25.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
0ea18717
Other News

பிரபல நடிகருடன் ரகசிய நிச்சயதார்த்தம் – நடிகை நிக்கிகல்ராணி போட்டோ

நடிகர் ஆதிக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

டார்லிங் படத்தின் மூலம் தமிழின் அறிமுகமான நடிகை நிக்கி கல்ராணி தொடர்ந்து யாகாவராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு 2, பக்க, தேவ், கீ, ராஜவம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

 

 

இதேபோல் மிருகம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் ஆதி தொடர்ந்து  ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவாண், வல்லினம், கோச்சடையான், மரகத நாணயம், யூ டர்ன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இவர்கள் இருவரும் இணைந்து  யாகாவராயினும் நாகாக்க, மரகதநாணயம் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த ஜோடி ரீல் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ரியல் லைஃப்பிலும் ஜோடியாகியுள்ளனர். இவ்விரு படங்களில் ஏற்பட்ட பழக்கம் இருவருமிடையே காதலாக மாறியது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆதியின் அப்பா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நிக்கி கல்ராணி கலந்துகொண்டார். அப்போதே அவர்கள் இருவரும் காதலில் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் இருவருமே அதனை ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில்  ஆதி – நிக்கி கல்ராணி இடையேயான நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் 24 ஆம் தேதி நடைபெற்றுள்ளது.   இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related posts

மனைவியுடன் 10 நிமிடங்கள் பேசிய ஜெயம் ரவி- என்ன முடிவு தெரியுமா?

nathan

இயக்குனர் அட்லீ தனது மனைவியுடன் எடுத்த அழகிய புகைப்படங்கள்

nathan

பிரபல காமெடி நடிகர் திடீர் கைது..! நீதிபதியுடன் மோதல்!

nathan

கவர்ச்சி நடிகை கண்ணீர் பேட்டி – டார்ச்சர் பண்ணிய தந்தை

nathan

இரவு பார்ட்டியில் நிதானம் இல்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷ்!!

nathan

வெற்றி மேல் வெற்றி தரும் கேது பகவான்..பணம் கொட்டும்.. பதவி உயர்வு..

nathan

தனுஷின் அண்ணன் மனைவியா இது?

nathan

லேசான சட்டை மட்டும் போட்டு அதை காட்டி காத்து வாங்கும் சித்தி இத்னானி!

nathan

கூகிள் வேலையை விட்டு, சமோசா விற்பனையில் 50 லட்ச ரூபாய் கண்ட இளைஞர்!

nathan