28.1 C
Chennai
Tuesday, Jan 21, 2025
482936865
கர்ப்பிணி பெண்களுக்கு

குழந்தையின் வளர்ச்சி!

குழந்தையின் வளர்ச்சி என்பது ஒரு குழந்தையின் உடல் அளவில் ஏற்படும் வளர்ச்சியினை குறிக்கிறது. இதனை உடல் எடை, உயரம் (குழந்தையின் உயரம்). தலை மற்றும் கை. மார்பு போன்றவற்றின் சுற்றளவுகளைக் கொண்டு அளக்கலாம். இவ்வளவுகளை மாதிரி மேற்கோள்களைக் கொண்டு ஒப்பீடு செய்து, குழந்தையின் வளர்ச்சி சரியாக உள்ளதா என்பதனை அறியலாம்.

சாதாரணமாக, நல்ல உடல் நலம் மற்றும் நன்கு போஷிக்கப்பட்ட குழந்தைகளில், குழந்தை பிறந்த ஓராண்டுக்குள் மிக அதிவேகமான வளர்ச்சி ஏற்படும்.

எடை- பெரும்பாலும் எல்லா குழந்தைகளிலும் பிறந்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் உடல் எடை குறைந்து பின் 7லிருந்து 10 நாட்களுக்குள் மீண்டும் கூடும். உடல் எடையில் ஏற்படும் மாற்றமானது முதல் மூன்று மாதத்திற்கு, ஒரு நாளுக்கு 25 முதல் 30 கிராம் வரை கூடும். அதற்குப் பின்னர் எடைகூடுவதின் வேகம சற்று குறையும். பிறந்த 5 மாதத்தில், உடல் எடை இரண்டு மடங்காக அதிகரிக்கும் மற்றும் ஒருவருடத்தில் அது மூன்று மடங்காக அதிகரிக்கும். ஆனால் எடை குறைவாக பிறந்த குழந்தைகளில் இதுபோன்று ஏற்படுவதில்லை.

மாறாக எடைகுறைவாய் பிறந்த குழந்தைகளின் எடை ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே இரண்டுமடங்காக உயரும். ஒரு வருடத்திற்கு பின் உடல் எடையில் ஏற்படும் மாற்றமானது அவ்வளவு விரைவாக உயராது. பெரும்பாலும் குழந்தைகளின் உடல் எடை முதல் ஐந்து முதல் ஆறு மாதங்கள் மிக நன்கு உயர்ந்து இரண்டு மடங்காகும். ஆனால் ஆறுமாதத்திற்கு பின் எடை உயர்வு ஏற்றத்தாழ்வுடன் காணப்படும். ஏன் அப்படி நடக்கிறது என்றால் ஆறு மாதத்திற்கு பின் தாய்ப்பால் மாத்திரம் குழந்தைக்குப் போதுமானது அல்ல. தாய்ப்பாலுடன் பிற கூடுதல் உணவுப்பொருட்களையும் சேர்த்திருக்க வேண்டும். ஒரு குழந்தையின் உடல் எடை அக்குழந்தையின் உடல் உயரத்தையும் பொறுத்தமைகிறது. குழந்தையின் எடை பரிந்துரைக்கப்பட்ட அளவில் உள்ளதா என்பதனை கண்டறிவது மிக முக்கியமானது. உடல் உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இன்றி காணப்பட்டால் அது குழந்தையின் இளைத்துப்போவதை அல்லது குழந்தையின் ஊட்டச்சத்து பற்றாக்குறையினை குறிப்பிடுகிறது.

உயரம் – உயரம் என்பது குழந்தையின் வளர்ச்சியினை அளவிடும் ஒரு அளவுகோலாகும். புதிதாய் பிறந்த குழந்தையின் உயரம் 50 செ.மீ இருக்கும். முதல் வருடத்தில் குழந்தையின் உயரத்தில் 25 செ.மீ அதிகரிக்கும். இரண்டாம் வருடத்தில் 12 செ.மீ அதிகரிக்கும். 3 ஆம் 4ஆம் மற்றும் 5ஆம் வருடங்களில் 9 செ.மீ, 7செ.மீ மற்றும் 6 செ.மீ என்ற அளவில் உடலின் உயரம் அதிகரிக்கும்.

தலை மற்றும் மார்பின் சுற்றளவு – குழந்தை பிறப்பின் போது குழந்தையின் தலைசுற்றளவு 34 செ.மீராக இருக்கும். 6-9 மாதத்திற்கு பிறகு மார்பின் சுற்றளவு அதிகரித்து தலையின் சுற்றளவை விட அதிகமாக இருக்கும். குழந்தை சரிவர போஷிக்கப்படாமலிருப்பின் மேற்கூறிய வண்ணம் மார்பின் சுற்றளவு தலையின் சுற்றளவை விட அதிகரிக்க 3 முதல் 4 வருடங்கள் வரை எடுத்துக்கொள்ளும்.

நடுக்கையின் (புயத்தின்) சுற்றளவு – குழந்தையின் கைகள் பக்கவாட்டில் ஓய்வெடுக்கும் நிலையில் உள்ளபோது, புயத்தின் நடுவில் அதன் சுற்றளவு அளக்கப்பட வேண்டும். அவ்வாறு அளக்கும் போது, அளக்கும் டேப்பை மெதுவாக, மென்மையாக, குழந்தையின் உடற்திசுக்களை அழுத்தாவண்ணம் புயத்தில் நடுப்பகுதியில் வைத்து அளவீடு செய்ய வேண்டும். பிறந்ததிலிருந்து ஒரு வருடம் வரை மிக அதிகமான வளர்ச்சி காணப்படும். அதாவது 11 செ.மீ-லிருந்து 12 செ.மீ வரை சுற்றளவில் வளர்ச்சி காணப்படும். நன்கு போஷிக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகளின் புயத்தின் சுற்றளவானது ஓராண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை சுமார் 16-லிருந்து 17 செ.மீ அளவிலேயே இருக்கும். இந்த காலகட்டங்களில் குழந்தையின் உடலில் உள்ள கொழுப்பு, தசைகளினால் மாற்றப்படுகிறது. தேவைப்படும் அளவின் 80 சதத்திற்கு அதாவது 12.8 செ.மீ கீழாக இருந்தால் இது மிதமானது முதல் மோசமான ஊட்டச்சத்து குறைபாட்டினை சுட்டிக்காட்டுகிறது.

அனைத்து ரீதியிலும் குழந்தையின் மேம்பாடு

குழந்தையின் உடல் வளர்ச்சியோடு கூட மன வளர்ச்சி மற்றும் புத்திசாலித்தனம் இவற்றைக் கூட கண்காணிப்பது அவசியம். இவற்றைவிட வளர்ச்சிக் குறியீடுகள் பயன்படுத்தி, குழந்தையின் உடல், மன, புத்தி வளர்ச்சியைக் கணக்கிட, சுகாதார நலப் பணியாளர்கள் தாயையும், பிற குடும்ப நபர்களையும் பயிற்றுவிக்க வேண்டும்.
482936865

Related posts

கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சி பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்!!!

nathan

குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன தெரியுமா?…

sangika

தாய்மைக்குப் பிறகும் ஃபிட்டாகலாம்!

nathan

கர்ப்ப காலத்தில் பெண்கள் மீன் சாப்பிடலாமா?

nathan

கர்ப்பிணி பெண்களுக்கு செல்போனால் ஆபத்து

nathan

பெண்கள் போலிக் ஆசிட் மாத்திரைகளை சாப்பிட்டால் குழந்தைகளில் பிறவி கோளாறை தடுக்கலாம்

nathan

கர்ப்பிணிகளே பிளாஸ்டிக் – டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிருங்கள்

nathan

தாய்ப்பால், தாய்க்கும், குழந்தைக்கும் பாசப்பிணைப்பை உருவாக்கும்

nathan

பிரசவத்திற்கு பின்னரான உடல் பராமரிப்பு

sangika