24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
cover 1 4
மருத்துவ குறிப்பு

இந்த ஆறு அறிகுறி இருந்தா கட்டாயம் உங்களுக்குப் பெண் குழந்தை தான் பிறக்குமாம்… தெரிந்துகொள்வோமா?

ஒரு பெண்ணுக்கு தாய்மை என்பது மிகப் பெரிய சந்தோஷம். அதிலும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்ற ஆர்வம் எல்லோருக்கும் இருக்கும். சில பேர்கள் தங்கள் வயிற்றை தடவி பார்த்துக் கூட சந்தோஷப்பட்டுக் கொள்வார்கள். அல்ட்ரா சவுண்ட் மூலம் கூட நாம் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ளலாம்.

ஆனால் அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் இந்த மாதிரியான அறிவியல் முன்னேற்றம் இல்லாத சமயங்களில் சில அறிகுறிகளைக் கொண்டு குழந்தையின் பாலினத்தை சொல்லி வந்துள்ளனர். அப்படிப்பட்ட கட்டுக்கதைகளைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம். வயிற்றில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? வாங்க தெரிஞ்சுக்கலாம்

வயிறு உயரமாக தென்பட்டால்

நீங்கள் கருவுற்று இருக்கும் போது உங்கள் வயிறு பெரியதாக இருந்தால் பெண் குழந்தையாக இருக்கும் என்ற கட்டுக்கதை உள்ளது.

ஆனால் வயிறு பெரியதாக இருக்க நமது உடல்வாகு, வயிற்றின் தசைகள், உடல் வடிவம், உடல் எடை இது தான் காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். இதற்கும் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்திற்கும் சம்மந்தம் இல்லை என்கின்றனர். அதிகப்படியான கருத்தரிப்பு கூட வயிற்றின் எலாஸ்டிக் தன்மையை நீட்சியடைய வைத்து விடும்.

 

நடுவயிறு தென்பட்டால்

அதே மாதிரி குழந்தையின் உடல் எடை முழுவதும் வயிற்றின் நடுவில் காணப்பட்டால் அது பெண் குழந்தை என்றும் முன்னோக்கி காணப்பட்டால் அது ஆண் குழந்தை என்றும் சொல்லப்படுகிறது.

இதுவும் ஒரு பெண்ணின் உடல் வாகு, உடல் எடை இதைக் கொண்டு தான் சொல்லப்படுகிறது தவிர இதற்கும் குழந்தையின் பாலினத்திற்கும் சம்மந்தம் கிடையாது.

வேகமான இதயத் துடிப்பு

வயிற்றின் வளரும் குழந்தையின் இதயத் துடிப்பு 140 க்கு மேல் இருந்தால் பெண் குழந்தை எனவும், அதற்கும் குறைவாக இருந்தால் ஆண் குழந்தை என்றால் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இதை வைத்து மட்டுமே குழந்தையின் பாலினத்தை நம்மால் சொல்ல இயலாது. ஏனெனில் குழந்தை வளர வளர இதயத் துடிப்பு மாறிக் கொண்டே வரும்.

5 வார கர்ப்ப காலத்தில் குழந்தையின் இதயத் துடிப்பு 80-85 பீட்ஸ் /மினிட் ஆக இருக்கும். 9 வார தொடக்கத்தில் 170-200 இதயத் துடிப்பு /நிமிடம் ஆக இருக்கும். சராசரியாக 120-160 வரை இருக்கும்.

இனிப்பு சாப்பிடுதல்

கர்ப்ப காலத்தில் அதிகமாக இனிப்பு சாப்பிட்டீங்கள் என்றால் அது பெண் குழந்தையாக இருக்கும். உப்பு மற்றும் புளிப்பு சேர்ந்த உணவுகள் பிடித்தால் ஆண் குழந்தை என்கின்றனர். இந்த சுவை எல்லாம் விட்டமின் பற்றாக்குறையால் ஏற்படுகிறதே தவிர இதற்கும் குழந்தையின் பாலினத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.

 

எண்ணெய் பசை சருமம்

கர்ப்ப காலத்தில் உங்கள் சருமம் எண்ணெய் பசை சருமமாக இருந்தால் அதிக பருக்கள் வர வாய்ப்புள்ளது. பொதுவாக பெரியவர்கள் என்ன கூறுவார்கள் என்றால் பெண் குழந்தைகள் தாயின் அழகை திருடிக் கொள்கிறது என்பார்கள். எனவே பருக்கள் நிறைய வந்தாலே கருத்துப் போனாலோ பெண் குழந்தைகள் பிறக்கும் என்கின்றனர். ஆனால் மருத்துவ ரீதியாக பார்த்தால் இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் பிரச்சினையே தவிர இதற்கும் குழந்தையின் பாலினத்திற்கும் சம்மந்தம் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

காலை உடல் உபாதைகள்

கர்ப்ப காலத்தில் காலையில் எழுந்ததும் சில உடல் உபாதைகள் இருக்கும். அதிகமான வாந்தி, குமட்டல் தென்பட்டால் பிறக்கின்ற குழந்தை பெண் குழந்தையாக இருக்கும் என்கின்றனர். ஆனால் காலையில் கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றம் அதிகமாக இருப்பதாலும் குறைந்த சர்க்கரை இருப்பதாலும் இந்த பிரச்சினை உண்டாகிறது. இதற்கும் பெண் குழந்தை பிறக்கும் என்பது கட்டுக்கதை.

மன நிலை

கர்ப்ப காலத்தில் பெண்களின் மனநிலை அதிகளவில் மாற்றமடைந்தால் பெண் குழந்தை என்கின்றனர். ஆனால் மனநிலை என்பது ஹார்மோன் மாற்றத்தால் உண்டாகிறது. இதற்கும் குழந்தையின் பாலினத்திற்கும் சம்மந்தம் இல்லை.

இந்த மாதிரியான கட்டுக்கதைகளைக் கொண்டு நீங்கள் 50-50 சாய்ஸ் வேணா பண்ணலாம். ஆனால் அது தான் உண்மையாக கிடைக்கும் என்று சொல்ல இயலாது.

குழந்தையின் பாலினத்தை கண்டறிய நிறைய மருத்துவ பரிசோதனைகள் இருந்தாலும் காத்திருந்து காண்பது தாய்க்கு ஒரு சுகம் தான்.

 

அல்ட்ரா சவுண்ட்

20 வது வார கர்ப்ப காலத்திலயே பெண்களின் பாலினத்தை நாம் கண்டறிந்து விடலாம். சில சோதனைகள், அம்மினோசென்சிஸ் மற்றும் கொரியானிக் வில்லஸ் மாதிரியாக்கம் போன்றவை குழந்தையின் பாலினத்தை சொல்லும். ஆனால் இவை உடலுனுள் எடுக்கப்படும் சோதனை. இந்த பரிசோதனை பொதுவாக குழந்தைக்கு மரபணு கோளாறு இருக்கா? இல்லையா என்பதை அறிய பயன்படுகிறது. நான் இன்வேஸிவ் சோதனைகளும் குழந்தையின் மரபணு குறைப்பாட்டை கண்டறியவே பயன்படுகிறது.

Related posts

சூப்பர் டிப்ஸ்! உடல்எடை, தொப்பையால் அவதிப்படுகிறீர்களா? வெறும் 10 நாட்கள் இந்த பானத்தை குடிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா கேன்சர் நோயை துரத்தி அடிக்கும் பூண்டு!

nathan

ஹார்ட் அட்டாக் vs கார்டியாக் அரெஸ்ட்

nathan

நாப்கின் பயன்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

nathan

25 வயது பெண் கட்டாயம் செய்திருக்க வேண்டிய 10 விஷயங்கள் இவைதான்!

nathan

11 பாசிட்டிவ் பழக்கங்கள்..!

nathan

தாய்மை அடைவதற்கான சரியான வயது

nathan

டயாபடீஸ் தடுக்க 8 ட்ரிக்ஸ்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் காலத்தில் இதையெல்லாம் செய்யலாம்

nathan