25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
2 period
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் பற்றி மக்களிடையே நிலவும் சில தவறான எண்ணங்கள்!

மாதவிடாய் என்பது பெண்களிடையே மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மாதவிடாய் காலமானது சுமார் 11 அல்லது 12 வயதிலிருந்து தொடங்கி, 45 முதல் 55 வயது வரை ஒரு பெண்ணிற்கு ஏற்படுகிறது. இந்த மாதவிடாய் தான் ஒரு பெண் கருத்தரிக்க மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆனால் இவ்வளவு தூரம் தன்னுடனேயே தொடர்ந்து பயணிக்கும் மாதவிடாய் பற்றி பெண்களே சரியாக புரிந்து கொள்வதில்லை.

பொதுவாக மாதவிடாய் என்றால் பெண்களின் பிறப்புறுப்பு வழியாக இரத்த போக்கு ஏற்படும் என்ற மேம்போக்கான விளக்கம் மட்டுமே எல்லாருக்கும் தெரிகிறது. இந்த மாதவிடாய் ஒரு பெண்ணிற்கு 7 நாள் முதல் 21 நாட்கள் சுழற்சியாக நடைபெறும். பெண்ணின் கருப்பையில் இருக்கும் முட்டைகள் கருத்தரிக்காமல் இருக்கும் போது இந்த மாதவிடாய் உண்டாகிறது. ஆனால் என்னவோ மக்களிடையே இந்த மாதவிடாய் பற்றி சில தவறான எண்ணங்கள், மூட நம்பிக்கைகள் இருந்து வருகின்றன.

 

சில நகரங்களில் இது பெண்களுக்கு ஏற்படும் தீட்டு என்று ஒதுக்கி வைப்பதும் உண்டு. இதனால் நிறைய பெண்கள் மன அழுத்தம், தற்கொலை எண்ணம் போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இன்னும் சில கிராமங்களில் மாதவிடாயை தீய சக்தியாக கருதும் மனப்போக்கும் நிலவி வருகிறது. இப்படி பல தவறான விஷயங்கள் இந்த காலகட்டத்திலும் இருப்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம். இந்த தவறான கருத்துக்கள் மூட நம்பிக்கை மனப்போக்கை எதிர்த்து பெண்கள் என்ன செய்ய வேண்டும், அதற்காக பெண்கள் தங்களை எப்படி தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக பெண்கள் நல மருத்துவர் நம்மிடையே சில கருத்துக்களை முன் வைக்கிறார்.

மாதவிடாய் முடிந்த பிறகு பெண்கள் புனித நீரில் குளிக்க வேண்டும்
இந்த சடங்கு முறை இன்னும் பெரும்பாலான நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. பெண்கள் தங்கள் மாதவிடாய் இரத்தப் போக்கு முடிந்த பிறகு புனித ஆற்றில் அல்லது நதியில் குளித்து தங்களை தூய்மைப்படுத்த வேண்டும் என்கின்றனர். ஆனால் உண்மையில் புனித நதி எல்லாவற்றிலும் மாசுக்கள் கலந்துள்ளது. இதில் பெண்கள் குளிக்கும் போது அவர்களின் பிறப்புறுப்பில் அடிக்கடி தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. சிலர் மாதவிடாய் காலங்களில் பெண்களை வீட்டிற்கு வெளியே ஒதுக்குப்புறமாக தங்க வைத்து விடுகின்றனர். இதனால் அங்குள்ள பழங்காத மோசமான குளியலறையை பயன்படுத்தும் போது பெண்கள் நோய்த்தொற்றை எளிதில் அடைகின்றனர் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.

பெண் ஒரு தீய ஆவி கொண்டவளாக சித்திகரிக்கப்படுகிறாள்

உங்களுக்கு இதை கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தால் கூட நிறைய கிராமங்களில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் தீய ஆவி கொண்டவர்களாக சித்திகரிக்கப்படுகிறார்கள். இதனால் அவர்களை ஊருக்கு வெளியே உள்ள குடிசை அல்லது பாழடைந்த வீடுகளில் மாதவிடாய் முடியும் வரை தங்க வைக்கின்றனர். இந்த ஒதுக்குதல் பெரும்பாலான பெண்களுக்கு மன வேதனையை ஏற்படுத்துகிறது. ஏன் அவர்கள் அருகில் குடும்பத்தார் கூட செல்வதில்லை. அவர்களை ஒரு ஆவியாக பாவித்து வெறுக்கின்றனர். எல்லோரும் தூரத்தை அதிகரிப்பது பெண்களுக்கு மன வேதனையை பெரிதாக்குகிறது. இதனால் நிறைய பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சில உணவுகளை கொடுப்பதில்லை

மற்றொரு கட்டுக்கதை என்னவென்றால் மாதவிடாய் பெண்களுக்கு தயிர், புளிப்பு பொருட்கள் மற்றும் காரசாரமான பொருட்கள் கொடுக்கக் கூடாது என்கின்றனர். இதனால், அவர்களுக்கு மசாலா அல்லது சுவை இல்லாத உணவே வழங்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடான உணவு அந்த பெண்ணின் உடலில் உள்ள தீயசக்தியை தடுத்து பெண்ணின் உடலை சுத்தம் செய்யும் என்று மக்கள் நம்புகின்றனர். இதற்கு எந்த அறிவியல் காரணமும் இல்லை. இப்படி செய்வதால் நிறைய பெண்களுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் அவதிப்படுகின்றனர் என்று பெண்கள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயை கருத்தில் வைத்து பெண்களுக்கான மனித உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பதே உண்மை.

உடற்பயிற்சி செய்ய அனுமதியில்லை

மாதவிடாய் இருக்கும் பெண்கள் எந்தவொரு உடற்பயிற்சியையும் செய்ய அனுமதிப்பதில்லை. ஆனால் உண்மையில் லேசான உடற்பயிற்சி உங்க மாதவிடாய் வலி மற்றும் பிடிப்புகளை போக்கும். உடற்பயிற்சி உடலில் செரடோனின் என்ற ஹார்மோனை வெளியேற்றி மகிழ்ச்சியை தரக் கூடியது. அக்காலத்தைப் போல் மாதவிடாய் காலங்களில் துணி பயன்படுத்துவதில்லை. தற்போது சானிட்டரி பேடுகள், டம்பான்கள் போன்றவை இருப்பதால் ஈஸியாக இரத்தத்தை உறிஞ்சி கறை படியாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே இப்பொழுது எல்லாம் பெண்கள் உடற்பயிற்சி செய்ய தடை விதிக்க வேண்டாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பெண்கள் என்ன செய்யலாம்?

பெண்கள் இந்த மூட நம்பிக்கைகள் குறித்து எங்களால் என்ன செய்ய முடியும் என்று கேட்கலாம். ஆனால் ஒரு குழந்தையை பெற்றெடுக்க இந்த மாதவிடாய் தான் வழியாக இருக்கும் போது அதை ஏன் சமுதாயம் ஒதுக்க வேண்டும் என்று யோசியுங்கள். மாதவிடாய் குறித்த வயதான சிந்தனைகளையும், மூட நம்பிக்கைகளையும், பல காலமாக வந்த புராணங்களையும் சவாலாக புறந்தள்ள பாருங்கள். அதற்கு பெண்கள் முதலில் மாதவிடாய் குறித்து புரிந்து கொள்ள வேண்டும்.

மாதவிடாய் துன்பம் குறித்து எல்லாருக்கும் தெரியும். எனவே பெண்களே பெண்களை ஒதுக்கி தள்ளக் கூடாது. உங்களுக்கு ஏற்படும் அநீதியை எதிர்த்து போரிட நீங்கள் முதலில் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் மாதவிடாய் கல்வி குறித்து கற்பிக்கப்பட வேண்டும். அதே மாதிரி இது ஒரு இயற்கையான செயல் என்றும் ஒவ்வொரு ஆணுக்கும் கற்பிக்கப்பட வேண்டும்.

மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் பெண் தான் இந்த உலகத்தின் உயிர் சக்தி. அவள் நினைத்தால் தான் ஒரு உயிரை இந்த உலகத்திற்கு கொண்டு வர முடியும் என்பதை புரிந்து செயல்பட வேண்டும். எனவே அப்படிப்பட்ட பெண்ணை மாதவிடாய் என்ற காரணம் காட்டி முடக்குவது, ஒதுக்குப்புறமாக வைப்பது நல்லது அல்ல. மாதவிடாய் என்பது ஒரு கரு உருவாக இயற்கை படைத்த அற்புத விஷயம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

Related posts

சளித்தொல்லையில் இருந்து விடுபட அருமையான வைத்தியம்!

nathan

உங்களுக்கு தொியுமா கர்ப்ப காலத்தில் பெண்கள் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

மாதவிடாய் காலத்தில் பலம் இழக்கும் எலும்புகள்

nathan

மாதவிடாய் வருவதற்கு முன் மார்பகங்களில் வலி ஏற்படுவது ஏன்?

nathan

சளி மற்றும் இருமலுக்கான பாட்டி வைத்தியங்கள்

nathan

கர்ப்பகால அடிப்படை பரிசோதனைகள் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

தாய்மைக்கு தலை வணங்குவோம்

nathan

முருங்கைக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

நீரில் சீரகப் பொடியை கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan