28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
karppam
கர்ப்பிணி பெண்களுக்கு

குழந்தை எடை குறைவாக பிறப்பதற்கு காரணம் என்ன?

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது வைட்டமின் டி சத்து குறைவாக இருக்குமேயானால் பிறக்கும் குழந்தை எடை குறைவாக பிறப்பதாக மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ளது. கருத்தரித்து 26 வாரங்களில் வைட்டமின் டி அளவு தாயாரின் உடலில் எந்த அளவு உள்ளது என்பதைப் பொறுத்து பிறக்கும் குழந்தையின் உடல் எடை தீர்மானமாகிறது. மிகவும் இயற்கையான வைட்டமின் டி, சூரிய ஒளியில் உள்ளது. உணவு என்று எடுத்துக்கொண்டால் வைட்டமின்டி அதிகம் இருக்கும் உணவு என்று எதையும் குறிப்பிட்டு சொல்வதற்கில்லை.

எனவே வைட்டமின்டி குறைபாடு கருவின் அளவைத்தீ ர்மானிப்பதாக ஆய்வுகள் எடுத்து கூறுகிறது. கர்ப்ப காலத்தின் முதல் 3
மாதங்கள் மற்றும் 2 மூன்று மாதங்கள் காலக்கட்டத்தில் வைட்டமின் டி சத்தைப் பொறுத்து குழந்தையின் எடை தீர்மானிக்கப்படுகிறது. வைட்டமின் டி மட்டும் குறைபாடாக இருந்து மற்றப்படி ஆரோக்கியமாக இருக்கும் கர்ப்பஸ்த்ரீ களில் வைட்டமின்டி குறைபாட்டினால் பிறக்கும் குழந்தை எடை வழக்கத்தை விட 46 கிராம் எடை குறைவாக பிறப்பதாக ஆய்வில் ஈடுபட்ட ஆலிசன் ஜெர்னான்ட் என்ற மருத்துவ ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் 3 மாதத்தில் போதிய வைட்டமின்டி தாயார் உடம்பில் இல்லையெனில் கருவிலேயே குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்புகள் ஏற்படலாம் என்கிறார் அவர். இந்த ஆய்வின் முடிவுகள் மருத்துவ நிபுணர்களால் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. எனவே கர்ப்பமாக உள்ள பெண்கள் வெளியிலேயே தலை காட்டாமல் வீட்டினுள் முடங்கும் பழக்கத்தை கை விடுங்கள் உங்கள் குழந்தையின் எதிர்காலம் உங்கள் கையில் என்பதை மறந்து விடாதீர்கள்!

karppam

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவத்திற்கு பின் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள்

nathan

குழந்தையின் முதல் வளர்ச்சி தாயின் வயிற்றில்

nathan

கர்ப்பம் அடைந்த முதல் 3 மாதங்களில் தாம்பத்தியத்திற்கு லீவு விடுங்க

nathan

குழந்தைப்பேறுக்கு இயற்கை மருத்துவ குறிப்புகள்

nathan

கர்ப்பிணிகளின் கனிவான கவனத்துக்கு…

nathan

இரண்டாவது முறை கருத்தரிப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

nathan

கர்ப்பிணிகளுக்கு மசக்கை எதனால் ஏற்படுகிறது?

nathan

கருப்பையில் குழந்தை இறந்துவிட்டது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!

nathan

பச்சிளங்குழந்தையை பராமரிக்கும் முறைகள்

nathan