24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
saudi 2
Other News

சவுதி அரேபியாவின் எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல்!

ஏமன் நாட்டில் அரசுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகிறது. இந்த கூட்டுப்படையில் ஐக்கிய அரபு எமிரேட்சும் அங்கம் வகிக்கிறது. இதனால் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி தலைமையிலான கூட்டு படைகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில், சவுதி அரேபியாவின் மிகப்பெரிய அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கொவின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலால் ஜுடா நகரில் அமைந்துள்ள எண்ணெய் கிடங்குகளில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய டிரோன் தாக்குதலால் எண்ணெய் கிடங்குகளில் தீப்பற்றி எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர்.

Related posts

தேனியில் களமிறங்கும் டிடிவி தினகரன்

nathan

பெண் வேடமிட்டு தேர்வு எழுத வந்த நபர்- கையும், களவுமாக பிடிபட்டார்

nathan

காரில் ரசிகர்களை பார்த்து கையசைத்து சென்ற ரஜினி

nathan

குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ரவீனா

nathan

ஓட்டுநர் இல்லா தானியங்கி காரில் பயணித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

nathan

கணவர் மற்றும் 3 குழந்தை – செட்டில் ஆக விரும்பும் ஜான்வி கபூர்!

nathan

உல்லாசம் அனுபவித்து திருமணத்திற்கு மறுத்த காதலன் -நபர் மீது நடவடிக்கை

nathan

மகரம் ராசிக்கு முடிவுக்கு வரும் ஏழரை சனி!

nathan

உயிரோடில்லாத காதலன் வீட்டில் மருமகளாக வாழும் இளம்பெண்!

nathan