25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
kiizhanelli
மருத்துவ குறிப்பு

மஞ்சள் காமாலையை குணமாக்கும் கீழாநெல்லி

உடலின் முக்கியமான உறுப்பாக கல்லீரல், மண்ணீரல் விளங்குகிறது. உடலை பாதிக்க கூடிய கிருமிகள் மழைக்கால வெள்ளத்தில் அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளது. மாசுபடிந்த நீர் எங்கும் கலந்து விடுவதால் ஹெபடிடிஸ் பி, சி, டி கிருமிகள் உருவாகிறது. இதனால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. காமாலை வந்தால் பசியின்மை உண்டாகும். உடலில் வெப்பம் மிகுதியாக இருக்கும். சிறுநீர் மஞ்சளாக இருக்கும். கண்கள், தோல், நகம் ஆகியவை மஞ்சளாக மாறிவிடும்.

பித்தம் அதிகரித்து ஈரல் செயல்பாடுகளில் ஏற்படும் குறைபாடுகளால் மஞ்சள் காமாலை வருகிறது. சுகாதாரமற்ற உணவு, சுத்தமில்லாத தண்ணீர் போன்றவை மஞ்சள் காமாலைக்கு காரணமாகிறது. கீழா நெல்லியை பயன்படுத்தி கல்லீரலை பலப்படுத்தும் மற்றும் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்: வேருடன் கீழாநெல்லியை அரைத்து அதன் சாறு 2 ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.

இதனுடன் 2 ஸ்பூன் பாகற்காய் சாறு, உப்பு சேர்க்காத அரை டம்ளர் மோர் சேர்த்து கலக்கவும். இதை காலை, மாலை என 18 நாட்கள் எடுத்துக் கொண்டால் ஈரல் பாதிப்பு, மஞ்சள் காமாலை சரியாகும். மழைக்காலத்தில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாலும், வெயில் காலத்தில் மாசுக்கள் குடிநீரில் கலந்து விடுவதாலும் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. கசப்பு சுவையை கொண்ட கீழாநெல்லி பித்தத்தை சமப்படுத்தும் தன்மை கொண்டது. மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருந்தாகிறது.

கீழாநெல்லியின் வேர், தண்டு, இலை, காய் ஆகியவற்றை எடுத்து சிறு துண்டுகளாக்கி கொள்ளவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகம், சிறிது பனங்கற்கண்டு, நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காய்ச்சிய பசும்பால் சேர்த்து குடிக்கவும். இதனால், மஞ்சள் காமாலை மறைந்து போகும். ஈரல் பலப்படும். மஞ்சள் காமலைக்கு கீழாநெல்லி, பொன்னாங்கன்னி கீரை, மஞ்சள் கரிசாலை, மணத்தக்காளி கீரை, கறிவேப்பிலை ஆகியவை மருந்தாகிறது.

இதில் தலை சிறந்ததாக கீழாநெல்லி விளங்குகிறது. மூக்கிரட்டை கீரையை பயன்படுத்தி மஞ்சள் காமாலைக்கு மருந்து தயாரிக்கலாம். ஒருபிடி அளவு மூக்கிரட்டை கீரை, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் பனங்கற்கண்டுடன் ஒரு டம்ளர் அளவு நீர் விட்டு கொதிக்க வைத்து வடிக்கட்டி எடுக்கவும். மஞ்சள் காமாலை இருப்பவர்கள் 100 மி.லி காலை, மாலை என உணவுக்கு முன் எடுத்துக் கொள்ளவும். மற்றவர்கள் வாரம் ஒருமுறை குடித்தால் மஞ்சள் காமாலை வராமல் தடுக்கலாம்.

மருதாணியை பயன்படுத்தி மஞ்சள் காமாலை, கல்லீரல் வீக்கத்துக்கான மருந்து தயாரிக்கலாம். மருதாணி இலைகளில் இருந்து சாறு எடுக்கவும். 2 ஸ்பூன் மருதாணி சாறுடன், அரை ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை காலை, மாலை உணவுக்கு முன்பு குடித்துவர மஞ்சள் காமாலை குணமாகும்.
kiizhanelli

Related posts

இதில் நீங்கள் எந்த வகை தலைவலியால் அவஸ்தைப்படுகிறீர்கள்? அதற்கு காரணம் என்ன தெரியுமா?

nathan

உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை வெளியேற்றுவது எப்படி?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஆண்கள் ஏன் மனைவியிடம் பொய் சொல்றாங்க தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த உறுப்புகள் இல்லையென்றாலும் உங்களால் உயிர் வாழ முடியும்!

nathan

ஹார்மோன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சோயா!

nathan

காய்ச்சல் இருக்கும்போது செய்யக்கூடாதவை என்ன தெரியுமா….?தெரிஞ்சிக்கங்க…

nathan

உலர் திராட்சையை தினமும் நீரில் ஊற வைத்து சாப்பிடுங்க

nathan

கம்ப்யூட்டரைப் பார்த்து கண்கள் களைப்படைவதை குறைக்க சிறந்த வழிகள்!!!

nathan

‘கார்டியாக் அரஸ்ட்’ என்றால் என்ன?

nathan