29.8 C
Chennai
Thursday, Nov 14, 2024
mask 1527055681
முகப் பராமரிப்பு

உங்க முகம் எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா?

அனைவருக்குமே எப்போதும் அழகாகவும், இளமையான தோற்றத்துடன் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக பலர் தங்கள் சருமத்திற்கு பல்வேறு சரும பராமரிப்புப் பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் அனைவருக்குமே கெமிக்கல் கலந்த சரும பராமரிப்பு பொருட்கள் நல்ல பலனைத் தருவதில்லை. அதோடு அந்த பொருட்களால் சில பக்க விளைவுகளையும் சந்திப்பார்கள். ஆனால் இயற்கை வழிகளின் மூலம் சரும அழகை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டால், சருமம் இயற்கையாகவே பளிச்சென்று அழகாக இருக்கும்.

அதுவும் நாம் சாப்பிடும் பழங்கள் சருமத்தில் மாயங்களை ஏற்படுத்தக்கூடியவை. அதற்கு பழங்களை சாப்பிடுவதோடு, அவற்றைக் கொண்டு ஃபேஸ் பேக் அல்லது ஃபேஸ் மாஸ்க் போடலாம். இதனால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பரு வடுக்கள் போன்றவை மறைந்து, சருமம் அழகாகவும் பளிச்சென்றும் இருக்கும். இப்போது எந்த பழங்களை எல்லாம் சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமம் பொலிவோடு இருக்கும் என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வாழைப்பழம்

வறட்சியான சருமத்தைக் கொண்டவரா? அப்படியானால் வாழைப்பழத்தை உங்கள் சருமத்திற்கு பயன்படுத்துங்கள். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், சரும வறட்சியைப் போக்கி, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும். மேலும் வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின்கள், சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கும். அதற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் சிறிது தயிர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

பப்பாளி

உங்களுக்கு கருவளையங்கள் இருந்தால், பப்பாளி உங்கள் சருமத்தில் மாயங்களை ஏற்படுத்தும். பப்பாளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி, ப்ரீ ராடிக்கல்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். கூடுதலாக, பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் நொதி இறந்த செல்களை நீக்கி, செல்களை புதுப்பிக்க உதவும். அதற்கு சிறிது நன்கு கனிந்த பப்பாளி துண்டை மசித்து, அத்துடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கபவ வேண்டும்.

ஆரஞ்சு

சிட்ரஸ் அமிலம் மற்றும் வைட்டமின் சி அதிகம் கொண்ட ஆரஞ்சு, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்திற்கு நல்ல பொலிவைத் தரும். கூடுதலாக, இது கொலாஜன் உற்பத்திக்கு உதவி புரிந்து சருமத்தில் உள்ள சுருக்கங்களைக் குறைக்கும். அதற்கு ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி பொடி செய்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவு சேர்த்து நீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இன்னும் உடனடி சரும பொலிவு கிடைக்க, தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆப்பிள்

காற்று மாசுபாடு மற்றும் சூரிய ஒளியால் சருமம் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமானால், ஆப்பிளை முயற்சிக்கலாம். ஆப்பிளில் காப்பர் உள்ளது. இது சருமத்தில் மெலனின் உற்பத்திக்கு உதவி சருமத்திற்கு பொலிவைத் தரும் மற்றும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும். அதற்கு மிக்சரில் பாதி ஆப்பிளை போட்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அரைத்து, அதைக் கொண்டு சருமத்தை மென்மையாக தேய்க்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும்.

ஸ்ட்ராபெர்ரி

சென்சிடிவ் சருமத்தைக் கொண்டவர்கள் மற்றும் அலர்ஜி பிரச்சனை உள்ளவர்களுக்கு ஸ்ட்ராபெர்ரி சிறந்தது. இதில் உள்ள வைட்டமின் சி சருமத்தில் எவ்வித வீக்கத்தையும் ஏற்படுத்தாது மற்றும் இது சரும செல்களை ஆரோக்கியமாக்கி, சருமத்தை பொலிவாக்கும். மேலும் ஸ்ட்ராபெர்ரியில் சாலிசிலிக் அமிலம் மற்றும் எலாஜிக் அமிலம் உள்ளது. இது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளைக் குறைக்கும். அதற்கு சில ஸ்ட்ராபெர்ரி பழங்களை அரைத்து, அத்துடன் சிறிது தயிர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து, நன்கு காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க… பிரபலமாகி வரும் லைட்-வெயிட் மேக்கப்

nathan

முகப்பரு, தோல் சுருக்கத்தை போக்கும் கொத்தமல்லி

nathan

முகம் கழுவ சோப்பிற்கு பதிலாக கடலை மாவு பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்!!!

nathan

அவரவர் முக அமைப்பிற்கேற்ற டிப்ஸ்!…

sangika

உங்களுக்கு தெரியுமா சரும பிரச்சனைகளைப் போக்கும் மஞ்சள்!

nathan

வெறும் 1 மணிநேரத்தில் நிரந்தரமான அழகான புருவம் வேண்டுமா? அழகை மேம்படுத்தலாம்

nathan

ரெடிமேட் கொலாஜன் மாஸ்க்

nathan

மின்னல் வேக அழகுக் குறிப்புகள் தெரிய வேண்டுமா?

nathan

வீட்டிலேயே Facial செய்வது எப்படி ?

nathan