27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
turmeric mask 1643
முகப் பராமரிப்பு

சரும நிறத்தை அதிகரிக்கணுமா? உங்களுக்குதான் இந்த விஷயம்

மஞ்சள் சிறந்த மசாலா பொருள் மட்டுமின்றி, பல மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு அற்புதமான மருத்துவ பொருளும் கூட. அதுவும் இது உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குவதைத் தவிர, சருமத்திற்கும் நன்மைகளை அளிக்கிறது. இதற்கு மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் தான் காரணம். அதுவும் நீங்கள் உங்கள் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க நினைப்பவராயின், மஞ்சளைக் கொண்டு உங்கள் சரும நிறத்தை எளிதில் கூட்டலாம்.

மேலும் மஞ்சள் சரும நிறத்தை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமின்றி, முகப்பரு, சரும சுருக்கங்கள், தழும்புகள் போன்றவற்றையும் தடுக்க உதவுகிறது. உங்களுக்காக சில எளிய மற்றும் சருமத்தில் மாயத்தை ஏற்படுத்தும் சில மஞ்சள் ஃபேஸ் பேக்குகளை கொடுத்துள்ளோம். அவற்றை தினமும் இரவு பயன்படுத்தினால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மஞ்சள், கற்றாழை மற்றும் எலுமிச்சை

உங்கள் முகத்தில் உள்ள கருமையைப் போக்க 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை போட்டு வந்தால், சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மஞ்சள், கடலை மாவு

உங்களுக்கு பருக்கள் அதிகம் வருமாயின், இந்த ஃபேஸ் பேக் சரியாக இருக்கும். இதற்க 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து, பேஸ்ட் செய்ய சிறிது நீர் அல்லது பாலை ஊற்றி கிளற வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

மஞ்சள் தூள், தேங்காய் பால் மற்றும் கடலை மாவு

இந்த ஃபேஸ் பேக்கும் சரும நிறத்தை அதிகரிக்க வல்லது. அதற்கு ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் பால், 2 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு காய்ந்த பின், நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை போட்டாலே நல்ல மாற்றம் தெரியும்.

மஞ்சள் தூள், தேன் மற்றும் எலுமிச்சை சாறு

2 டீஸ்பூன் தேனில், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அதோடு 3-5 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இந்த மாஸ்க் சருமத்தை வெள்ளையாக்குவதோடு, பிம்பிள் பிரச்சனையையும் போக்க வல்லது.

மஞ்சள் மற்றும் பால்

ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்து கழுவ வேண்டும். இப்படி இரவு முழுவதும் ஊற வைத்தால் தான் முகம் நன்கு பொலிலோடு ஜொலிக்கும். முகத்தில் உள்ள மஞ்சள் கறை நீங்க, கடலை மாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அதைக் கொண்டு முகத்தைத் தேய்த்து கழுவுங்கள். இதனால் சரும நிறம் மேம்படும். இந்த மாஸ்க் வறட்சியான சருமம், எண்ணெய் பசை சருமம் மற்றும் முகப்பரு அதிகம் வரும் சருமத்திற்கு மிகவும் நல்லது.

மஞ்சள் மற்றும் வெள்ளரிக்காய் சாறு

1/4 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், 2 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 1 மணிநேரம் கழித்து நீரால் கழுவ வேண்டும். இப்படி மாலை வேளையில் தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கிவிடும். விருப்பமுள்ளவர்கள், இந்த மாஸ்க்கை இரவு முழுவதும் ஊற வைத்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

Related posts

முகத்துக்கு பிரகாசம் அளிக்கும் கிரீம்

nathan

அழகான கொழுக்கொழு கன்னங்களை பெற சூப்பர் டிப்ஸ்….

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முகத்தில் எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த காரணங்களுக்காக பருக்கள் உருவாகும் தெரியுமா?

nathan

மாசில்லாத கண்ணாடி போன்ற சருமம் பெற வேண்டுமா?

nathan

உங்களுக்கு மூக்கில் முள் போன்று உள்ளதா?இதை முயன்று பாருங்கள்..

nathan

அழகு குறிப்புகள் tamil beauty tips

nathan

how get clean acne free face..பருக்கள் இல்லாத பொலிவான முகத்தைப் பெற சில வழிகள்

nathan

ரோஸ் வாட்டர் கொண்டு முகப்பருக்களை வேகமாக போக்குவது எப்படி?

nathan

பெண்கள் சிவப்பழகை பெற..

nathan