26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
pregnancy
மருத்துவ குறிப்பு

சிசேரியனுக்கு பின் இரண்டாம் குழந்தையை எப்பொழுது பெற்றுக் கொள்ளலாம்?தெரிந்துகொள்ளுங்கள் !

சிசேரியன் பிரசவத்தால் உண்டான காயங்கள், வலிகள் ஆற அதிக நாட்கள் ஆகும். சிசேரியன் செய்து கொண்ட பெண்களுக்கு பிரசவ காயங்கள் ஆற, சுகப்பிரசவம் செய்து கொண்டவர்களை விட அதிக மாதங்கள் தேவைப்படும்; ஏனெனில் வயிற்றை கிழித்தும், முதுகு தண்டில் மயக்க மருந்து கொடுத்ததும் நடத்தப்பட்ட பிரசவம், பெண்ணின் இயல்பு நிலைக்கு திரும்ப விடாமல் தாமதப்படுத்தும்.

சிசேரியனுக்கு பின் இரண்டாம் குழந்தையை எப்பொழுது பெற்றுக் கொள்ளலாம் மற்றும் சிசேரியனுக்கு பின் மனைவியுடன் உடலால் இணைய எது சரியான நேரம் என்பது பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

சிசேரியனுக்கு பின்!

சிசேரியனுக்கு பின் பிரசவ அறுவை சிகிச்சையை கடந்து வந்த மனைவி நன்கு ஓய்வு எடுக்க கணவர்கள் போதிய அவகாசம் தர வேண்டும். ஏனெனில் குழந்தையை பெற்று எடுத்ததால் பெண்கள் தங்கள் உடலின் சக்தியை இழந்து இருப்பர்; மேலும் பிரசவத்தின் பொழுது ஏற்பட்ட காயங்கள், காய்நகளை குணப்படுத்த உட்கொள்ளப்படும் மாத்திரை மருந்துகள் போன்றவை பெண்ணின் உடலை இயல்பு நிலைக்கு திரும்ப விடாமல் தாமதப்படுத்தும்.

எவ்வளவு நாள்கள்?

பெண்ணின் உடலில் காயங்கள் ஆற ஆகும் காலம் வரை கணவர்கள் மனைவியருக்கு ஆதரவாக இருந்து குழந்தையை கவனித்து கொள்ள உதவி வர வேண்டும். கணவர்கள் மனைவி மீதான தங்கள் அன்பை, ஆசையை கட்டி அணைத்தல், முத்தம் போன்ற செயல்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தி கொள்ளலாம்.

பெண்களின் உடலில் சிசேரியனால் ஏற்பட்ட காயங்கள் ஆற 6 வாரங்கள் தேவைப்படும் என்று கூறப்படுகிறது; இது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடலாம்.

6 வாரத்திற்கு பின் ஈடுபடலாமா?

மனைவியரின் உடலில் காயங்கள் முழுமையாக ஆறிய பின், அவர்கள் பழைய மாதிரியான உடல் பலத்தை பெற்று விட்டார்களா என்பதை ஆலோசித்து அறிந்து, மனைவி உடலால் இணைய இசைந்தால் தாராளமாக உறவில் ஈடுபடலாம். ஆனால், பொதுவாக சிசேரியன் பிரசவத்திற்கு உள்ளான மனைவியருக்கு குறைந்தது 3 மாத கால அவகாசம் ஆவது கொடுப்பது நல்லது.

இந்த 3 மாத காலம் மனைவியரின் உடல் பலப்படவும், மனைவி குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளவும் மிகவும் உதவியாக இருக்கும்.

எந்த நிலை கொள்ளலாம்?

சிசேரியனுக்கு பின் வெளிப்புறமாக காயங்கள் ஆறி இருந்தாலும், மனைவியின் உட்புற உடல் நிலையை பற்றி சரியாக கூற இயலாது. எனவே, உறவு கொள்ளும் பொழுது முழு வேகத்துடன் செயல்படாமல் சற்று பொறுமையாகவே செயல்படுங்கள்.

மேலும் மனைவியை மேற்புறமாக வைத்து ஈடுபடுவது நல்லது; மனைவி உடலின் மேல் உங்கள் முழுப்பலத்தையும் காட்டினால் அவர்கள் விரைவில் சோர்ந்து விடுவார்கள். மிஷினரி பொஷிஷன் என்னும் உறவு நிலையை கண்டிப்பாக தவிர்த்து விடுவது நல்லது.

மேலும் படிக்க: மனைவியின் வரித்தழும்புகள் பற்றி கணவன்மார்கள் அறிய வேண்டியவை!

முன்பு போல் இருக்காது!

மனைவியுடன் பிரசவத்திற்கு பின் உறவு கொள்ளும் பொழுது கிடைக்கும் அனுபவம் முன்பு கிடைத்தது போன்று இருக்காது; அதே போல் மனைவியும் அந்த அளவுக்கு உடலால் இணைய நாட்டம் காட்ட மாட்டார்கள். இது ஏன் என்றால், பெண்கள் தாய்மை உணர்வை எட்டிய பின் அவர்களின் மனதை, மூளையை அவர்களின் குழந்தையே எடுத்துக் கொள்கிறது.

ஆகையால் மனைவி குழந்தையை பற்றி எண்ணி, கொஞ்சம் சலனம் காட்டினாலும் அவளை சமாளித்து உறவை முன்னேற்றி கொண்டு செல்ல வேண்டியது கணவரின் பொறுப்பு ஆகும்.

கவனம் தேவை!

தம்பதியர் முதல் குழந்தையை பெற்றுக் கொண்ட பின், அவர்கள் அடுத்து அடுத்து உடலால் இணையும் பொழுது தேவையான கருத்தடை சாதனங்களை பயன்படுத்தி கொள்வது நல்லது. ஏனெனில் குழந்தை பிறந்து 3 அல்லது 4 மாத காலத்திற்கு உள்ளாகவே நீங்கள் உறவு கொண்டதன் விளைவாக மறுபடி கர்ப்பம் ஏற்பட்டு விட்டால் மிகவும் சிக்கலான நிலை ஏற்பட்டு விடும்.

தாய்ப்பால் கேள்விக்குறி ஆகிவிடும்!

அவ்வாறு கர்ப்பம் ஏற்பட்டு விட்டால், பெண்களால் கர்ப்ப நிலை, குழந்தை பராமரிப்பு இரண்டையும் சேர்த்து செய்வது கடினம்; மேலும் பெண்களின் உடலில் தாய்ப்பால் சுரப்பு கேள்விக்குறி ஆகி விடலாம். இவ்வாறு நடந்தால் அது முதல் குழந்தையை அதிகம் பாதிக்கும்; ஆகையால் தம்பதியர் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

முதல் குழந்தைக்கு குறைந்தது 6 மாதங்கள் ஆவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற விஷயத்தை மனதில் வைத்து தம்பதியர்கள் முடிவு எடுக்க வேண்டும்.

கணவரின் கடமை!

பெண்கள் சிசேரியனுக்கு பின் வலி மற்றும் வேதனையை அனுபவிக்கும் பொழுது அவர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும். அதை விடுத்தது அவர்களை உறவுக்கு அழைத்து அவர்களின் மனம் புண்படும்படி நடந்து கொள்ள கூடாது. மேலும் மனைவியர் உடல் நிலை விரைவில் சரியாகவில்லை எனினும், அவர்கள் முழுமையான நலம் பெற ஆவண செய்ய வேண்டும்.

குழந்தை வளர்ப்பில் தக்க னேற்றத்தில் அவர்களுக்கு துணையாக இருந்து சிறந்த கணவர் என்பதை நிரூபிக்க வேண்டும்..! இது ஒரு நல்ல கணவருக்கான அடையாளம் மற்றும் கடமை!

Related posts

தெரிந்துகொள்வோமா? சிசேரியன் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!

nathan

சினிமாவோடு வாழ்க்கையை சம்பந்தப்படுத்தி கொள்ளாதீர்கள்

nathan

பண நெருக்கடி சுனாமியைச் சமாளிக்கும் வழிகள்

nathan

ஸ்கேன் படங்கள்! கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை

nathan

பரவும் பன்றிக் காய்ச்சல்… வருமுன் காக்க இயற்கை வழிமுறைகள்!

nathan

தாய்மைப்பேறு அடைய ஆயுர்வேத மருத்துவம்!

nathan

உடற்பருமன் சுட்டெண் (body mass index)

nathan

இந்த ஆபத்து வரலாம்!அடிக்கடி பட்ஸ் யூஸ் பண்றிங்களா?

nathan

தேமல் பிரச்சனையால் அவதியா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan