28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
herbal tips for weight loss
எடை குறைய

உடல் எடையைக் குறைக்க சில புத்திசாலித்தனமான வழிகள் !!

உங்களால் உடல் எடையைக் குறைக்க முடியவில்லையா? எடையைக் குறைக்கும் மாத்திரைகள் மற்றும் இதர சிகிச்சைகளை மேற்கொண்டும் உடல் எடை குறையவில்லையா? முக்கியமாக உங்களால் எடையைக் குறைக்க டயட்டை பின்பற்ற முடியவில்லையா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்காகத் தான்.

உடல் எடையைக் குறைக்க டயட்டை மேற்கொள்ள முடியாவிட்டாலும், உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்கும் உணவுப் பொருட்கள் அல்லது பானங்களைக் எடுத்து வந்தால் தான், கொழுப்புக்கள் மற்றும் கலோரிகளை எரிக்க முடியும்.

இங்கு உடல் எடையைக் குறைக்க உதவும் சில எளிய வைத்திய முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அதனை மட்டும் பின்பற்றி வந்தாலே, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். ஆனால் இதனைப் பின்பற்றும் முன் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அது தான் நடக்கும்.

சீரகம்
சீரகத்தில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கும், அடிக்கடி பசி ஏற்படுவது குறையும். இதனால் உடல் எடை குறையும்.
எடுக்கும் முறை
சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை – 1/2
தண்ணீர் – 1 1/2 டம்ளர்
செய்முறை
இரவில் படுக்கும் போது நீரில் சீரகத்தைப் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, குளிர வைத்து, அதில் எலுமிச்சையை பிழிந்து, குடித்து வர வேண்டும். இப்படி தினமும் காலையில் செய்து வந்தால், 2 வாரத்தில் உடல் எடை குறைந்திருப்பதை நீங்களே காணலாம்.

எலுமிச்சை மற்றும் தேன்
ஒரே மாதத்தில் உடற்பயிற்சி அல்லது டயட் இல்லாமல் எடையைக் குறைக்க வேண்டுமெனில், தேன் மற்றும் எலுமிச்சை உதவும். எலுமிச்சை உடலை சுத்தப்படுத்துவதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, செரிமானத்தை மேம்படுத்தும். மேலும் எலுமிச்சையில் உள்ள பாலிஃபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து, எடையைக் குறைக்க உதவும். அத்தகைய எலுமிச்சையுடன் தேனைக் கலக்கும் போது, ஆரோக்கியமாக உடல் எடை குறையும்.
எடுக்கும் முறை
எலுமிச்சை – 1/2
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் – 1 டம்ளர்
செய்முறை:
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையைப் பிழிந்து, தேன் கலந்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, ஒரு வாரத்தில் எடையில் மாற்றத்தைக் காணலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்
உடல் பருமனை நினைத்து கவலைக் கொள்கிறீர்களா? அப்படியெனில் ஆப்பிள் சீடர் வினிகரைக் கொண்டு எடையை விரைவில் குறைக்கலாம். ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள பெக்டின் என்னும் பொருள், நீங்கள் அளவாக உணவை உட்கொள்ளச் செய்யும். மேலும் இதில் உள்ள அசிட்டிக் ஆசிட், கொழுப்புக்களை கரைத்து, எடையைக் குறைக்க உதவும்.
எடுக்கும் முறை
ஆப்பிள் சீடர் வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் – 1 டம்ளர்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வெதுவெதுப்பான நீரில் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் மாலை மற்றும் இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் குடித்து வர, ஒரு வாரத்தில் கொழுப்புக்கள் கரைந்து தொப்பை சுருங்கி, உடல் எடை குறைந்திருப்பதை உணர்வீர்கள்.

சுடுநீர்
சொன்னால் நம்பமாட்டீர்க்ள, தினமும் குளிர்ந்த நீருக்கு பதிலாக சுடுநீரைக் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து, கலோரிகள் அதிகம் எரிக்கப்பட்டு, உடல் எடை சீக்கிரம் குறையும். எனவே உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் சுடுநீரைக் குடியுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 9-10 டம்ளர் சுடுநீரைக் குடித்து வந்தால், உடல் எடை குறையும்.

பூண்டு
பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் சேர்மம், உடலில் சேர்ந்துள்ள ஆரோக்கியமற்ற கொழுப்புக்களை கரைத்து, உடலின் மெட்டபாலிச அளவை அதிகரித்து, கலோரிகளை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும். அதற்கு தினமும் 4-5 பற்களை பச்சையாக உட்கொள்ளலாம் அல்லது பாலுடன் சேர்த்தும் எடுத்து வரலாம்.
எடுக்கும் முறை
பூண்டு – 5 பற்கள்
பால் – 1 கப்
செய்முறை:
பூண்டு பற்களை பாலில் போட்டு, 20 நிமிடம் நன்கு வேக வைத்து, பின் பூண்டை அந்த பாலுடன் சேர்த்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், 2 வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம்.
herbal tips for weight loss

Related posts

நீங்க வேகமாக எடையை குறைக்கணுமா? அப்ப தினமும் நைட் இதெல்லாம் செய்யுங்க.

nathan

எடையை குறைக்க எட்டே வழிகள்,

nathan

உடல் எடையை குறைக்க நீச்சல் பயிற்சி

nathan

எப்படி உடல் எடையை குறைப்பது? இதோ அதற்கான வழிமுறைகள்

nathan

உடல் எடையைக் குறைக்க சில புத்திசாலித்தனமான வழிகள்!

nathan

விரைவில் உடல் எடையை குறைக்கும் 3 உடற்பயிற்சிகள்

nathan

சுவையான டயட் மிக்சர் செய்து பாருங்கள்….

sangika

தினமும் 100 கலோரி எரிக்க செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்

nathan

உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த இரவு நேர உணவுகள்

nathan