கொள்ளு சாப்பிட்டால், உடல் வலிமை பெறும் என்று நம் முன்னோர்கள் சொல்வதை கேட்டிருப்பீர்கள். ஆனால் பலருக்கு கொள்ளு என்றால் பிடிக்காது. அதற்கு அதனை அவர்கள் சரியான முறையில் சமைத்து சாப்பிடாததே காரணம் என்று சொல்லலாம். கொள்ளுவை விரும்பி சாப்பிட வேண்டுமெனில், அதனை குழம்பு செய்து சாப்பிட வேண்டும்.
தேவையான பொருட்கள்
கொள்ளு – 1 கப்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
சின்ன கத்திரிக்காய் – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 4
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
புளி – சிறிது
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளு, கத்திரிக்காய், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து மூடி வைத்து, 5 விசில் விட்டு இறக்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித் தூள், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் வேக வைத்துள்ள கொள்ளை சேர்த்து கொதிக்க விட்டு இறக்க வேண்டும். அடுத்து அவற்றை மிக்ஸியில் போட்டு, அத்துடன் புளி சேர்த்து அரைத்து, சாதத்துடன் பரிமாறினால், சுவையான கொள்ளு குழம்பு ரெடி!!