26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
7 bedwetting 05 1
மருத்துவ குறிப்பு

உங்க குழந்தைக்கு இந்த அறிகுறியெல்லாம் இருந்தா அலட்சியப்படுத்தாதீங்க..

டைப் 1 நீரிழிவு அல்லது சிறார் நீரிழிவு குழந்தைகளில் பொதுவானதாகவும் மற்றும் பெரியவர்களுக்கு மிகவும் அரிதானதாகவும் ஏற்படக்கூடியது. ஒரு குழந்தையின் அல்லது இளம்பருவத்தினரின் உடலில் இன்சுலின் எதிர்ப்பு உருவாக்கும் போது நீரிழிவு ஏற்படக்கூடும். அதாவது, உடலானது இன்சுலின் உற்பத்தியை செய்யாமல் போகும் போதோ அல்லது அது இன்சுலினை எதிர்க்கும் போது உண்டாகக்கூடிய நிலையாகும். இந்த இரண்டு நிலையிலுமே, இரத்தத்தில் உள்ள சர்க்கரையானது வளர்சிதை மாற்றத்தை அனுமதிக்காது.

இந்த நாட்பட்ட நோயின் அறிகுறிகள் பற்றி குழந்தைகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, தற்போது நாம் பார்க்க போகும் சில அறிகுறிகளை உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் பார்த்தால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம். டைப் 1 நீரிழிவு நோயின் முன் அறிகுறிகளை பற்றி பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குழந்தைகளில் காணப்படும் டைப் 1 நீரிழிவு நோயின் அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.

குழந்தைகளில் காணப்படும் டைப் 1 நீரிழிவு நோயின் அறிகுறிகள்:

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

உங்கள் குழந்தை திடீரென்று, எப்போதும் இல்லாத பழக்கமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க ஆரம்பித்தால் உடனே கவனியுங்கள். இதுபோன்ற செயல்கள் தொடரும் பட்சத்தில், அதன் பின்னால் இருக்கும் மருத்துவ காரணத்தை கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும். அடிக்கடி சிறுநீர் கழித்தல் என்பது குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய நீரிழிவு நோயின் முதன்மை அறிகுறிகளில் ஒன்றாகும்.

அதிகப்படியான தாகம்

அடிக்கடி சிறுநீர் கழிப்பதால், உடலில் உள்ள நீர் பற்றாக்குறை ஏற்பட வழிவகுக்கக்கூடும். எனவே, அதனை சரிசெய்யும் விதமாக, அதிகப்படியான தாகம் உண்டாகும். நிறைய நீர் குடிப்பது என்பது ஒரு நல்ல பழக்கம் தான் என்றாலும், திடீரென அதிக அளவு நீரை உட்கொள்வது ஒரு நல்ல அறிகுறி அல்ல. எனவே, உங்கள் குழந்தை ஆரம்ப கால நீரிழிவு நிலையில் இருக்கின்றனரா என்று மருத்துவரை உடனே அணுக வேண்டும்.

அதிகரித்த பசி உணர்வு

நாம் உண்ணும் உணவானது, குளுக்கோஸாக மாற்றப்பட்டு, உடலால் செரிக்கப்பட்டு ஆற்றலாக வெளிப்படும். பொதுவாகவே, நீரிழிவு நோயில், குளுக்கோஸ் முறிவு பாதிக்கப்படுவதன் காரணமாக உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கப் பெறாமல், எப்போதும் மந்தமாகவே உணர்வர். இதனால் தான், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிக பசியை உணர்கிறார்கள், அதிகமாகவும் சாப்பிடுகிறார்கள். டைப் 1 நீரிழிவு நோயின் பிற அறிகுறிகளுடன், அதிகப்படியான பசியை கண்டால் உடனே பரிசோதிக்க தவறாதீர்கள்.

மங்கலான பார்வை

நீரிழிவு நோயால், கண் பார்வை பாதிக்குமா என்று கேட்டால், நிச்சயம் பாதிக்கும் என்பது தான் பதில். உடலில் இருக்கும் திரவங்கள் தான் கண்களுக்கான உணவாக செயல்படுகின்றன. இது பார்வைக்கு காரணமான கண் லென்ஸின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகிறது. அதிகரித்த இரத்த சர்க்கரை அளவின் காரணமாக, திரவங்களின் அளவு குறைந்து, பார்வை மங்கலாகிறது. இருப்பினும், இந்த மாற்றம் இரத்த குளுக்கோஸ் அளவோடு மாறுபடுகிறது.

எரிச்சல் மற்றும் மனநிலை மாற்றங்கள்

இரத்த சர்க்கரையின் ஏற்ற இறக்கங்கள் ஒரு நபரின் மனநிலையையும் பாதிக்கின்றன என்பது உண்மை. இதனால், குழந்தைகள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது, அதிக அளவு உணர்ச்சிவசப்பட வைக்கும். அதுவே, சர்க்கரை அளவு குறையும் போது தாழ்வு மனப்பான்மையுடன் கூடிய, சோக உணர்வு உண்டாகும். குழந்தைகளிடையே, ஏற்ற இறக்கமான மனநிலையை காண்பது சாதாரணமான ஒன்று என்பதால், நீரிழிவு நோயின் அறிகுறியாக அவை கவனிக்கப்படாமல் போகக்கூடும். எனவே, பெற்றோர் தான் தங்களது குழந்தைகளின் மீது அதிக அக்கறை செலுத்தி பார்த்து கவனிக்க வேண்டும்.

சோர்வு

குழந்தைகள் ஆற்றலின் மறு உருவமாக இருக்கிறார்கள். ஆனால் டைப் 1 நீரிழிவு நிலையானது, அவர்களின் ஆற்றல் அளவைக் குறைப்பதோடு, அவர்களை மிகவும் சோர்வாக உணர செய்கிறது. இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை, உடலால் பயன்படுத்தப்படாமல் போவதால், உடலுக்கு தேவையான ஆற்றல் வெளிப்படுவதில்லை. உங்களுடைய சுறுசுறுப்பான, சுட்டிக் குழந்தை திடீரென்று பலவீனமாகி, சோர்வாக காணப்பட்டால் அதனை அலட்சிப்படுத்தாதீர்கள். உடனே, நீரிழிவு நோய் உள்ளதா என பரிசோதித்து விடுங்கள்.

படுக்கை ஈரமாக்குதல்

ஒருபோதும் படுக்கையை ஈரமாக்காத உங்கள் குழந்தை, திடீரென படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கின்றனர் என்றால், அது ஒரு ஆபத்தான அறிகுறியாகும். அடிக்கடி சிறுநீர் கழிப்பது நீரிழிவு நோயின் முதன்மை அறிகுறி என்பதை தொடக்கத்திலேயே நாம் பார்த்தோம். அதன் காரணமாக கூட உங்கள் குழந்தை படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கலாம்.

மூச்சு விடும் போது பழ வாசனை வருவது

ஒருவரது, உடல் ஆரோக்கியத்தை பற்றி தெரிந்து கொள்ள, அவரது வாய்வழி ஆரோக்கியமே போதுமானது. ஒருவர் மூச்சு விடுவதை வைத்து, அவருக்கு நீரிழிவு நோய் உள்ளதா, இல்லையா என்பதை கூறிவிட முடியும். எப்படியென்று கேட்கிறீர்களா? உடலில் உள்ள குளுக்கோஸ் பயன்படுத்தப்படாத போது, கொழுப்பை பயன்படுத்தி ஆற்றானலானது வெளிப்படும். இந்த செயல்பாட்டின் போது, கீட்டோன்கள் வெளியிடப்படுகின்றன (கீட்டோ உணவு முறையில் நடைபெறுவதை போன்றது). இவை தான் பழ வாசனையை வர காரணம். கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கலாம். ஆனால், உங்கள் குழந்தை மூச்சு விடும் போது பழ வாசனை வந்தால் உடனே அதனை பரிசோதித்திட வேண்டும்.

Related posts

உங்கள் மகள் காதல்வசப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள்?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கருக்கலைப்பு பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள்!

nathan

இந்த எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்

nathan

உடல் ஆரோக்கியத்தை காக்க ஆயில் புல்லிங் செய்யுங்க

nathan

உங்களுக்கு தெரியுமா வலிப்பு வந்தவருக்கு சாவியை விடவும் வேறு வழி உண்டு

nathan

. ஆச்சரியப்படுவீங்க..வீட்டுல 2 பிரியாணி இலையை எரிங்க.. 10 நிமிடம் கழிச்சு என்ன நடக்குதுன்னு பாருங்க.

nathan

வாயுத் தொல்லையால் தர்மசங்கடமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

நம் பண்டைய மருத்துவ பாரம்பரிய மருத்துவ சிகிச்சைக்கு பாரா முகம் ஏனோ?

nathan

கருத்தரிக்க விரும்பும் தம்பதியர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

nathan