27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
22 623b
Other News

நித்தியானந்தா மீது பெண் பரபரப்பு புகார் -‘கைலாசாவில் பெண்களை துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை நடக்கிறது

பாலியல் புகார் குற்றச்சாட்டில் சிக்கிய நித்தியானந்தா சாமியார், இந்திய நாட்டை விட்டே ஓடி ஒளிந்தார்.

திடீரென்று சமூகவலைத்தளத்தில் தோன்றி நான் தனித்தீவில் ஒரு நாட்டையே உருவாக்கிவிட்டேன் என்றும், அந்நாட்டிற்கு கைலாசா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். நித்தியானந்தா இருக்கும் இடத்தை யாராலையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அது ரகசியமாகவே உள்ளது. அடிக்கடி நித்தியானந்தாவின் பிரசங்க வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வீடியோக்களில் அவர் ஆன்மீக சொற்பொழிகள் ஆற்றி வருவார்.

கைலாசா நாடு அமெரிக்காவின் கடல்பகுதியில் உள்ள ஏதே ஒரு தீவில் நித்யானந்தா உருவாக்கி இருக்கிறார் என்றும், இல்லை..

அவர் இந்தியாவிலேயே தான் இருந்து கொண்டு பேசுகிறார் என்றும் வதந்திகள் பரவின.

இந்நிலையில், கைலாச நாட்டில் தங்கியிருந்த சாரா லாண்டரி என்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் நித்தியானந்தா மீது பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள பிடதி போலீசாருக்கு இமெயில் மூலமாக இந்தப் புகாரை அனுப்பி இருக்கிறார்.

அந்த புகாரில், கைலாச நாட்டில் நித்தியானந்தாவும், அவரது சீடர்களும் அங்குள்ள பெண்களை அடித்து துன்புறுத்துகின்றனர்.

மேலும், பல பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை அளித்து வருகின்றனர். எனக்கும் பாலியல் தொந்தரவு நித்யானந்தா கொடுத்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் போலீசார், இதுபோன்ற இ-மெயில் புகார்களை ஏற்றுக் கொள்ள முடியாது.நீங்கள் பயப்படாமல், இந்தியாவிற்கு சென்று அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள் என்று பதில் அனுப்பி உள்ளனர்.

 

Related posts

மாரி செல்வராஜ் குறித்து கொந்தளித்து பேசிய வடிவேலு

nathan

பிருந்தா நடன மாஸ்டர் வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட நடிகைகள்

nathan

என் மார்பை பற்றி கமெண்ட் வரும்போது இந்த பதிலை சொல்ல தோணும்..” நீலிமா ராணி

nathan

பத்மினியின் ஒரே மகனை பார்த்துள்ளீர்களா?

nathan

18 காளைகளை அடக்கிய கார்த்தி;அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

nathan

விடியற்காலையில், டீ அருந்துவது நல்லதா காபி அருந்துவது நல்லதா?

nathan

இரண்டு நடிகையுடன் திருமணம்..!கே.ஆர்.விஜயா மருமகன்

nathan

மகனை கொஞ்சி விளையாடும் நடிகை காஜல்

nathan

கழுத்தில் குத்திய டாட்டூ -கல்லூரி மாணவர் உயிரிழப்பு…

nathan