தலையில் பொடுகை உண்டாக்கும் பூஞ்சையை, ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள பூசண எதிர்க்கும் தன்மையானது முற்றிலும் நீக்கும். எனவே அதற்கு 50 சதவீதம் தண்ணீர் மற்றும் 50 சதவீதம் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து, அக்கலவையை தலையில் படுமாறு தேய்த்து, குளிக்க வேண்டும். பொடுகு போகும் வரை இதனை செய்ய வேண்டும். இதை வாரம் இருமுறை செய்யலாம்.
• ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள், சூரியக்கதிர்களால் ஏற்படும் சரும நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஆப்பிள் சீடர் வினிகர் இரைப்பை குடலில் உள்ள அழற்சியையும் சரிசெய்கிறது.
• ஆப்பிள் சீடர் வினிகர், கழுத்து மற்றும் முகம் பகுதிகளில் உள்ள சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. முக்கியமாக இவற்றை கண்களில் படாமல் பார்த்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அவை கண்களில் எரிச்சலை உண்டாக்கும்.