குழந்தை பிறந்தது முதல் வளர்ந்து ஆளாகும் வரை பெற்றோருக்கு அவர்களின் மீதான அக்கறையும், பாசமும் குறையவே குறையாது. அதிலும், குழந்தை நன்கு ஆரோக்கியமாக, உயரமாக, சரியான எடையுடன் இருக்க வேண்டும் என்பதிலும் மிகுந்த கவனம் செலுத்துவது வழக்கம். அப்படிப்பட்ட அதிகப்படியான கவனிப்பு சில சமயங்களில் பிரச்சனையாக முடியலாம்.
மற்ற குழந்தைகளுடன் ஒருபோதும் உங்கள் குழந்தைகளை ஒப்பிடவே கூடாது. ஆனால், அதுபோன்று ஒப்பிடும் வேளைகளில், ஒரே வயதில் இருக்கும் பிற குழந்தைகளை விட உங்களது குழந்தை உயரமாக இருந்தால், அனைத்து பெற்றோரும் சந்தோஷப்பட தான் செய்வார்கள். ஆனால், அது தவறான ஒன்று. பிற குழந்தைகளை விட உங்களது குழந்தை உயரமாக இருந்தால், அவர்களுக்கு எதிர்காலத்தில் ஏதாவது ஆரோக்கிய கேடு ஏற்பட வாய்ப்பிருப்பதை உணர்த்துவதாகும்.
ஆய்வு
ஒரு புதிய ஆய்வின்படி, ஒப்பீட்டளவில் பார்க்கும் போது, உயரமாக இருக்கக்கூடிய 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், எதிர்காலத்தில் அதிக எடை மற்றும் உடல் பருமன் பிரச்சனைகளை சந்திக்க அதிக வாய்ப்பு இருக்கக்கூடும் என தெரிவிக்கிறது. உடல் பருமன் குறித்து வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சியின் ஆரம்ப காலத்தில் 2 முதல் 13 வயது வரை உள்ள சுமார் 2.8 மில்லியன் குழந்தைகளின் சுகாதார பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் சராசரியாக 4 ஆண்டுகளுக்குப் பிறகு மறு ஆய்வு செய்யப்பட்ட போது, உயரமான குழந்தைகள், உயரம் குறைவான குழந்தைகளுடன் ஒப்பிடும் போது, அதிக உடல் நிறை குறியீட்டைக் (Body mass index) கொண்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
“இந்த சங்கத்தின் பாதி பகுதியில், குழந்தையின் ஆரம்ப உடல் நிறை குறியீடானது, சுயாதீனமாக இருந்தது. எனவே, எந்த குழந்தை உடல் பருமனாக மாறும் என்பதை மிகத் துல்லியமாக கண்டறிய, அவர்களின் உயரத்தைப் பயன்படுத்துவது ஒரு எளிய வழி” என்பதை ஆய்வின் முதன்மை ஆசிரியர் டேவிட் எஸ் ஃப்ரீட்மேன், தெரிவித்துள்ளார்.
பல குறுக்கு வெட்டு ஆய்வுகள், குழந்தை பருவத்தின் உயரமானது, உடல் நிறை குறியீட்டெண் (பி.எம்.ஐ) மற்றும் கொழுப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது என்பதைக் காட்டுகின்றன. குழந்தைகளின் உயரம் பெரியவர்களின் பி.எம்.ஐ உடன் இணைக்கப்பட்டுள்ளதாக இரண்டு நீளமான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரண்டாவது ஆய்வில், அதிகப்படியான உயரம் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு வலுவாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தைகளை ஆரோக்கியமாக வைக்க பெற்றோர் என்ன செய்யலாம்?
ஒரு குழந்தை அதிக எடை கொண்டவராகவோ அல்லது உடல் பருமனாகவோ இருக்கும் பட்சத்தில், அவர்கள் வளரும் போது ஆரோக்கியமான எடையை பராமரிக்க பெற்றோர் நிறைய விஷயங்களில் உதவலாம். ஆரோக்கியமான எடையுள்ள குழந்தைகள் வலிமையாக, சிறந்த அறிவாற்றலுடன், அதிக தன்னம்பிக்கையுடன் இருக்கின்றனர். மேலும், எதிர்காலத்தில் அவர்களுக்கு இதய நோய், டைப் 2 நீரிழிவு போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உடல் பருமனான குழந்தைகள், தங்களது சக வயது நண்பர்களால் கேலி, கிண்டலுக்கு ஆளாக நேரிடும்.
குழந்தைகளின் ஆரோக்கியத்தை காக்க பெற்றோர் மேற்கொள்ள வேண்டியவைகள்:
குழந்தைகளின் ஆரோக்கியத்தை காக்க பெற்றோர் மேற்கொள்ள வேண்டியவைகள்:
காய்கறிகள் மற்றும் பழங்கள்
உங்களது குழந்தையை ஆரோக்கியமான குழந்தையாக வளர்க்க வேண்டுமென்றால், அதற்கு நீங்கள் முதலில் ஆரோக்கியமானவற்றை சாப்பிட கொடுக்க வேண்டும். குறிப்பாக, காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானிய வகைகளையும் தொடர்ந்து சாப்பிட கொடுக்க வேண்டும்.
இறைச்சி
கொழுப்பு குறைந்த இறைச்சி, கோழி இறைச்சி, மீன், பீன்ஸ், பயறு வகைகள், பால் பொருட்கள் (கொழுப்பு குறைந்த பால் பொருட்கள்) ஆகியவற்றை உங்கள் குழந்தைகளின் உணவில் தொடர்ந்து சேர்த்து வர வேண்டும். சர்க்கரை குறைவான பானங்கள், உணவுகள் மற்றும் சாக்சுரேட்டட் கொழுப்பு போன்றவற்றையும் உணவில் சேர்க்க மறக்க வேண்டாம்.
ஆரோக்கியமானவற்றை விரும்ப செய்வது
உங்கள் குழந்தை விரும்பி சாப்பிடும் உணவாக, ஆரோக்கியமான உணவுகளை செய்து கொடுங்கள். அதற்கு, எப்போதும் ஒரே மாதிரியாக சமைக்காமல், உங்கள் சமையல் முறைகளில் சிறிது மாற்றத்தை கொண்டு வரவும். அதன் மூலம், உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.
உணவில் கவனம்
உங்கள் குழந்தையை உண்ணும் உணவில் கவனம் செலுத்த செய்வது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால், உணவில் கவனம் செலுத்தி சாப்பிடுவதால் ஏராளமான ஆரோக்கிய பலன்கள் கிடைக்கப் பெறும். எனவே, உணவு உண்ணும் போது, டி.வி. பார்ப்பது, மொபைல் பார்ப்பது என எதுவும் கூடவே கூடாது.
உடற்பயிற்சியை பழக்கப்படுத்துங்கள்
தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய உங்கள் குழந்தையை பழக்கப்படுத்துங்கள். ஒவ்வொரு குழந்தையும் தினந்தோறும், 60 நிமிடங்களுக்காவது மிதமான முதல் தீவிர உடல் செயல்பாட்டில் ஈடுபட வேண்டும். எனவே, சிறு சிறு உடற்பயிற்சி செய்வது, உங்களது தினசரி வீட்டு வேலைகளில் பங்கு பெறுவது என உங்கள் குழந்தையை ஊக்கப்படுத்துங்கள். தீவிர நடைப்பயிற்சி, நடனம், ஸ்கிப்பிங் போன்ற சில விளையாட்டுகளை தினந்தோறும் விளையாடினாலே போதுமானது.
அதிக தூக்கம் தேவை
மேலே கூறிய அனைத்தையும் செய்வதுடன் சேர்த்து, உங்கள் குழந்தையை நீண்ட நேரம் தூங்கச் செய்யுங்கள். மேலும், எதுவும் செய்யாமல் வெட்டியாக உட்கார்ந்திருப்பதை தவிர்க்க செய்யுங்கள். உடல் செயல்பாட்டுடன் கூடிய விளையாட்டை விளையாட ஊக்குவிப்பது, அவர்களோடு விளையாட நேரம் ஒதுக்குவது என இருப்பதன் மூலம் அவர்களது ஆரோக்கியத்தை காத்திடலாம்.