25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
19 1482138104 weight 21 1500610303
மருத்துவ குறிப்பு

புது தாய்மார்கள், தங்களின் வயிற்று சதையை வேடிக்கையான முறையில் குறைப்பது எப்படி?தெரிந்துகொள்வோமா?

புதிய தாய்மார்களுக்கு வயிற்று சதையை குறைப்பது தான் முக்கிய பிரச்சனை; குழந்தைகளை பெற்று எடுத்த பின் தனது உடல் எடையை பற்றிய கவலை பெண்களின் மனதினை பற்றி கொள்கிறது. இந்த கவலை குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்கும் பொழுது கூட ஓரளவு அடங்கி இருக்கும்; ஆனால் அதன் பின் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி விடும்.

குழந்தையை பெற்று எடுத்து புதிதாக தாய்மார்களாக மாறி இருக்கும் பெண்களின் மனதில் இருக்கும் மனக்கவலையை எப்படி வேடிக்கையான முறையில் போக்குவது என்பதை இங்கு காண போகிறோம். புது தாய்மார்கள், தங்களின் வயிற்று சதையை வேடிக்கையான முறையில் குறைப்பது எப்படி என்று இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

தோழியுடன் உடற்பயிற்சி..!

தாயான பின் உடல் எடையை குறைக்க நினைக்கும் பெண்கள் தனியாக உடற்பயிற்சி செய்து எடையை குறைக்க முயன்றால், அது பெரிய விஷயமாக தோன்றும்; இதுவே தனிமையில் கூடிய உடல் எடையையும், பிரசவத்திற்கு பின்னும் பெரிதாக இருக்கும் வயிறையும் குறைக்க முயன்றால், அது ஒரு பெரிய இமாலய வேலையாக தோன்றும்.

ஆனால் தன்னை போன்று உடல் எடையை, வயிற்று சதையை குறைக்க விரும்பும் தோழியருடன் இணைந்து செயல்பட்டால், நான் முதலில் குறைத்தேனா இல்லை நீயா? யார் எவ்வளவு குறைத்து உள்ளார்கள் என போட்டா போட்டியாக இருக்கும். இது உடல் எடையை குறைக்க பெண்களை உற்சாகப்படுத்தி, விரைவில் எடையையும் குறைக்க உதவும்.

பரிசு கொடுத்துக் கொள்ளுங்கள்!

நண்பர்களுடனோ அல்லது தனியாகவோ உடற்பயிற்சி செய்து உடல் எடையை ஒரு குறிப்பிட்ட நாளுக்குள்ளாக குறைத்து காட்டினால் அதற்கு தன்னை தானே பாராட்டி கொள்ளும் விதமாக பரிசு கொடுத்து ஊக்கப்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு ஊக்கப்படுத்துவது இன்னும் விரைவில் எடையை குறைக்க வேண்டும் மற்றும் அதிக பரிசுகளை அடைய வேண்டும் என்ற ஆசையை மனதில் உண்டு பண்ணும்.

எது மிகவும் முக்கியமோ அந்த ஒரு பொருளை இலக்காக – பரிசாக நிச்சயித்து அதற்காக வேலை செய்தால் அதை அடைய வேண்டும் என்ற வெறியே, உங்களை அதிகம் உழைக்க தூண்டும்.

நடனம் மூலம்..!

தற்காலத்தில் உடல் எடையை உடற்பயிற்சி, யோகா போன்ற விஷயங்களை தாண்டி எத்தனையோ வித்தியாச முறைகள் வந்து விட்டன. இந்த முறைகளில் நின்ற இடத்தில் இருந்தே ஓடுவது மற்றும் ஆடுவது, பாடி எடையை குறைப்பது என பல்வேறு விஷயங்கள் வந்து விட்டன. இங்கு ஆடுவது பெண்களின் வயிற்று சதையை குறைக்க பெரிதும் உதவுகிறது என்பதை தான் பரிந்துரை செய்ய விழைகிறோம்.

ஜும்பா போன்ற நடன முறை உடற்பயிற்சிகள் உடல் எடையை விரைவில் குறைக்க உதவுகிறது.

உணவுகள் மூலம்..!

புதிதாக தாயான பெண்கள் தங்களின் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சியின் உதவியோடு உணவு முறையின் உதவியையும் கூட நாடலாம். சரியான உணவு முறை என்பது வயிற்று சதையை மற்றும் உடல் எடையை குறைக்க விரும்பும் ஒவ்வொரு பெண்ணும் பின்பற்ற வேண்டிய விஷயம்.

புதிய தாய்மார்கள் தனது உடல் எடையை குறைக்க உதவும் உணவுகளை உட்கொள்ள வேண்டிய முயற்சிகள் புரியும் பொழுது, அது தாய்ப்பால் சுரப்பை பாதித்து விடாமல் இருக்க வேண்டியது மிக முக்கியம்.

மேலும் படிக்க: கர்ப்பிணி மனைவியின் உடலில் இரும்புச்சத்தினை கூட்ட கணவர்கள் செய்ய வேண்டியது!

பயணம் போகலாம்..!

எங்கேனும் சென்று வர அல்லது எதையேனும் வாங்கி வர வெளியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்கு வண்டியின் உதவியை நாடாமல், பிறரை வேலை ஏவாமல் தானே சென்று வாங்கி வரலாம்; தூரம் 5 கிலோ மீட்டருக்கு குறைவாக இருந்தால், நடந்தே சென்று விட்டு போய் வந்து விடலாம்; 5 கிலோ மீட்டரில் இருந்து 10 கிலோ மீட்டருக்கு குறைவான தூரம் என்றால் இந்த தூரத்தை கடக்க சைக்கிளின் துணையை நாடலாம்.

இந்த வேலைகளுக்காக வெளியே சென்று வருவதை நடை பயணம் மற்றும் மிதிவண்டி பயணமாக நினைத்து மகிழ்ச்சியுடன் மேற்கொள்ள முயலுங்கள்!

குழந்தையுடன் உடற்பயிற்சி!

குழந்தையை பெற்று விட்ட பின் பெண்கள் தாங்கள் பெற்று எடுத்த குழந்தையை வளர்ப்பதை தான் தங்களது முக்கிய கடமையாக கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட முக்கிய கடமையை மேற்கொள்ளும் பொழுதே எளிதில் உடல் எடையை குறைத்து விடலாம்.

குழந்தையுடன் விளையாடுவது, குழந்தையுடன் சேர்ந்து சிறு சிறு உடற்பயிற்சிகளை மேற்கொள்வது என்று உடல் எடையை குறைக்க பெண்கள் முயற்சி செய்யலாம்.

தாய்ப்பால் அளித்தல்!

தாய்ப்பால் அளிப்பது குழந்தைக்கு எந்த அளவு நன்மைகளை தருகிறதோ, அதே அளவு அல்லது அதை விட பல மடங்கு தாய்ப்பால் அளிக்கும் பெண்களுக்கே நன்மை தருகிறது; எப்படி என்றால், தாய்ப்பால் தரும் பெண்களின் உடல் அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெறுகிறது, தாய்மார்களின் உடலில் இருந்து சத்துக்கள் தாய்ப்பால் வழியாக வெளியேறுகின்றன.

வேலை இல்லை விளையாட்டு!

இவ்வாறு சத்துக்கள் வெளியேறுவது தாய்மார்களின் உடல் எடையையும் குறைக்க உதவலாம்; ஆகையால் தாய்ப்பால் அளிப்பதை ஒரு வேலையாக எண்ணாமல், அதையும் ஒரு விளையாட்டு போல எண்ணி, இன்று எத்தனை முறை, எவ்வளவு பால் கொடுத்தேன், இன்னும் எத்தனை நாள் கொடுக்க முடியும் என்று கணக்கிட்டு நீங்கள் கடக்கும் ஒவ்வொரு நாளுக்கும் பரிசு அளித்து உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள்!

Related posts

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க 10 டிப்ஸ்!

nathan

வயிற்றுப் புழுக்கள், வயிற்றுப் புண் நீங்க பாட்டி வைத்தியம்

nathan

வேர் உண்டு வினை இல்லை!

nathan

ஆறு மாதத்திற்கு மேல் மாதவிடாய் பிரச்சனையா? இப்படி இருந்தால் கட்டாயம் நீங்கள் மருத்துவரை சந்திக்கவும்!

nathan

அற்புத டிப்ஸ்! புண் மற்றும் அல்சருக்கு தீர்வு வேண்டுமா?

nathan

உங்களது மார்ப கங்களை சிக்கென வைத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ்!

nathan

ஞாபக மறதி பிரச்சனையால் அவதியா? மேம்படுத்த இதை சாப்பிடுங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா கர்ப்பிணிகள் இந்த 3 பழங்களையும் சாப்பிடவே கூடாதாம்…

nathan

உடலைக் காக்கும் கவசங்கள்

nathan