25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
6 sitzbath
மருத்துவ குறிப்பு

பைல்ஸ் வலி தாங்கமுடியலையா?இதோ எளிய நிவாரணம்

பைல்ஸ் என்னும் மூல நோயைப் பற்றி பேச பெரும்பாலான மக்கள் வெட்கப்படுவார்கள். ஆனால் பைல்ஸ் பிரச்சனையைப் புறக்கணித்தால், அது தாங்க முடியாத வலியை உண்டாக்கி, வெடித்து நிலைமையையே மோசமாக்கிவிடும். ஆனால் ஓர் நற்செய்தி என்னவெனில், பைல்ஸ் பிரச்சனையை இயற்கையாகவே வீட்டிலேயே சரிசெய்யலாம். அதுவும் ஆரம்பத்திலேயே இதைக் கண்டறிந்து, சிகிச்சை மேற்கொண்டால் தடுத்திடலாம்.

ஒருவருக்கு பைல்ஸ் பல்வேறு காரணங்களால் வரலாம். அதில் முக்கியமான ஒன்று என்றால் நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை. நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையை தினந்தோறும் அனுபவித்தால், அதை உடனே சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள். இப்போது பைல்ஸ் என்னும் மூல நோய்க்கான சில கை வைத்தியங்களைக் காண்போம்.

உலர்ந்த அத்திப்பழம்

மலச்சிக்கல் பிரச்சனையை அதிகம் சந்திப்பவர்களுக்கு தான் பைல்ஸ் அல்லது மூல நோய் வரக்கூடும். எனவே இத்தகைய மலச்சிக்கல் பிரச்சனையைத் தவிர்க்க 2-3 உலர்ந்த அத்திப்பழத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இப்படி 2-3 வாரங்களுக்கு சாப்பிட்டால், மலச்சிக்கல் நீங்கி மூல நோயில் இருந்தும் விடுபடலாம்.

முள்ளங்கி ஜூஸ்

முள்ளங்கி ஜூஸ் பைல்ஸ் பிரச்சனைக்கு மிகவும் அற்புதமான பானம். தினமும் காலை மற்றும் மாலை அரை கப் முள்ளங்கி ஜூஸ் குடிக்க வேண்டும். இப்படி ஒரு மாதம் குடித்து வருவது மூல நோய்க்கு மிகச்சிறந்த வீட்டு வைத்தியமாகும்.

கொத்தமல்லி ஜூஸ்

பைல்ஸ் என்னும் மூல நோய் உள்ளவர்கள், ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி இலை சாற்றினை ஒரு டீஸ்பூன் சர்க்கரையுடன் சேர்த்து, தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வர மூல நோய் விரைவில் குணமாகும். மூல நோயால் மிகவும் அவதிப்படுபவர்கள் வேண்டுமானால் இதை முயற்சித்துப் பாருங்கள்.

புதினா ஜூஸ்

புதினா உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். இத்தகைய புதினாவின் சாற்றினை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தினமும் 3 முறை சாப்பிட்டு வந்தால், பைல்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

சீரக பேஸ்ட்

பைல்ஸ் பிரச்சனை இருப்பவர்கள் நிம்மதியாக உட்கார முடியாத அளவில் ஆசன வாய் பகுதியில் கடுமையான வலியை சந்திப்பார்கள். அப்படி வலி சந்திக்கும் போது சீரகத்தை நீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, ஆசன வாயில் பூசினால், வலி குறையும்.

வெதுவெதுப்பான நீர்

ஆசன வாயில் கடுமையான வலியை சந்திக்கும் போது, வெதுவெதுப்பான நீரில் உட்காருங்கள். ஏனெனில் இதனால் ஆசன வாயில் உள்ள தசைகள் தளர்வந்து, வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு ஒரு அகலமான வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் பதினைந்து நிமிடம் உட்கார வேண்டும். அதன் பின் ஆசன வாய் பகுதியை சுத்தமாக துடைத்துவிட வேண்டும். இப்படி தினமும் 3 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ ஆயில் ஆசன வாய் பகுதியில் இருந்து கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை நீக்கி சுத்தம் செய்வதோடு, அழற்சி/காயங்களையும் குணப்படுத்தும். உங்களுக்கு பைல்ஸ் இருந்தால், 2-3 துளிகள் டீ-ட்ரீ ஆயிலுடன் ஒரு டீபூன் ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து, பஞ்சுருண்டையில் நனைத்து ஆசன வாயில் தடவ வேண்டும். இப்படி தினமும் 3 முறை செய்ய நல்ல நிவாரணம் கிடைக்கும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் காயங்களை குணப்படுத்தும் பண்புகள் உள்ளதால், இது மூல நோய்க்கு சிறந்த மருந்துப் பொருளாக கூறப்படுகிறது. வெளி மூலம் உள்ளவர்கள், கற்றாழையின் ஜெல்லை எடுத்து, அதை ஆசன வாயில் தடவி பதினைந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். உள் மூலம் உள்ளவர்கள் கற்றாழை இலையின் தோல் மற்றும் முட்களை நீக்கிவிட்டு, ஜெல்லை ஃப்ரிட்ஜில் வைத்து, பின் அதை ஆசன வாயில் சொருக வேண்டும். இப்படி தினமும் 3 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய்

அனைவரது வீட்டிலும் இருக்கும் ஓர் எண்ணெய் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான். ஏனெனில் இதில் மரத்துப் போகும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் இது ஆசன வாயில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி விரைவில் குணமாக உதவும். அதற்கு சுத்தமான தேங்காய் எண்ணெயை ஆசன வாயில் தடவ வேண்டும். இப்படி தினமும் 3 முறை செய்து வாருங்கள்.

பூண்டு

பூண்டு பைல்ஸ் பிரச்சனைப் போக்கவல்ல மிகச்சிறந்த பொருள். இது பைல்ஸ் பிரச்சனையைக் குணப்படுத்துவதோடு மட்டுமின்றி, தடுக்கவும் வல்லது. இது ஆசன வாயில் உள்ள வலியைக் குறைத்து, காயங்களை விரைவில் குணப்படுத்தும். அதற்கு நற்பதமான பூண்டு பற்களை ஒரு கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, அதில் பஞ்சுருண்டைகளைப் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். வெளிமூலம் உள்ளவர்கள் இதில் ஒரு பஞ்சுருண்டையை எடுத்து ஆசன வாயில் தடவ வேண்டும். உள்மூலம் உள்ளவர்கள் ஒரு பூண்டு பல்லின் தோலுரித்து, அதை லேசாக நசுக்கி அதை ஆசன வாயில் சொருகி இரவு முழுவதும் வைத்திருங்கள்.

Related posts

நீங்க கர்ப்பமாவதற்கு முன்பு அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…பித்தப்பையில கல் இருந்தா இந்த 5 வகை உணவுகளை சாப்பிடவே கூடாது!

nathan

சிறுநீரகக் கற்கள் உருவாவதை எப்படி தெரிந்துகொள்வது?

nathan

120 நாட்கள் தொடர்ந்து கறிவேப்பிலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…வாய்ப்புண்களை உடனே போக்க இத ட்ரை பண்ணுங்க!

nathan

முட்டை ஓட்டைக் கொண்டு சொத்தைப் பற்களைப் போக்குவது எப்படி தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாத மாத்திரைகள்

nathan

சளி இருமலை போக்கும் தூதுவளை!

nathan

உங்களுக்கு தெரியுமா மூட்டுவலியில் இருந்து விடுபட உதவும் நல்லெண்ணெய் மசாஜ்!

nathan