22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
1756c9a8
அழகு குறிப்புகள்

சற்றுமுன் கருணாஸ் பட நடிகை கணவருடன் கைது

மஹாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக நடிகையும்,எம்.பி.யுமான நவ்நீத் ரானாவும், அவரது கணவர் சுயேச்சை எம்.எல்.ஏ.வுமான ரவி ரானாவும் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சிவசேனா கட்சித் தலைவரும், மஹாராஷ்டிர மாநில முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பு ஹனுமன் சாலீசா பாடப் போவதாக அமராவதி மக்களவைத் தொகுதி உறுப்பினர் நவ்நீத் ரானாவும், அவரது கணவரான சுயேச்சை எம்.எல்.ஏ.,வுமான ரவி ரானாவும் அறிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் அவர்கள் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து மும்பை போலீசார் சட்டம், ஒழுங்கை பாதிக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடக்கூடாது என நவ்நீத் ரானா தம்பதியினருக்கு எச்சரிக்கை விடுத்ததுடன் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் இல்லம், ரவி ரானா மற்றும் நவ்நீத் ரானா இல்லம் முன்பு பாதுகாப்பை பலப்படுத்தினர்.

இதனிடையே மும்பையில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதனால் சட்டம், ஒழுங்கிற்கு பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காக முதலமைச்சர் வீடு முன்பு ஹனுமன் சாலிசா பாடுவதை கைவிடுவதாக நவ்நீத் ரானா – ரவி ரானா கூறினர்.

இந்நிலையில் சிவசேனா கட்சியினர் மத நம்பிக்கையை புண்படுத்தியதாக அளித்த புகாரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்ற்இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

நவ்னீத் தமிழில் கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிக்பாஸ் அல்டிமேட்.. முதல் நாளிலேயே பாலாஜியை நாமினேட் செய்த சினேகன்!

nathan

அழகு ஆலோசனை!

nathan

இம்மலர் அழகுக்காகவும், தோட்டத்திற்காகவும் மட்டுமின்றி இதன் மகத்தான மருத்துவ குணங்களுக்காகவும் பெரிதும் பயிரிடப்படுகின்றது!…

sangika

மட்டன் நெய் சோறு

nathan

ஃபேஸ் மாஸ்க்

nathan

கருவளையம் போக்கும் எளிய மசாஜ்

nathan

கிர்ணி பழ பேஸ்பேக் சருமத்துக்குப் பொலிவையும் கொடுக்கிறது

nathan

எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்யுங்கள் கருமை ஓடிவிடும்.

nathan

உடல் எடையை குறைக்கனும்னா நீங்க கவனம் கொள்ள வேண்டிய உணவுகள்!

nathan