உடலைச் சுத்தப்படுத்தி பல வியாதிகளை நீக்கும் வல்லமை அகத்திக்கீரைக்கு உண்டு. மருந்திடும் தோஷத்திலிருந்து மருந்தை முறித்து குணமாக்கக் கூடிய சக்தி அகத்திக்கீரைக்கு மட்டுமே உண்டு. அகத்தியில் இருவகை உண்டு. வெள்ளைப்பூவுடையது அகத்தி என்றும் செந்நிறப் பூவுடையதை செவ்வகத்தி என்றும் கூறுவார்கள்.
அகத்தியின் பூ, இலை, பட்டை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டவை. அகத்தி மரப்பட்டையை குடிநீரில் போட்டுக் குடிக்க அம்மைக் காய்ச்சல், நஞ்சு ஜுரங்கள் நீங்கும். உடம்பெரிச்சல் குணமாகும். இலைகள் பற்று காயங்களுக்கு மருந்தாகும். அமாவாசை அன்று அகத்திக்கீரை உண்பது நல்லது. வேறு மருந்து உட்கொள்ளும் நாட்களில் அகத்திக்கீரை உண்ணக் கூடாது.
பீடி, சிகரெட், சுருட்டு போன்றவற்றைப் புகைப்பதால் ஏற்படும் விஷ ஜுரத்தையும், விஷ சூட்டையும், பித்தத்தையும் குணமாக்கும். முப்பது நாட்களுக்கு ஒருமுறை அகத்திக்கீரையைப் பயன்படுத்துவது நல்லது.
செவ்வகத்தி வேர்ப்பட்டையையும், ஊமத்தன் வேரையும் அளவாக எடுத்து அரைத்து வாத வீக்கத்திற்கும், கீழ் வாய்வுகளுக்கும் பற்றுப்போட்டு வர மூட்டுவலி குணமாகும். அகத்தி வேருடன் தேன் கலந்து சாப்பிட கபம் வெளியேறும்.
இருமல் அகற்றி தூக்கம் தரும் தேன் மூச்சுக்குழாயின் மேற்பகுதியில் ஏற்படும் தொற்று நோய்கள் அல்லது தொற்று காரணமாக இருமல் ஏற்படுகிறது. இரவில் அது அதிகமாகி குழந்தைகளைத் தூங்கவிடாமல் தொல்லைப்படுத்துகிறது.
குழந்தைகளுக்கு இருமலிலிருந்து விடுதலை அல்லது ஓய்வு கிடைப்பதற்காகப் பல நாடுகளில் ‘டெஸ்ம்ரோமே தர்பான்’ என்ற மருந்து பரவலாகக் கொடுக்கப்படுகிறது. அது நோயைக் குணப்படுத்தாமல் இருமலை அமுக்கி விடுகிறது. இதனால் தலைசுற்றல், தலை லேசாக இருப்பதைப் போல தோன்றுதல், தூக்கமின்மை, அமைதியின்மை வாந்தி போன்ற பக்கவிளைவுகள் தோன்றுகின்றன.
சிலருக்கு கடும் ஜுரம், தலைவலி, மூச்சுத் திணறல், பேச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பலவித ஆங்கில மருந்துகளை குழந்தைகளுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக அவர்களுக்குத் தூங்கப் போவதற்கு முன் ஒன்று அல்லது இரண்டு தேன் கொடுப்பதால் இருமலின் தாக்கமும் கொடுமையின் தாக்கமும் குறைந்து நிவாரணம் கிடைப்பதுமின்றி அவர்களுக்கு நல்ல தூக்கமும் வந்துவிடுகிறது.