என்னென்ன தேவை?
பச்சரிசி – 200 கிராம்,
பாசிப்பருப்பு – 100 கிராம்,
மிளகு – 20,
இஞ்சி 1 துண்டு,
சீரகம் – 1 டீஸ்பூன்,
நெய் – அரை கப்,
உப்பு தேவைக்கேற்ப,
முந்திரி பருப்பு – 10 முதல் 12 வரை,
கறிவேப்பிலை சிறிது,
பெருங்காயம் சிறிது.
எப்படிச் செய்வது?
அரிசி, பருப்பு இரண்டையும் களைந்து ஒரு பங்குக்கு 4 பங்கு தண்ணீர் சேர்த்து வேக விடவும். அது வெந்து வரும்போது உப்பு சேர்க்கவும். தனியாக வேறு ஒரு கடாயில் நெய் சேர்த்து, சூடானதும் சீரகம், பெருங்காயம், முந்திரி, மிளகு உடைத்து பொடித்த இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வேக வைத்த பொங்கலுடன் கலக்கவும். தேவைப்பட்டால் சிறிது நெய் சேர்க்கவும். சூரியனுக்குப் படைக்க வெண் பொங்கல் ரெடி.
குறிப்பு: பாசிப்பருப்பை சிலர் லேசாக வறுத்தும் சேர்க்கிறார்கள். சிலர் கடவுளுக்கு படைக்கும் நிவேதனத்தில் பெருங்காயம் சேர்ப்பது இல்லை.