பெண்களுக்கு கர்ப்ப காலம் வரப்பிரசாதமான ஒன்று, தன்னுடைய குழந்தையை கருவில் சுமக்கும் ஒவ்வொரு நாளையும் ரசிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள்.
அந்த வகையில் தன்னுடைய உடல்நலத்திலும், குழந்தையின் சீரான வளர்ச்சியிலும் கவனம் செலுத்தவும் தவறமாட்டாடர்கள்.
9 மாதங்களும் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும், எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என பல குழப்பங்களும் இன்றைய இளம் தாய்மார்களுக்கு இருக்கத்தான் செய்யும்.
அவர்களுக்கு பதில் தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
எதை சாப்பிட வேண்டும்?
* காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிடவும், முதலில் சுத்தமான நீரில் நன்றாக கழுவிவிட்டு சமைக்கவும்.
* பயறு வகைகள், பருப்பு வகைகள் மற்றும் தானியங்களை அதிகளவில் எடுத்துக் கொள்ளுங்கள்
* பால் பொருட்கள், பச்சை இலைக்காய்கறிகள் என கால்சியம் அதிகம் கொண்ட உணவுகளை மறக்காமல் சாப்பிடவும்.
* இதேபோன்று பேரீட்சை, வெல்லம் மற்றும் அத்திப்பழம் போன்ற இரும்பு சத்து அதிகம் நிறைந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?
* பச்சை முட்டை அல்லது பாதி வேகவைத்த முட்டையை தவிர்க்கவும், ஏனெனில் இதில் உள்ள சால்மோனெல்லா எனும் பக்டீரியா வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்திவிடும்.
* சுறா, வாள் மீன், கானாங்கெளுத்தி, டைல் எனும் ஓடு மீன் போன்ற அதிக அளவில் மெர்க்குரியை கொண்ட மீன்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
* இறைச்சி போன்ற அசைவ உணவுகளை நன்றாக வேக வைத்து சாப்பிடவும், பாதியளவு சமைக்கப்பட்ட இறைச்சியில் டாக்சோபிளாஸ்மா பாரசைட் மற்றும் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் இருக்கும்.
* சுகாதாரமற்ற வெளியில் விற்கும் பானங்களை, பழச்சாறுகளை அருந்த வேண்டாம்.
* இதேபோன்று துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டாம், ஆல்கஹாலை தவிர்க்கவும்.
* பப்பாளி, அன்னாச்சி போன்ற பழங்களையும் மறந்தும்கூட சாப்பிட வேண்டாம்.