27.1 C
Chennai
Tuesday, Nov 19, 2024
puli chutney
சட்னி வகைகள்

சூப்பரான புளி சட்னி

நீங்கள் சட்னி பிரியரா? இட்லி, தோசைக்கு சட்னி சாப்பிட பிடிக்குமா? இதுவரை நீங்கள் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, புதினா சட்னி என்று தான் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் புளி சட்னியை செய்து சுவைத்ததுண்டா? நிச்சயம் இருக்காது. சொல்லப்போனால் புளி சட்னி பற்றி இப்போது தான் கேட்டிருப்பீர்கள். இந்த புளி சட்னி இட்லி, தோசை, ஊத்தாப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த சட்னியை பயணம் மேற்கொள்ளும் போது எடுத்து செல்ல ஏற்றது. இது 4-6 மணிநேரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

Tamarind Chutney Recipe In Tamil
உங்களுக்கு புளி சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புளி சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* தேங்காய் – 1/2 கப் (துருவியது)

* உளுத்தம் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்

* வரமிளகாய் – 1

* கடுகு – 1 டீஸ்பூன்

* புளி – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக் வேண்டும்.

* பின்னர் அதில் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

* பின்பு அதில் துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.

* தேங்காய் பொன்னிறமானதும், அதில் வரமிளகாய், புளி சேர்த்து 2 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்தால், சுவையான புளி சட்னி தயார்.

குறிப்பு:

* பருப்பை பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

* அதிகமாக புளி சேர்க்க வேண்டாம்.

* தேங்காயை அளவுக்கு அதிகமாக வறுத்துவிட வேண்டாம். இல்லாவிட்டால் சுவை மாறிவிடும்.

* தாளிக்கும் போது நல்லெண்ணெய் பயன்படுத்தினால் இன்னும் நல்ல ப்ளேவர் கிடைக்கும்.

Related posts

கத்தரிக்காய் சட்னி

nathan

ஆரஞ்சு தோல் பச்சடி

nathan

ஆந்திரா ஸ்டைல் மாங்காய் சட்னி

nathan

சுவையான தக்காளி சட்னி செய்வது எப்படி?

nathan

சுவையான தக்காளி சட்னி செய்வது எப்படி

nathan

கேரளத்து தேங்காய் சட்னி

nathan

செளசெள சட்னி!

nathan

காரசாரமான பச்சை மிளகாய் சட்னி

nathan

கேரளா பூண்டு சட்னி

nathan