25 C
Chennai
Thursday, Jun 13, 2024
202002
Other News

மிதுன ராசி பெண்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

மிதுன ராசி என்பது புதன் ராசி ஆகும். இதனை ஆங்கிலத்தில் மெர்க்குரி என்பர். இது ஓர் இரட்டை ராசி. இரண்டு வகையான பண்புகள் இந்த ராசிக்காரரிடம் இருப்பது சகஜம். மே மாதம் 15 முதல் ஜூன் 14 வரை பிறந்தவர்கள் சூரிய ராசி என்ற அடிப்படையில் மிதுன ராசி ஆவர். ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசி மிதுனமாக இருந்தாலும் அவர்கள் மிதுன ராசிக்காரர் ஆவர். பொதுவாக மிதுன ராசி பெண்ணின் மூளையில் ஏராளமான அறிவு சார்ந்த விஷயங்கள் நிரம்பி இருக்கும். விசுவாசமாக இருப்பார். ஏமாற்றும் குணம் கிடையாது. சுதந்திரமாக இருக்க விரும்புவார். அறிவாளிகளுடன் இருக்க விரும்புவார். அவர்களின் பேச்சை, கருத்தை விளக்கத்தைக் கேட்டு ரசிப்பார். (டிவியில் பட்டிமன்றமும், செய்தி சேனலும் டாக் ஷோவும் இவர்களின் ஃபேவரைட்), ஆண்களிடம் பந்தயம் கட்டும் பழக்கத்தை ரசிப்பார். பேசி மயக்குவதை ஒரு விளையாட்டாகச் செய்வார்.

அதில் சீரியஸ் லவ் எல்லாம் இருக்காது. எப்போதும் நண்பர்களுடன் நல்ல உறவு வைத்திருப்பார். முடிந்த வரை வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் செய்வார். குடும்பத்திலும் நல்லது கெட்டதுகளில் கலந்து கொண்டு தன்னுடைய பங்கையும் பணியையும் சிறப்பாக செய்வார். வெடுக் தொடுக் என்று பேசமாட்டார். கவுன்சலிங் செய்வதில் கெட்டிக்காரர். குடும்ப சச்சரவுகளைப் பேசித் தீர்த்து வைப்பார். சுறுசுறுப்பாக இருப்பார். ஏதேனும் வேலை செய்து கொண்டோ படித்துக் கொண்டோ தான் இருப்பார். அடுத்தவருக்கு வேலை பார்க்க மாட்டார்; சுயநலவாதி; தனக்கு ஆதாயம் இல்லாத எந்த வேலையையும் யாருக்காகவும் செய்யமாட்டார்.

 

இவர் லட்சியவாதியோ ஊழியம் செய்பவரோ கிடையாது. படிப்போ வேலையோ காதலோ கல்யாணமோ எதுவாக இருந்தாலும் நிதானமாக யோசித்து முடிவெடுப்பார். காடுமேடெல்லாம் சுற்ற ஆசைப்படுவார். அட்வென்ச்சர் விரும்பி. பார்க்க ஒல்லியாக இருப்பார். ஆனால் சிரித்த முகத்துடன் மலை ஏறுவார்; ஸ்கூப் டிவிங் அடிப்பார். மாரத்தான் ஓடுவார். விளையாட்டு வீராங்கனை கிடையாது. புதியவற்றைச் செய்வதில் ஆர்வமும் மனோ தைரியமும் பிரச்னை வந்தால் சமாளிக்கும் அறிவுக்கூர்மையும் உடையவர். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மிதுன ராசிப் பெண் அவசியம். அவர் பேச்சைக் கேட்டு நடப்பது அந்த வீட்டினருக்கு நல்லது. இரட்டைப் பண்பு மிதுன ராசிக்காரருக்கு ஆணுக்குரிய குணமும் பெண்ணுக்குரிய குணமும் சேர்ந்து இருக்கும்,.

 

துணிச்சலாகவும் இருப்பார் நளினமாகவும் இருப்பார். உடல்வலிமை மனவலிமை இரண்டும் இருக்கும்; ஆனால் இவை இருப்பது போல காட்டிக்கொள்ள மாட்டார். கராத்தேயில் ப்ளாக் பெல்ட் வாங்குவார். கர்நாடக இசைப்பாடல்களும் பாடுவார். ஒரு இடத்தில் பேன்ட் ஷர்ட் என்று வருவார். மறு இடத்துக்குப் பாவாடை தாவணியுடன் வருவார். இரண்டு இடங்களிலும் இடத்துக்கேற்றபடி தனது பேச்சு சிரிப்பு ஆகியவற்றை தக்கமைத்துக் கொள்வார்.

 

அரசியலும் பேசுவார் ஆன்மிகமும் பேசுவார். நகைச்சுவை உணர்வு மிக்கவர். சிலேடையாகவும் இரட்டை அர்த்தத்திலும் பேச வல்லவர். இவரது கண்கள் அழகாக சிரிக்கும். இதழ்க் கடையோரத்தில் ஒரு புன்னகையை பதுக்கி வைத்திருப்பார். அடிக்கடி அவரது உதடுகளில் ஒரு ரகசியப் புன்னகை ஜொலிப்பதைக் காணலாம். நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார். அவ்வப்போது ஒரு ஏளனப்புன்னகை தெறிக்கும். இவரது கோபத்தையும் வெறுப்பையும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது. சகித்துக்கொண்டு சாந்த சொரூபியாக வலம் வருவார்.

மனநிலை

மிதுனராசிப் பெண்கள் உணர்ச்சி வசப்பட மாட்டார்கள். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுப்பதில்லை. பொறுமையாக நன்மை தீமைகளை ஆராய்ந்து நல்ல முடிவு எடுப்பது பழக்கம். முடிவின் விளைவு விபரிதமானால் உடனடியாக மாற்றிக்கொள்ளவும் தயங்குவதில்லை. மாற்றங்கள் இவர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. மாற்றம் பயன் அளிக்குமா இல்லையா என்பது பற்றி மட்டுமே சிந்திப்பர். புதுமை நாட்டம் மிதுன ராசி பெண்கள் பலதுறை வல்லுனர்கள்.

 

பன்மொழி வித்தகர்

மல்ட்டி டாஸ்க் செய்வதில் கெட்டிக்காரர்கள். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று கோர்ஸ்களில் சேர்ந்து படிப்பார்கள். ஒரே சமயம் இரண்டு மூன்று வருமானத்துக்கு வழிதேடிக்கொள்வர். பல இடங்களில் பகுதிநேர வேலை பார்த்து நல்ல வழியில் பணம் சம்பாதித்துச் சிக்கனமாகச் செலவு செய்து கண்ணியமாக வாழ்வதுண்டு. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதுவும் செய்வதில்லை.

கலா ரசிகை

மிதுன ராசியினர் நல்ல சங்கீத ரசிகை. ஓவியங்கள் மற்றும் படங்களை ரசித்து மகிழ்வர். நுண் கலைகளின் ரசிகை. ஆட்டங்களை விட பாடல்களை ரசிப்பதில் ஆர்வம் உள்ளவர். மிதுன ராசிப் பெண் தன்னை இளையராஜா ரசிகை, ஜேசுதாஸ் ரசிகை. பி.பி சீனிவாஸ் ரசிகை என்று வரையறை செய்துகொள்வார். தையல், பூவேலைப்பாடு போன்றவற்றில் வல்லவர். பாட்டு கேட்டுக்கொண்டே வேலை செய்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். சமையல் செய்யும் போது பாடல்களைக் கேட்டு ரசிப்பார். ஆடாமல் அசங்காமல் பாட்டு கேட்பார். சிலரைப் போல ஆட மாட்டார்கள். அமைதியாக ரசிப்பார். இவர்களுக்கு ஆயிரம் பாடல்களாவது தெரிந்திருக்கும் ஆனால் இவர்களுக்குத் தெரியும் என்பது யாருக்கும் தெரியாது.

 

அலட்டிக்கொள்ளும் பழக்கம் இல்லாதவர்கள். சிறந்த விமர்சகி. ஆடல், பாடல் தையல் கம்யூட்டர் சினிமா நாடகம் அரசியல் என எந்த தலைப்பில் பேசினாலும் அங்கு இவர்கள் தமது பங்களிப்பைச் செவ்வனே செய்வர். சுருக்கமாகவும் தெளிவாகவும் தமது கருத்துக்களைச் சில வாக்கியங்களில் அழகாக எடுத்துரைப்பர். மிகச் சரியாக தராசில் எடைபோடுவது போல அளந்து பேசுவர். விமர்சனம் செய்வர். ஆட்களில் நல்லவர் கெட்டவர் என்பதையும் சரியாக மதிப்பிடுவர். பெண் பார்க்க இவர்களை அழைத்துப் போகலாம். இடம் பார்க்க, மாப்பிள்ளை பார்க்க, வீடு பார்க்க இவர்கள் உடன் வருவது முடிவெடுக்க பேருதவியாக இருக்கும்.

மொழி விற்பன்னர்

பல் மொழி கற்பதில் ஆர்வமும் திறமையும் உடையவர். கண்ணால் பார்த்தால் கையால் செய்துவிடும் கெட்டிக்காரர். எந்த மொழிப்படத்தையும் பார்த்துப் புரிந்துகொள்வர். மொழி ஒரு வலிமையான வேலைக்காரனாக இவர்களிடம் செயல்படும். இவர்கள் கோபப்பட்டு ஆத்திரப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசுவது கிடையாது. முடியாது, பிடிக்காது என்று இவர்கள் ஒற்றைச சொல்லில் உறுதியாக தமது கருத்தை எடுத்துரைப்பர், அதுதான் இறுதி ஜட்ஜ்மென்ட். சத்தம் போட்டு பேசி ஆர்ப்பாட்டம் செய்வது கிடையாது. விவரம் போதாத கணவன்மார் அமைந்தால் இவர்களும் தமது அறிவை மூட்டை கட்டி வைத்து விட்டு ஒன்றும் தெரியாதவர் போல குடும்பம் நடத்துவர்.

 

(இது நம்ம ஆளு படத்தில் வரும் குண்டு மனைவி போல) கதை சொல்லி. மிதுன ராசிக்காரப் பெண் பத்திரிகையாளராக, கதாசிரியராக வர வாய்ப்புண்டு. சின்ன விஷயத்தைக் கூட ஊதி பெரிதாக்கிவிடுவார். ஒன் லைன் ஸ்டோரி கிடைத்தால் போதும் சீரியலே எழுதிவிடுவர். இவர்களை சுற்றி ஒரு கூட்டம் கதை கேட்டு ரசிப்பதற்காக சுற்றிக்கொண்டே இருக்கும். சிரிக்காமல் கதை சொல்லி மற்றவர்கள் வயிறு புண்ணாகும் அளவுக்கு சிரிக்க வைத்துவிடுவார். கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு சுகம் காண்பதில் ஆர்வமுடையவர். கட்டுக்கதைகளை உருவாக்குவார். கற்பனையில் புதிய புதிய கதாபாத்த்திரங்களை உருவாக்குவார். சினிமா துறையில் சிலர் இயக்குனராகவும் வரக்கூடும். சொற்பொழிவாளர், மேடைட்பேச்சாளர், பேராசிரியர், வக்கீல் போன்ற வாய்ப்பேச்சுக்கு முக்கியத்துவம் உள்ள தொழிலில் வெற்றி காணலாம். பேசி ஏமாற்றுவார். நெகட்டிவ் அம்சம் அதிகம் பெற்றிருக்கும்.

 

மிதுனராசிப் பெண்கள் சிலர் மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங், சீட்டுக்கம்பெனி, ரியல் எஸ்டேட் போன்ற நிறுவனங்களை நடத்தி வாய்ப் பேச்சால் ஆட்களைக் கவர்ந்து பின்னர் குப்புறத் தள்ளி மண்ணைக் கவ்வ வைப்பதும் உண்டு. இவர்களுக்கு புதனுடன் வேறு பாவகிரகத் தொடர்பு இருக்கக்கூடும். இவர்கள் போலீசில் வழக்கில் சிக்கினாலும் அதை அழகாக சமாளித்து விடுவார்கள். ஆனால் அதற்காக வெட்கப்பட்டுக்கொண்டு வீட்டுக்குள் அடைந்து கிடக்காமல் அடுத்த தொழில்பற்றி சிந்தித்து செயல்படவும் கூட்டாளி சேர்க்கவும் தொடங்கிவிடுவர். கோள் மூட்டுவர். சில மிதுன ராசியினர் பெரிய குடும்பத்துக்குள் அல்லது வேலை பார்க்கும் நிறுவனத்துக்குள் ஒருவரை பற்றி இன்னொருவரிடம் மாற்றி மாற்றி பேசி ஆட்களுக்குள் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி விடுவர்.

 

தவறான கருத்துடன் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு நேரில் வைத்து இருவரிடமும் விசாரிக்கும் போது ‘நான் அப்படி நினைத்து சொல்லவில்லை, நீங்கள் தவறாக புரிந்துகொண்டீர்கள்’ என்று மாற்றி பேசுவதுண்டு. இச்சமயத்தில் புகார் செய்தவருக்கே அந்த சந்தேகம் வந்துவிடும். ‘பாவம் நல்ல பெண், நான்தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை’ என்று நினைக்கத் தொடங்கி விடுவார். இதுவே இன்னொரு மிதுனராசிப் பெண் என்றால் வக்கீல் போல வாதாடி புகாரை உண்மை என்று நிருபித்துவிடுவார். ஒரு மிதுனராசியின் புரட்டுட்பேச்சுகளை இன்னொரு மிதுன ராசி கண்டுபிடித்துவிடும்.

 

நல்ல நிர்வாகி

பொறுப்புணர்ச்சி மிக்கவர். மிதுன ராசி பெண்கள் அதிகமாக அலட்டாவிட்டாலும் பொறுப்பாக நடந்துகொள்வர். சிறந்த இல்லத்தரசியாக விளங்குவர் அதே சமயம் நல்ல நிர்வாகியாக, டீச்சராக, கணக்காளராக, பாடகியாக விளங்குவர். மிதுனராசி பெண் ஒருவர் நிறைய வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்ய மாட்டார். அடுத்தவர் வேலையை பரிதாபப்பட்டு செய்ய மாட்டார். தனது வேலைகளைச் செவ்வனே செய்து முடிப்பார். பிறர் வேலைகளில் தலையிட்டு தொந்தரவு செய்யமாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். கரெக்டாக ஆபிஸ் முடிந்ததும் கிளம்பி விடுவார். கொடுத்த சம்பளத்துக்கு சரியாக அளவாக வேலை பார்ப்பார். பணியிடத்தில் குறைத்து வேலைசெய்வதோ வேலை நேரங்களில் கதை பேசுவதோ புலம்புவதோ வதந்தி கிளப்புவதோ இவரிடம் கிடையாது.

 

புன்னகை பூவே

மிதுன ராசி பெண் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதைப் பார்க்கவே இயலாது எப்போதும் சிரித்த முகத்துடன் பாசிட்டிவ் வைப்றேஷனுடன் இருப்பார். இவருக்கு லட்சுமி கடாட்சம் பொருந்திய முகமாகவும் இருக்கும். எந்தச் சூழ்நிலையிலும் அலட்டிக்கொள்ளமாட்டார். இன்பமோ துன்பமோ வெயிலோ மழையோ சகித்துக் கொண்டு அமைதியாக இருப்பார். அதற்காக எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறார் என்பது அர்த்தமல்ல. மாறும் சூழ்நிலை உண்டானதும் முதல் ஆளாக மாற்றிக்கொள்வார். அதுவரை அங்கே புலம்பிக்கொண்டிருந்தவர்கள் இன்னும் புலம்பிக்கொண்டே இருப்பார்கள், இவர் புலம்ப மாட்டார், சகித்துக்கொள்வார், ஆனால் சட்டென்று மாறிவிடுவார். மாற்றங்களை ஏற்பதில் முதல் ஆள் இவர் தான் பேக் ஸ்டேஜ் பெர்ஃபார்மர் பட்டிக்காட்டுப் பெண்ணாக இருப்பார்; சென்னை வந்ததும் அல்ட்ரா மாடர்னாக மாறிவிடுவார்.

Related posts

பிக் பாஸிலிருந்து அதிரடியாக வெளியேறிய பெண் போட்டியாளர்…

nathan

சரி த்ரிஷா கிடைக்கல.. மடோனா பாப்பா-மன்சூர் அலிகான் பகீர்!

nathan

வாட்ச்மேன் முதல் ஐ.ஐ.எம் பேராசிரியர் வரை

nathan

கடகம் தை மாத ராசி பலன்

nathan

சகோதரிக்கு கணிதம் சொல்லிக்கொடுக்கும் சிறுவன் -விரக்தியடைந்து அழுதா வீடியோ

nathan

ரூ.170 கோடி நஷ்டம்.. வெளியே தலைகாட்டாத இயக்குனர்… யார் தெரியுமா?

nathan

வீட்டை விட்டு வெளியேறிய கூல் சுரேஷ்-பிரதீப் சொன்ன தகாத வார்த்தை…

nathan

Zendaya Reveals her Favorite Looks from her New Boohoo Campaign

nathan

மெர்சலான லுக்கில் ரசிகர்கள் மனதை மெல்ட் செய்யும் சூர்யா

nathan