வடகொரியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 42 பேர் பலியாகியுள்ளதாகவும், 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை தாக்கிய கொரோனா, தற்போது வடகொரியாவை அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது.
அந்நாட்டில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்ட உடனேயே நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் அங்கு கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.
இதுவரை வடகொரியாவில் கொரோனா தாக்கத்தினால், மூன்றே நாட்களில் 42 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 550 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்களில் 8 லட்சம் பேர் பாதிப்பு.. 42 பேர் பலி.. வடகொரியாவில் வேகமெடுக்கும் கொரோனா!
இதுகுறித்து அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் கூறுகையில், ‘கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு தோற்றுவித்ததில் இருந்து இதுவரை நாட்டில் பரவி வரும் கொடிய நோயாக இது உள்ளது, பேரிடராக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.