25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
tomato face p
முகப் பராமரிப்பு

சருமத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

குளிர்காலம் அனைவருக்குமே பிடித்த ஒரு பருவகாலம். இக்காலத்தில் கொளுத்தும் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து, வானிலை குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் குளிர்காலத்தில் குளிர்ச்சியான காற்றின் காரணமாக சருமம் அதிக வறட்சிக்கு உள்ளாகும். சருமம் அதிக வறட்சிக்கு உள்ளானால், பலவிதமான சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதோடு, சருமம் பொலிவிழந்து அசிங்கமாக காட்சியளிக்கும்.

மேலும் குளிர்காலமானது கோடையில் கருமையான சருமத்தை வெள்ளையாக்க ஏற்ற பருவகாலம் என்றும் கூறலாம். பலர் குளிர்காலத்தில் தங்களின் சருமத்தைப் பராமரிப்பதற்கு கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் அனைவருக்குமே இந்த கெமிக்கல் கலந்த பொருட்கள் நல்ல பலனைத் தரும் என்று கூற முடியாது. அதுவே இயற்கை வழியில் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்தால், அது நிச்சயம் நல்ல பலனைத் தரும். அதோடு சரும செல்களும் ஆரோக்கியமாக இருக்கும்.

பொதுவாக தக்காளி சாப்பிடுவது சருமத்திற்கு மிகவும் நல்லது. அதோடு அதைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களை கொடுத்தாலும், சருமம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும். இப்போது சரும கருமையைப் போக்கவும், சருமத்தை அழகாக பராமரிக்கவும் தக்காளியை எப்படி பயன்படுத்துவது என்பதைக் காண்போம்.

கண்களுக்கான தக்காளி மாஸ்க்

உங்கள் முகத்தில் அசிங்கமான தோற்றத்தைத் தரும் கருவளையங்கள் உள்ளதா? அதைப் போக்க பல பொருட்களையும் பயன்படுத்தியுள்ளீர்களா? இருப்பினும் எவ்வித பலனும் கிடைக்கவில்லையா? அப்படியானால் தக்காளின் தோல் நல்ல பலனைத் தரும். இதில் உள்ள வைட்டமின் சி சருமத்தை சுத்தம் செய்வதோடு, சருமத்தில் உள்ள முதுமைக்கோடுகளைக் குறைக்கும். அதற்கு தக்காளியின் தோலை கண்களைச் சுற்றி வைத்து ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனால் கருவளையங்கள் மாயமாய் மறையும்.

தக்காளி ஸ்க்ரப்

உங்கள் சருமத்தில் அதிக அழுக்குகள் இருப்பது போன்ற உணர்வு எழுகிறதா? அதாவது உங்கள் முகம் பொலிவிழந்து கருமையாக காணப்படுகிறதா? அப்படியானால் தக்காளி ஸ்க்ரப் பயன்படுத்துங்கள். அதற்கு தக்காளியை வெட்டி, அதை சர்க்கரை/நாட்டுச் சர்க்கரையில் தொட்டு கருமையாக காணப்படும் சருமத்தில் சிறிது நேரம் மென்மையாக தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.

தக்காளி மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்

உங்கள் சருமத்தை பொலிவோடும், பிரகாசமாகவும் ஜொலிக்க வைக்க வேண்டுமா? அப்படியானால் ஒரு டீஸ்பூன் தக்காளி விழுதுடன், 3-4 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, கருமையாக இருக்கும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். முக்கியமாக இந்த ஃபேஸ் பேக் வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு ஏற்றதல்ல.

தக்காளி மற்றும் தயிர் ஃபேஸ் பேக்

தக்காளியில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது மற்றும் இது ஒரு சருமத்தை பிரகாசமாக்கும் பொருளும் கூட. அத்தகைய தக்காளி சாற்றினை 2 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் கடலை மாவு மற்றும் ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி மாஸ்க் போட்டு வந்தால், சருமம் பிரகாசமாகவும், வெள்ளையாகவும் இருக்கும்.

தக்காளி மற்றும் தேன் மாஸ்க்

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தக்காளி கூழ் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தை சருமத்தில் காணலாம்.

Related posts

பெண்களே சீக்கிரம் வெள்ளையாகணுமா? கருப்பா இருக்கீங்களா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

இதை முயன்று பாருங்கள் – முட்டைகோஸ் பேஷியல்

nathan

எண்ணெய் சருமம் முகப்பருவை ஏற்படுத்துமா?

nathan

கண்ணுக்குக் கீழே கருவளையமா கவலை வேண்டாம்…..

nathan

உதட்டின் மேல் முடி வளர்ச்சியை நீக்க நிரந்தர தீர்வு இதை முயன்று பாருங்கள்

nathan

காலையில் தூங்கி எழும் போது முகம் பிரஷ்ஷாக இருக்க வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க…

nathan

நீண்ட நாட்கள் இளமையாக இருக்கணுமா..?அப்ப இத படிங்க!

nathan

முக பருக்கள், கரும்புள்ளிக்கு தீர்வு தரும் பாதாம் ஃபேசியல்…! சூப்பர் டிப்ஸ்..

nathan

சருமத்தில் எப்போதும் எண்ணெய் வடிகிறதா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan