29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
father
Other News

திருவண்ணாமலையில் குடி போதையில் மகளையே சீரழித்த கொடூர தந்தை..!

திருவண்ணாமலையில் குடி போதையில் மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் இவர் போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார். இவருக்கு 19 வயதில் ஒரு மகனும், 17 வயதில் பிளஸ்-1 பயிலும் மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று போதையில் வீடு திரும்பியவர் மகளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ஆரணி நகர காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜனிடம் புகார் அளித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் சம்பந்தப்பட்ட மாணவியை ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அங்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மாணவியிடம் விசாரணை நடத்தியதில் அவரை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

இதனையடுத்து மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை மகளிர் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இறந்தபின் காவலாக இருக்க வேண்டிய தந்தையே போதையில் மகளை பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.- source: dailythanthi

Related posts

ரச்சிதா குறித்த ரகசியத்தை உடைத்த தினேஷ் – இனி இதுதான் முடிவு!

nathan

உங்க வீட்டில் பணம் அதிகம் சேரணுமா? வீட்டு முன்னாடி இத வையுங்க…

nathan

இரண்டாவது திருமணமா? விரைவில் அம்மாவாகும் சமந்தா

nathan

indhran pathmanathan : ரம்பா கணவர் இந்திரன் பத்மநாதன் வாழ்க்கை வரலாறு

nathan

உயர்நீதிமன்றம் கேள்வி – மதுவை பாட்டிலில் விற்கும்போது, “பாலை ஏன் பாட்டிலில் விற்க முடியாது?

nathan

முதன்முறையாக குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அட்லி

nathan

பிரக்கியின் வெற்றிக்கு அட்சாரமான தாய் நாகலட்சுமி!

nathan

மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகள்

nathan

“லியோ” – முதல் நாள் வசூல் விபரம்..!

nathan