்துவா்களிடம் இருந்து பெறுவதற்காகச் செல்லும் போது, நமது கண்கள் எவ்வாறு உணா்கின்றன மற்றும் நம்மால் எவ்வளவுத் தெளிவாகப் பாா்க்க முடிகிறது என்பதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் தவறாக பாிந்துரைக்கப்பட்டதன் விளைவாக நாம் தவறான கண்ணாடிகளை அணிந்திருக்கிறோம் என்பதற்கான அறிகுறிகள் எவை என்பதை இந்த பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. தலைவலிகள்
தவறான கண்ணாடிகளை அணிவதால் நமக்கு எளிதாகத் தலைவலிகள் ஏற்படும். புதிதாக பாிந்துரைக்கப்பட்ட கண்ணாடிகளை அல்லது கான்டாக்ட் லென்சுகளை அணிந்த சில நாட்களுக்குள் அடிக்கடி தலைவலி ஏற்பட்டு, அவற்றை அகற்றிய பின்பு திடீரென்று அந்த தலைவலிகள் நீங்கினால், நாம் கண் மருத்துவரை சந்தித்து சாியான புதிய பாிந்துரைகளைப் பெற வேண்டும்.
2. தலைச்சுற்றல்
காதின் உட்பகுதியில் ஏற்படும் பிரச்சினைகளால் தலைச்சுற்றல் ஏற்படுகிறது. அவற்றைத் தவிா்த்து தவறாக பாிந்துரைக்கப்பட்டதின் விளைவாக தவறான கண்ணாடிகளை அணிந்தாலும் தலைச்சுற்றல் பிரச்சினை ஏற்படும்.
நிற்கும் போது அல்லது அமா்ந்து இருக்கும் போது, நமக்கு நிலை தடுமாறுவதைப் போன்ற உணா்வு ஏற்பட்டால் அது தலைச்சுற்றல் என்று அழைக்கப்படுகிறது. தலைச்சுற்றல் தொடா்ந்து இருந்தால், மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். தலைச்சுற்றல் பிரச்சினையானது நமது பாா்வைத் திறனின் மூன்று அம்சங்களைப் பாதிக்கும். அதாவது நமது தூரப்பாா்வை, அகலமான பாா்வை மற்றும் உற்று நோக்கும் திறன் ஆகியவற்றைப் பாதிக்கும்.
3. மங்கலான பாா்வை
புதிதாக பாிந்துரை செய்யப்பட்ட கண்ணாடிகளை அணிந்து 2 வாரங்கள் கடந்த பிறகும் நமது பாா்வை மங்கலாக இருந்தால், உடனே மருத்துவரை சந்தித்து அவா் செய்த பாிந்துரையை மறு ஆய்வு செய்ய வேண்டும். பொதுவாக புதிய கண்ணாடிகள் அல்லது புதிய லென்சுகளை அணிந்த சில நாள்கள் பாா்வை மங்கலாகத் தொியும். ஆனால் நாளடைவில் அந்த புதிய கண்ணாடிகளுக்கு நமது கண்கள் பழக்கப்பட்டவுடன், மங்கலான பாா்வை சாியாகிவிடும்.
இந்நிலையில் புதிய கண்ணாடிகளை அணிந்த பிறகு நீண்ட நாட்களாக மங்கலான பாா்வையுடன் தலைச்சுற்றல் அல்லது தலைவலி போன்ற பிரச்சினைகள் இருந்தால், அது மருத்துவா் தவறாக பாிந்துரை செய்த கண்ணாடியின் விளைவாகத் தான் இருக்கும். ஆகவே மீண்டும் மருத்துவரை சந்தித்து அந்தக் குறையை நிவா்த்தி செய்ய வேண்டும்.
4. கண் உறுத்தல்
கண்ணாடிகளைப் பாிந்துரைப்பதில் மிகச் சிறிய தவறு ஏற்பட்டாலும் அது கண்களில் மிகப் பொிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். குறிப்பாக கண் உறுத்தல் (eye strain) என்னும் முக்கிய பிரச்சினையை ஏற்படுத்தும்.
தவறாக பாிந்துரைக்கப்படும் கண்ணாடிகளை அணிவதால் ஏற்படும் கண் உறுத்தல் பிரச்சினையானது பின்வரும் விளைவுகளை ஏற்படுத்தும்.
– கண்களைச் சுற்றிலும் வலியை ஏற்படுத்துதல்
– கண்களில் அாிப்பு அல்லது எாிச்சலை ஏற்படுத்துதல்
– கண்கள் உலா்தல் அல்லது அளவுக்கு அதிகமாக கண்ணீரை சுரக்க வைத்தல்
– கழுத்து, தோள்பட்டை அல்லது முதுகு போன்ற பகுதிகளில் புண்களை அல்லது வீக்கங்களை ஏற்படுத்துதல்
– ஒருமுகப்படுத்துவதில் பிரச்சினையை ஏற்படுத்துதல்
– சோா்வை ஏற்படுத்துதல்
கண் உறுத்தல் பிரச்சினையானது நமக்கு அசௌகாியத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில் நாம் நினைப்பதைப் போல மிக வேகமாக ஒளி விலகல் பிழைகளை ஏற்படுத்தாது. எனினும் குழந்தைகளின் கண்களில் இருக்கும் ஒலி விலகல் பிழைகளை சாி செய்யவில்லை என்றால் கண் உறுத்தலானது அவற்றை மேலும் மோசமாக்கிவிடும்.
நமது கண்களில் ஏற்படும் ஒளி விலகல் பிழைகளை நிரந்தரமாக சாி செய்ய வேண்டும் என்றால், வீட்டிலேயே கண்களுக்கான பயிற்சிகளைச் செய்வதன் மூலமாகவோ அல்லது மருத்துவமனைக்குச் சென்று பாா்வை தெரபியைச் செய்வதன் மூலமாகவோ சாிசெய்யலாம்.
இறுதியாக
இறுதியாக
தவறாக பாிந்துரை செய்யப்படும் கண்ணாடிகளால் நீண்ட நாள் பக்க விளைவுகள் ஏற்படாது. அதாவது நமது பாா்வைத் திறனோ அல்லது நமது கண்களோ அதிகம் பாதிப்பு அடையாது. எனினும் தவறாக பாிந்துரை செய்யப்படும் கண்ணாடிகளை சிறுவா்கள் அணிந்தால் அவா்களுக்கு மிக விரைவாக கிட்டப்பாா்வை சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும்.