உறவுகளில் மிகவும் சிக்கலான அதே நேரத்தில் சற்றே கடினமான உறவாக பார்க்கப்படுவது அப்பா மகன் உறவு. அம்மா- மகன் உறவில் இருக்கும் ஓர் அன்னியோன்யம் அப்பா மகன் உறவில் இருப்பதில்லை.
தந்தை சற்று கண்டிப்பானராகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்வதால் குழந்தைகள் மத்தியில் விரிசல் ஆரம்பித்தாலும் அந்த விரிசல் தொடர்ந்து நீடிப்பதில் தான் சிக்கல் இருக்கிறது. சில வீடுகளில் பேச்சுவார்த்தை கூட இருக்காது.
மகனிலிருந்து தந்தை :
நாம் இதனை யூகிக்கிறோமோ இல்லையோ தந்தையிடமிருந்து தான் மகன் கற்க ஆரம்பிக்கிறான். அதிகாரம் செலுத்துவது, இன்னொருவரிடம் பழகுவது, கோபம் கொள்வது போன்ற ஓர் ஆண் செய்வதைத் தான் தானும் செய்ய வேண்டும் என்பதை உணர்கிறான். ஆரம்பத்திலிருந்தே மகன் அதிகார தோரணையில் பார்த்த தந்தை மீது ஆரம்பத்தில் இருந்த பிம்பம் பெருஞ்சுவராக மாறிவிடுகிறது. அதனை தவிர்க்க குழந்தைகளோடு கண்டிப்போடு அன்பையும் சேர்த்து பகிர்ந்திடுங்கள்.
ஒரே விருப்பம் :
மகனின் விருப்பங்களை கண்டறிந்து அவை பற்றிய விபரங்களையாவது தெரிந்து வைத்திருங்கள். அலுவலகம் அதை விட்டால் வீடு இது தான் என் உலகம். வீட்டின் பொறுப்பு மனைவிக்குத் தான் என்று ஒதுங்கியிருக்காதீர்கள். மகன்களுடன் விளையாடச் செல்லுங்கள்
சிறிய தவறு பெரிய தண்டனை :
ஆண் குழந்தைகள் செய்திடும் சின்ன சின்ன தவறுகளுக்கு எல்லாம் நிதானம் இழக்காமல் கண்டியுங்கள். அந்த கண்டிப்பு தவறை மறுபடியும் செய்ய வைக்ககூடாதே தவிர உங்கள் மீது வெறுப்பு வந்துவிடக்கூடாது.
நோ நெகட்டிவ் :
குழந்தைகள் தங்களுடைய வயதில் தவறு செய்வதை எல்லாம் பெரிது படுத்தி வாழ்க்கையில் தோற்றுவிடுவாய் என்ற பயத்தை ஏற்படுத்தாதீர்கள். எச்சரிக்கை செய்யுங்கள். தவறிலிருந்து பாடத்தை கற்றுக் கொள்ள வைத்திடுங்கள். அம்மாக்கள் ஒரு போதும் மகன்கள் பற்றிய நெகட்டிவ் கமெண்ட்ஸ் கொடுப்பதில்லை என்பதை கவனத்தில் கொள்க.
தயக்கம் :
மகன்களுடன் பேச தயக்கம் காட்டாதீர்கள். பெண்கள் குறித்தும், செக்ஸ் குறித்தும், அவர்களிடம் உரிய வயதில் பேசி புரிய வைத்திடுங்கள். இணையத்தை அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் அது குறித்த விழிப்புணர்வு எல்லாம் நிச்சயமாய் உங்கள் குழந்தைக்கு வேண்டும்.
திறமை :
குழந்தைகளின் திறமையை கண்டறிவதில் முனைப்பு காட்டுங்கள். உற்சாகமான உங்களது வார்த்தைகளை அவர்களை தட்டிக் கொடுப்பது போல இருக்க வேண்டும். தவறுகள் செய்தாலும் அவர்கள் செய்த நல்ல விஷயங்களை நினைவுப்படுத்தி சொல்லுங்கள். அது போல இருந்தால் அப்பாவுக்குப் பிடிக்கும் என்று எடுத்துச் சொல்லுங்கள்.
சுயநலம் :
பெரும்பாலான ஆண்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிறார்கள். சம்பாதிப்பது மட்டும் தான் என் வேலை வீடு குழந்தைகள் எல்லாம் மனைவியின் பொறுப்பு என்று விலகி நடக்கிறார்கள். இது மிகவும் தவறானது வீட்டின் பொறுப்பையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் கண்டிக்க மட்டும் அப்பா இல்லை அரவணைக்கவும் பாராட்டவும் அப்பா இருக்கிறேன் என்று குழந்தைகளுக்கு உணர்த்துங்கள்.
ஆல் தி பெஸ்ட்!!