28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
15
மருத்துவ குறிப்பு

டென்டல் கிளிப்… டென் கைட்லைன்ஸ்!

டென்டல் கிளிப்… டென் கைட்லைன்ஸ்!
“கொஞ்சம் எடுப்பாகத் தெரியும் பற்களை உள்ளே தள்ள பரிந்துரைக்கப்படுவது, டென்டல் க்ளிப். பொருத்திக் கொள்வதோடு மட்டுமல்லா மல், அதன் பராமரிப்பும் சீராக இருந்தால்தான், வாய் சுகாதாரம் பாதுகாக்கப்படும்!” என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் டாக்டர் வித்யாவதி வெங்கடேஷ் பாபு, அதற்கான டிப்ஸ் தருகிறார் இங்கு…

”டென்டல் க்ளிப் இரண்டு வகைப்படும். அவ்வப்போது கழற்றி வைத்துக்கொள்கிற டெம்ப்ரவரி க்ளிப் மற்றும் குறிப்பிட்ட காலத்துக்குத் தொடர்ந்து அணிந்திருக்கக் கூடிய பெர்மனன்ட் க்ளிப். டெம்ப்ரவரி க்ளிப் போட்டிருப்பவர்களுக்கு பராமரிப்பு சுலபம். க்ளிப்பை நீக்கிவிட்டு பற்களை இயல்பாகச் சுத்தம் செய்து கொள்வதுடன், க்ளிப்பை பயன்படுத்தாத நேரத்தில் சுத்தமான நீரில் பாதுகாத்து, டென்டிஸ்ட் பரிந்துரைக்கிற நேரங்களில் மட்டும் அணிந்து கொள்ளலாம். நிரந்தரமாக இந்த டென்டல் க்ளிப் அணிந்திருப்பவர்களுக்கு, மாதக்கணக்கில் க்ளிப் பொருத்தப்பட்டிருப்பதால், பற்களின் பராமரிப்பு சிரமமாகி, உணவுப் பொருட்கள் அண்டிக்கொள்வது, ஈறுகள் வீக்கம் என்று பிரச்னைகள் ஏற்படலாம். நாளைடைவில் பற்களில் நீங்கா கறைகளா கவும் மாறக்கூடும்.
பெர்மனன்ட் க்ளிப் அணிந்திருப்பவர்கள், காலை, இரவு என இரண்டு முறை மட்டுமல்லாது, ஒவ்வொரு வேளை உணவு உண்ட பின்னும் பல் துலக்குவது நல்லது. உணவகங்கள், அலுவலகங்களில் சாப்பிடும் போது, உடனே பிரஷ் செய்ய முடியாது என்றாலும், நன்றாக வாய் கொப்பளித்து, உணவுத் துகள்கள் வாயில் தங்காமல் வெளியேற்றவும். இது, கிருமிகள் உண்டாவதைத் தடுக்கும்.

பொதுவாக பல் துலக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட சற்று அதிக நேரம் எடுத்துக்கொண்டு, பற்களின் வெளிப்புறம், உட்புறம் மற்றும் ஈறு ஆகிய மூன்று பகுதிகளையும் நிதானமாகச் சுத்தம் செய்ய வேண்டும்.

பல்துலக்கும்போது பற்களை இரண்டு பாகங்களாகப் பிரித்துக்கொள்ளவும். அதாவது, ஈறுகளில் இருந்து பற்களின் மேல் பொருத்தப்பட்டுள்ள க்ளிப் வரை ஒரு பகுதியாகவும், க்ளிப்பிலிருந்து பல்லின் நுனி வரை இரண்டாவது பகுதியாகவும் பிரித்துக் கவனமாகவும் பொறுமையாகவும் சுத்தம் செய்யவும்.
க்ளிப் வகை மற்றும் பல்லின் அமைப்பைப் பொறுத்து, ஆர்த்தோடென்டிக் பிரஷ், சாஃப்ட் பிரஷ் என டென்டிஸ்ட் பரிந்துரைக்கும் டூத்பிரஷை பயன்படுத்துவது முக்கியம். ஃப்ளோரைட் அதிகம் உள்ள டூத்பேஸ்ட் பரிந்துரைக்க ஏற்றது. இரவு உறங்கச் செல்லும்முன் மவுத்வாஷ் சொல்யூஷன் கொண்டு வாய் கொப்பளிப்பது, கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பை பலமாக்கும்.

மருத்துவரிடம் ஒவ்வொரு முறை செக்-அப் செல்லும்போதும், க்ளிப்பை டென்டிஸ்ட் டைட் செய்த பிறகு ஒன்றிரண்டு நாட்களுக்கு வலி இருக்கும். கம்பிகள் இறுக்கப்பட்டு பற்கள் நகரத் தொடங்குவதாலே இந்த வலி. மேல்வரிசை மற்றும் கீழ்வரிசைப் பற்கள் ஒன்றோடு ஒன்று உரசாமல் பார்த்துக்கொண்டால் வலியைத் தவிர்க்கலாம். வலியைக் குறைக்க மாத்திரை எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது; தானாகவே சரியாகிவிடும். மேலும் இந்த நாட்களில் மிருதுவான உணவுகளை உண்ண வேண்டும்.

க்ளிப் கம்பி குத்தி நாக்கிலோ, உதடுகளிலோ காயம் ஏற்பட்டால், காயம்பட்ட இடத்தில் வாயில் ஏற்படும் காயங்களுக்கென கொடுக்கப்படும் க்ரீமை அப்ளை செய்யலாம்.

பல்லின் மேல் உள்ள க்ளிப்போ, கம்பியோ உடைந்துபோகும் பட்சத்தில் தானாகவே அதை சரிசெய்ய நினைக்க வேண்டாம். அப்படிச்செய்தாலும் அது தற்காலிக மானதே. டென்டிஸ்டிடம் சென்றால்தான் முறையாக சரிசெய்ய முடியும். அவசரத்துக்கு சிறிது காட்டனை தண்ணீரில் நனைத்து உடைந்து போன கம்பிக்கும் ஈறுகளுக்கும் இடையில் வைத்துக்கொண்டு உடனடியாக பல் மருத்துவரை நாடவும். மேலும் உடனடியாக அதை சரிசெய்யாவிட்டால், பற்கள் சீரான வரிசைக்கு வருவது இன்னும் தாமதமாகும் என்பதையும் நினைவில்கொள்க.

அதிக இனிப்பு மற்றும் பசைபோல ஒட்டிக்கொள்ளும் சாக்லேட் போன்ற உணவுப் பொருட்க ளைத் தவிர்க்கவும். நொறுக் குத் தீனிகளை நாள் முழுக்கச் சாப்பிடாமல், ஒரே நேரத்தில் சாப்பிட்டு முடித்து பல் துலக்கிவிடுவதன் மூலம் வாயில் கிருமிகள் இருப்பைத் தடுக்கலாம். முறுக்கு, நறுக்காத முழு ஆப்பிள் போன்றவைகளை நேரடியாகப் பற்களைக் கொண்டு கடித்தால், க்ளிப் விரைவில் உடைந்து போகக்கூடும்… ஜாக்கிரதை.
இந்த முன்னெச்சரிக்கை மற்றும் பராமரிப்பு வழிமுறைகளைப் பின்பற்றி னால்,சீக்கிரமே `டென்டல்க்ளிப்’க்கு பை சொல்லி விடலாம்!”
சே ச்ச்ச்சீஸ்!
15

Related posts

உங்க குழந்தை எப்போ பார்த்தாலும் மூக்குல கைவிடுறானா? கட்டாயம் இதை படியுங்கள்!

nathan

காது குடைந்து கொண்டே இருப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா உணவில் பெருங்காயம் பயன்படுத்தினால் ‘பெரும் காயம்’ கூட குணமாகுமாம்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது கடுகு

nathan

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறீர்கள்?அப்ப இத படிங்க!

nathan

தொட்டினால் ஒட்டும் தொடாமலும் தொற்றும் கண்நோய்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த செடிக்கு பேரே இன்சுலின் செடியாம்…

nathan

குழந்தைகளை குறி வைக்கும் டெங்கு வைரஸ்

nathan

தேன் டயட் என்றால் என்ன? எடையை குறைக்க தேனை எப்படி உட்கொள்ள வேண்டும்?

nathan