24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
அறுசுவை​பொதுவானவை

ஒரிஜினல் சீன முட்டை ரோல்ஸ் / சைனீஸ் எக் ரோல்ஸ்

recipes_originalxl_5bc13f2f-40a0-481a-a037-37f21f01a2bdதேவையான பொருட்கள்
20 பேர் சாப்பிடும் அளவு தயாரிக்கலாம்
4 தேக்கரண்டி தாவர எண்ணெய்
3 முட்டைகள், நன்கு அடித்து கலக்கிக் கொள்ளவும்
1 நடுத்தர அளவுடைய‌ முட்டைக்கோஸ், நன்றாக நறுக்கிக் கொள்ளவும்
1/2 கேரட், சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
1 (8 அவுன்ஸ்) நறுக்கிய மூங்கில் தளிர்கள்
30 கிராம் உலர்ந்த, மரக்காது காளான், துண்டுகளாக்கி ஈரப்பதமில்லாமல் வைத்துக் கொள்ளவும்
455 கிராம் சைனீஸ் பார்பீக்யூ அல்லது வறுத்த பன்றி, தீக்குச்சி அளவிற்கு வெட்டிக் கொள்ளவும்
2 பச்சை வெங்காயம், மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும்
2 1/2 தேக்கரண்டி சோயா சாஸ்
1 டீஸ்பூன், உப்பு
1 தேக்கரண்டி சர்க்கரை
1/2 டீஸ்பூன் மோனோ சோடியம் க்ளுட்டமேட் (MSG)
1 (14 அவுன்ஸ்) பொட்டலம் முட்டை ரோல் உறை
1 முட்டை வெள்ளைக் கரு, நன்கு அடித்து கலக்கிக் கொள்ளவும்
4 கப் எண்ணெய் வறுக்க, அல்லது தேவையான அளவு

செய்முறை:
ஒரு கடாயில் அல்லது பெரிய வாணலியில், நடுத்தர வெப்பத்தில் ஒரு தேக்கரண்டி தாவர‌ எண்ணெயை சூடுபடுத்திக் கொள்ளவும். இதில் முட்டை கலவையை ஊற்றி, கிளறாமல் அப்படியே நன்கு வேக வைக்கவும், இதே போல் இந்த முட்டையை திருப்பி போட்டு வேக வைக்கவும். இதை தனியே எடுத்து ஆறவைத்துக் கொண்டு, மெல்லிய கீற்றுகளாக‌ வெட்டிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் அல்லது பெரிய வாணலியில், அதிக வெப்பத்தில் மீதமுளள‌ தாவர‌ எண்ணெயை சூடுபடுத்திக் கொள்ளவும். இதில் முட்டைக்கோஸ் மற்றும் கேரட் சேர்த்து 2 நிமிடங்கள் வரை நன்கு வதங்கும் வரை சமைக்கவும். மூங்கில், காளான், பன்றி இறைச்சி, பச்சை வெங்காயம், சோயா சாஸ், உப்பு, சர்க்கரை, மற்றும் MSG சேர்த்து, சுமார் 6 நிமிடங்கள் மென்மையாக வேகும் வரை சமைக்கவும். வெட்டிய முட்டையை இதன் மீது போட்டு, இந்த கலவையை அடுப்பில் இருந்து இறக்கி ஒரு பானில் பரவலாக போட்டு, குளிர்சாதன பெட்டியில் சுமார் 1 மணி நேரம் வரை குளிர வைக்கவும்.
முட்டை ரோல்ஸ் செய்ய இப்போது பார்ப்போம். முட்டை ரோல்ஸ் உறையை ஒரு பரந்த இடத்தில் விரித்துக் கொண்டு ஒரு மூலையில் உங்களை நோக்கி வைத்துக் கொள்ளவும். இப்போது மேற்பரப்பிலிருந்து குளிர வைத்த கலவையை 3 தேக்கரண்டி அள்வு வைக்கவும். பின்னர் அடித்து வைத்துள்ள முட்டையின் வெள்ளைக் கருவை மேல் மற்றும் கீழ் முனையில் பிரஷினால் தடவி விட்டு முட்டை ரோல் மூடும் வரை மேல் இடது மற்றும் வலது பக்கங்களில் மடித்து வைத்து உலர்த்தவும். இந்த பிளாஸ்டிக் உறையை மூடி மடித்துக் கொள்ளவும். இதே போல் மீதி உள்ள கலவையையும் செய்து கொள்ளவும். ஒரு பெரிய கடாயில் 6 அங்குல அளவிற்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டு பொரிப்பதற்கு இதை 350 டிகிரி பாரன்ஹீட் (175 டிகிரி C) ல் சூடுபடுத்தவும். 3 அல்லது 4 முட்டை ரோலை  ஒரே சமயத்தில் போட்டு 5 முதல் 7 நிமிடம் வரை பொன்னிறமாக பொரித்து எடுத்து டிஸ்யூ பேப்பரில் போட்டு எண்ணெயை வடித்து பயன்படுத்தவும்.

Related posts

பனானா கேக்

nathan

முருங்கைக்கீரை புலாவ் ரெடி….

sangika

கோழி ரசம்

nathan

கணவனை அசத்த….. சூப்பரான கனவா மீன் தொக்கு!….

sangika

ஓம பொடி

nathan

உருளை கிழங்கு பொரியல்,–சமையல் குறிப்புகள்

nathan

வெந்தயக் கீரை ரசம்

nathan

இந்த தீபத் திருநாளில் உங்கள் வீட்டின் பலகாரம்!

nathan

வெற்றிலையில் நெல்லி ரசம் எப்ப‍டி வைப்ப‍து?…

sangika