24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
22 62a07c8975ad2
Other News

புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் புதிய மருந்து -மருத்துவ உலகில் புதிய புரட்சி

 

இன்று உலகில் இந்தியா உட்பட வளரும் நாடுகளில் தீர்க்க முடியாத பிரச்சினையாக உள்ள நோய் புற்று நோய் ,ஒருவருக்கு புற்று நோய் ஏற்பட்டால் மேலும் வளராமல் தடுக்க முடியுமே தவிர குணப்படுத்த இயாலாது என்பதுதான் தற்போதைய மருத்துவத்துறையின் நிலையாக உள்ளது.

புற்று நோயினை குணமாக்கும் மருந்து:
புற்று நோயினை குணப்படுத்தவே முடியாது என்ற நிலையில் அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் மருத்துவ ஆரய்ய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் புற்று நோய் 100 சதவீதம் குணப்படுத்தகூடிய டோஸ்டார்லிமாப் ( dostarlimap)என்ற மருந்தினை குடல் புற்று நோயாளிகளுக்கு கீமோ தெரபி மருத்துவ சிகிச்சை கொடுக்காமல் டோஸ்டார்லிமாப் மருந்து கொடுத்தே குணப்படுத்தியுள்ளனர்.22 62a07c8953ec6

மருத்துவ சோதனையில் 18 நோயாளிகள்:
இந்த மருந்தானது மொத்தம் 18 நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கப்பட்டது , இதன் பிறகு எம்ஆர்ஐ, பிஇடி எனப்படும் பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி என்று அனைத்து சோதனையிலும் கேன்சர் உடலில் இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டது.

மருத்துவ உலகில் புதிய புரட்சி : புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் புதிய மருந்து

இந்த நோயாளிகள் சிலர் ஏற்கனவே பல்வேறு சிகிச்சைகள் எடுத்து புற்று நோய் குணமாகத நிலையில், டோஸ்டர்லிமாப் என்று மருந்து கொடுக்கப்பட்டு அவர்கள் குணப்படுத்தப்பட்டு உள்ளனர். இதற்காக அவர்களின் உடலில் எந்த விதமான சிகிச்சையும் செய்யவில்லை என்பதுதான் முக்கியமானது.

குணமான புற்றுநோய்:
பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுக்கும் நபர்களுக்கு, சிகிச்சைக்கு பின் பக்க விளைவுகள் இருக்கும்.ஆனால் இவர்களுக்கு அந்த மாதிரியான பக்க விளைவுகள் எதுவும் இல்லை. அதேபோல் சிகிச்சை அளிக்கப்பட்டு 25 மாதங்கள் கழிந்தும் அவர்களுக்கு மீண்டும் கேன்சர் செல்கள் எதுவும் தோன்றவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்திய மதிப்பில் இதன் சிகிச்சைக்கு இப்போதே ரூ. 9 லட்சத்தை தாண்டும் என கூறப்படுகிறது.

மருத்துவ உலகில் புதிய புரட்சி : புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் புதிய மருந்து

அதே சமயம் , இந்த மருந்து விற்பனைக்கு வரும் போது இதை விட கூடுதலாக இருக்கும் என கூறப்படுகிறது. அதே சமயம் இந்த மருந்தினை மற்ற மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அதன் பிறகே இதனை உறுதிபடுத்த முடியும், மேலும் இந்த மருந்தானது மருத்துவ உலகில் வியபாரமாகும் போது சாமானியர்களுக்கும் பயன்படுத்தும் வகையில் இருக்குமா ? என்பது போன்ற கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ உலகில் புதிய புரட்சி : புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் புதிய மருந்து

இந்த நிலையில் எத்தனை காலத்தில் நோயாளிகளை குணமாக்கும் என்பதிலும் சில சந்தேகம் உள்ளதால் அதை பற்றி கூடுதல் ஆய்வுகளும் விரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் மருத்துவ உலகில் அழிக்க முடியாத அரக்கனாக இருந்த புற்று நோயினை அழிக்கும் முதல் விதையாக இந்த ஆராய்ச்சி அமைந்திருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Related posts

மீண்டும் அப்பாவாகிறார் நடிகர் கார்த்தி

nathan

இறப்பதற்கு முதல் நாள் கதறி அழுத சில்க்.. நடந்தது என்ன தெரியுமா?

nathan

VJ அர்ச்சனா வாங்கியிருக்கும் புதிய கார்.. என்ன தெரியுமா?

nathan

“கிக்” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு

nathan

மீண்டும் தந்தை ஆன குஷியில் பிக்பாஸ் பிரபலம் ஆரி அர்ஜுன்

nathan

நீங்கள் பிறந்த கிழமையும்..! உங்களின் குணாதிசயங்களும்..!!அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

500 கிலோ பூசணிக்காய்… படகாக பயன்படுத்தி 70 கி.மீ. பயணித்து கின்னஸ் உலக சாதனை

nathan

காதலனுடன் சனம் ஷெட்டி.. தீயாய் பரவும் படுக்கையறை காட்சிகள்..

nathan

இரண்டு நாட்களில் குஷி படம் செய்துள்ள வசூல்..

nathan