25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
woman with period pain
பெண்கள் மருத்துவம்

மாதவிடாய் காலத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் மாற்றங்கள்!!!

ஒவ்வொரு பெண்ணும் இதனை கடந்து தான் செல்ல வேண்டும். உங்கள் தாயிலிருந்து பக்கத்து வீட்டு பெண்மணிகள், பருவமடைவதை பற்றி உங்களிடம் கூடி தங்களின் அனுபவத்தை கூறுவார்கள். இக்காலத்தில் என்ன செய்யக் கூடாது என்பதை பற்றியும் கூறுவார்கள். இருப்பினும் எதிர்ப்பார்ப்புகளை பற்றி யாருமே கூற மாட்டார்கள். இது வெறும் பருவமடையும் கட்டத்தை பற்றியது மட்டுமல்ல. அதனுடன் சேர்ந்து ஆரம்பிக்கும் மாதவிடாய் பற்றியதாகும். மாதவிடாய் என்பதே ஒரு பெண் தன் வாழ்க்கையில் உடல் ரீதியாக சந்திக்கும் மிகப்பெரிய மாற்றமாகும்.

மாதவிடாய் என்றாலே குழப்பத்துக்குரியது தான். அதனை சுற்றி பல கட்டுக்கதைகள் பிணையப்பட்டுள்ளது. அனுபவ ரீதியாக மட்டுமே அதனை சரிவர புரிந்து கொள்ள முடியும்.
பொதுவாக 9 முதல் 17 வயதிற்குள் ஒரு பெண் பருவமடைந்து விடுவாள். சில பெண்கள் அதை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தாலும் சில பெண்களுக்கு அது ஒரு சிம்ம சொப்பனம் தான்.

அதனை சந்திக்க அவர்கள் நடுங்கித் தான் போவார்கள். இனப்பெருக்க மண்டலத்தை பற்றியும் வயது அதிகரிக்கும் போது ஏற்படும் மாற்றங்களை பற்றியும் சில பெண்கள் தங்கள் அறியாமையை வெளிக்காட்டுவார்கள். இதனால் மாதவிடாயும் பருவமடைதலும் வர்களுக்கு ஒரு புரியாத புதிராக விளங்கும். பருவமடைதல் என்பது உடல் ரீதியாக பல மாற்றங்களை உண்டாக்கும். இந்நேரத்தில் உலகமே உங்களை புதிதாக பார்க்கும். உங்களை நடத்தும் விதமும் மாறுபட்டு இருக்கும். சரி, இக்காலத்தில் ஏற்பட போகும் உடல் மாற்றங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா? தொடர்ந்து படியுங்கள்.

பொது தோற்றம் உங்கள் உடலுக்கு புது தோற்றம் கிட்டும். மாதவிடாய், உங்கள் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். இக்காலத்தில் தான் உங்கள் மார்பகங்கள் வளர்ச்சி அடையும். உங்கள் ஒட்டு மொத்த உடலின் அமைப்பிலும் வளர்ச்சியிலும் மாற்றங்கள் ஏற்படும். கூந்தல் வளர்ச்சியையும் கூட எதிர்ப்பார்க்கலாம். இதுவே இக்காலத்தில் ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்கள்.

பருக்கள்
இக்காலத்தில் பெண்களுக்கு முகத்தில் பருக்கள் வருவது இயல்பு தான். மாதவிடாயின் போது பெண்களுக்கு ஏற்பாடு மாற்றங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த பருக்கள் ஒரு வார காலம் அல்லது அதற்கு குறைவான காலத்திலேயே மறைந்து விடும். ஆனால் அனைத்து பெண்களுக்கும் இது ஏற்படுவதில்லை.

மாதவிலக்குக்கு முன் ஏற்படும் அறிகுறிகள்
மாதவிலக்குக்கு முன் ஏற்படும் அறிகுறிகள் (PMS – ப்ரீ மென்ஸ்சுரல் சிம்ப்டம்ஸ்) என்பது அநேகமாக அனைத்து பெண்களுக்கும் அனுபவிக்கும் ஒன்றாகும். மாதவிலக்கு என்பது ஹார்மோன் சம்பந்தமாக ஏற்படும் மாற்றங்கள். அதனால் மாதவிலக்கின் போது ஏற்படும் மாற்றங்களும் அதிகம்.

மாதவிலக்குக்கு முன் ஏற்படும் சில அறிகுறிகளை பற்றி இப்போது பார்க்கலாம்:

* மார்பகங்கள் மென்மையாகுதல் அல்லது மார்பகங்களில் வலி

* எரிச்சல் அல்லது காரணமில்லாத கோபம்

* ஒரு வித சோகம் * மன அழுத்தம் / பதற்றம்

* உணவுகளின் மீது தீவிர நாட்டம்

* வாயிற்று பொருமல் இக்காலத்தின் போது மேற்கூறிய மாறுதல்களை நீங்கள் அனுபவிக்க கூடும்.

சில பெண்களுக்கு மாதந்திர மாதவிடாயின் போது குமட்டல் மற்றும் வாந்தியும் கூட ஏற்படும். இத்தகைய மாற்றங்கள் பல நேரம் சந்தோஷங்களை அளிக்காது. இக்காலம் பெண்களுக்கு கடுமையானதாக இருக்கும். நீங்கள் வீட்டையும் வேலையையும் சேர்ந்து கவனிக்க வேண்டுமென்றால், உங்கள் நிலைமை இன்னும் கஷ்டம் தான்.

சுளுக்கு/பிடிப்பு
மாதவிடாயின் போது ஏற்படும் சுளுக்குகள் அல்லது தசை பிடிப்புகளை பல இள வயது பெண்கள் அனுபவித்து வருகின்றனர். ஒரு இளம் பெண்ணை கேட்டு பாருங்கள்; மாதா மாதம் இந்த பிடிப்பினால் அவள் படும் அவஸ்தையை உங்களுக்கு எடுத்துரைப்பாள். அவள் பாதிக்கப்படுவாள்! அவள் அவைகளை தாங்கிக் கொள்வாள்! அவை என்னவென்று அவளுக்கு நன்றாக தெரியும்! மாதவிடாயின் போது ஏற்படும் மாறுதல்கள் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகும். இன்றைய நவீன உலகத்தில் உள்ள வாழ்க்கைமுறை மற்றும் உணவு பழக்கமும் கூட இந்த மாற்றங்களுக்கு ஒரு காரணமாக விளங்குகிறது. இருப்பினும் மாதாமாதம் வரும் அந்த நாட்கள் என்பது பெண்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் வெறுப்பான காலமே.

ஆரோக்கியமாக இருங்கள்
ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் போதுமான விழிப்புணர்வு இருந்தால், மாதவிடாயின் போது ஏற்பாடு மாற்றங்களை சுலபமாக சமாளிக்கலாம். இக்காலத்தில், பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். பச்சை காய்கறிகள் மற்றும் கால்சியம், புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ள உணவுகளை உட்கொண்டால், பல பிரச்சனைகள் தீரும். வைட்டமின் ஈ மாத்திரைகளை உட்கொண்டால், மாதவிலக்குக்கு முன் ஏற்படும் அறிகுறிகளின் தாக்கங்கள் குறையும். மாதவிடாயின் போது ஏற்படும் மாற்றங்களை சந்திக்க முன் கூட்டியே தயாராக இருங்கள். உங்கள் மாதவிடாய் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். தைரியமான பெண்ணாக அதனைஎதிர்கொள்ளுங்கள். மாதவிடாயின் போது ஏற்பாடு மாற்றங்கள் மட்டுமே இவைகள். உங்களாலேயே முடியவில்லை என்றால் வேறு யாரால் முடியும் என்ற எண்ணத்தை வளர்த்திடுங்கள்.
woman with period pain

Related posts

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் உண்டாகிறது? எப்படி தவிர்ப்பது? என்ன சிகிச்சை?

sangika

ஆண்களும் தெரிஞ்சிக்கலாமே,, இந்த ஆறு அறிகுறி இருந்தா பெண்கள் கருப்பையில் கட்டி இருக்குனு அர்த்தம்…

nathan

கருக்கலைப்பால் ஏற்படும் உடல் உபாதைகள்

nathan

பிரசவத்திற்கு பின்னரான உடல் பராமரிப்பு

sangika

பெண்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் தென்படும் அறிகுறிகள்

nathan

குழந்தை பிறப்பை தள்ளிப்போட பல் வேறு வழிகள்….

sangika

பெண்களுக்கு எப்போது இறுதி மாதவிடாய் தொடங்குகிறது

nathan

மாதவிடாய் பிரச்னைகளுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்தும்!

nathan

குழந்தை வரம் பெற சில எளிய ஆலோசனை , கை வைத்திய முறைகள்

nathan