25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
737227714Pungai
மருத்துவ குறிப்பு

தோல் நோய்களை குணப்படுத்தும் புங்கை

சொரியாசிஸ்சை குணப்படுத்தும் புங்க மரம் சுத்தமான காற்றை கொடுக்க கூடியதும், தோல்நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், மூட்டு வலியை போக்கவல்லதும், உடலில் ஏற்படும் அரிப்பை சரிசெய்ய கூடியதும், பசியின்மை, ஈரல் நோய்களை போக்கும் தன்மை கொண்டதுமான புங்க மரத்தின் பல மருத்துவகுணங்களை பார்ப்போம்..

வீட்டின் முன்பு இருக்க கூடியது புங்க மரம். இது அடர்ந்த பசுமையான இலைகளை உடையது. பூமிக்கு சத்துக்களை தரக்கூடியது. இதன் இலைகள் புற ஊதா கதிர்களை தாங்கி நிழலை தரக்கூடியது. நல்ல சுத்தமான காற்றை கொடுக்கவல்லது. வீட்டுக்கு உள்ளே செல்ல கூடிய நச்சுகிருமிகளை தடுக்க கூடியது. புங்க மரத்து இலைகள், காய்கள், பூ, வேர், பட்டை ஆகியவை மருந்தாகிறது.

புங்க விதைகளை பயன்படுத்தி மூட்டு வலி, தோலில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். புங்க விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை பொடித்து வைத்துக்கொள்ளவும். அரை ஸ்பூன் புங்க விதை பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்தால் மூட்டு வலி, வீக்கம் சரியாகும். தோல் நோய்களுக்கு மருந்தாகிறது.

புங்க மரத்தின் இலைகள் நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்க கூடியது. தோல்நோய்களுக்கு மருந்தாகிறது. இதன் விதைகள் எண்ணெய் நிறைந்ததாக இருக்கிறது. இது ஆஸ்துமா, நெஞ்சக கோளாறுகளுக்கு மருந்தாகிறது. சீயக்காயுடன் புங்க காய் சேர்த்து பயன்படுத்தலாம். புங்க எண்ணெய்யை பயன்படுத்தி சொரியாசிஸ்சுக்கான மருந்து தயாரிக்கலாம். புங்க எண்ணெய், பரங்கி பட்டை சூரணம் ஆகியவற்றை தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை பூசினால் சொரியாசிஸ் குணமாகும். தோலில் ஏற்படும் அரிப்பு சரியாகும். புங்க எண்ணெய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

புங்க இலையை பயன்படுத்தி உடல், தலையில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். புங்க இலை, மஞ்சள் பொடியுடன் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிக்கட்டிய பின், துணியில் எடுத்து அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவவும். தலையில் பொடுகினால் அரிப்பு இருந்தால் இதை தடவி 10 நிமிடம் கழித்து குளித்தால், அரிப்பு சரியாகும். புங்க இலை தோலுக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது. தோல் மென்மை தன்மை அடைகிறது. அக்கி புண்கள், அம்மை கொப்பளங்கள் சரியாகிறது. புங்க இலையுடன் மஞ்சள் சேர்த்து தேனீராக்கி குடிப்பதன் மூலம் பசியின்மை, ஈரல் வீக்கம் சரியாகும். ஈரல் நோய்களுக்கு மருந்தாகிறது.

புங்க எண்ணெய்யை பயன்படுத்தி மூட்டு வலி, கால் வலி, கீழ்வாதத்துக்கான மருந்து தயாரிக்கலாம். புங்க எண்ணெய்யுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இதை மூட்டுகளில் வலி, வீக்கம் உள்ள இடங்களில் தடவி சுமார் ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் வலி சரியாகும். புங்க எண்ணெய், வாத நீரால் ஏற்படும் வீக்கத்தை சரிசெய்யும். மூட்டு வலிக்கு மேல்பூச்சு மருந்தாகிறது. நெஞ்சின் மீது பூசுவதால் நெஞ்சக சளி, இருமல் குறைகிறது.

737227714Pungai

Related posts

உங்களுக்கு தெரியுமா கர்ப்பம் தரித்து 6 மாதங்கள் வரை கரு கலையாமல் எப்படி தடுப்பது?

nathan

ஏன் அக்கால ஆண்களுக்கு வயாகராவின் அவசியமே இருந்ததில்லை என்பதற்கான காரணங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா மாதவிடாய் தாமதம் ஆவதற்கு இவை தான் காரணம்!

nathan

படர்தாமரையை குணமாக்கும் சரக்கொன்றை

nathan

கண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்

nathan

பெண்களின் சிறுநீர்க்கசிவுக்கு மருத்துவம்

nathan

கல்லை கரைக்கும் மூலிகைகள் (விரைவாக -மூன்றே நாளில் )-படங்களுடன்

nathan

தாயாக சிறந்த பருவம்

nathan

உடல் வலியால் அவதிபடுபவர்களா.!அப்ப இத படிங்க!

nathan