32.8 C
Chennai
Friday, Jul 11, 2025
15345 potato chutney
சட்னி வகைகள்

உருளைக்கிழங்கு சட்னி

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 1
பெரிய வெங்காயம் – 1
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 1/2 கப்
உப்பு – சுவைக்கு

அரைக்க :

பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
பூண்டு – 4 பல்
சிகப்பு மிளகாய் – 2

தாளிக்க :

சமையல் எண்ணெய் – 1/2 டீஸ்பூன்
எள்ளு – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு சிறிய குச்சி
பெருங்காயத்தூள் – ஒரு சிறிய சிட்டிகை

செய்முறை :

* வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்

* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தைபோட்டு வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கியதும் அரைத்து கலவை, மிளகாய் தூள் போட்டு 3 நிமிடம் வதக்கிய பின்னர் உருளைக்கிழங்கு, உப்பை போட்டு வதக்கவும்.

* பின்னர் அதில் தண்ணீர் அரை கப் ஊற்றி மிதமான தீயில் கடாயை மூடிவைத்து வேக வைக்கவும்..

* நன்றாக வெந்த தண்ணீர் நன்றாக வற்றி மசாலா வாசனை போனவுடன் இறக்கி வைக்கவும்.

* மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி எள்ளு, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து உருளைக்கிழங்கு கலவையில் கொட்டி கிளறவும்.

* சுவையான உருளைக்கிழங்கு சட்னி ரெடி. இது சப்பாத்தி, பூரி, தோசை, தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
15345 potato chutney

Related posts

வெந்தயத் துவையல் (சட்னி)

nathan

கேரளா பூண்டு சட்னி

nathan

காசினி கீரை சட்னி

nathan

பச்சை மிளகாய் பச்சடி

nathan

சுவையான தேங்காய் கறிவடகத் துவையல்

nathan

கொத்தமல்லி சட்னி

nathan

கடலைப்பருப்பு சட்னி

nathan

வெங்காய கொத்தமல்லி சட்னி

nathan

குடமிளகாய் சட்னி

nathan