26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
4a207c7b 3c8d 41cd 8819 1d87f40467c4 S secvpf
சைவம்

புதினா குழம்பு

தேவையான பொருட்கள் :

புதினா – 1 கட்டு
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
வெல்லம் – சிறு துண்டு
திக்கான தேங்காய்ப்பால் – அரை கப்
கடுகு – தாளிக்க
எண்ணெய், உப்பு – தேவைக்கு

செய்முறை :

• தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

• புதினா இலைகளைச் சுத்தம் செய்யவும்.

• வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு சேர்த்துத் தாளிக்கவும்.

• பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்க்கவும்.

• பிறகு புதினா, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

• பிறகு மல்லித்துாள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். அனைத்தும் நன்றாக வதங்கியதும் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

• கலவை நன்றாகக் கொதித்ததும் புளியைக் கரைத்துச் சேர்க்கவும். சுண்டி வரும்போது வெல்லத்தைச் சேர்க்கவும்.

• எண்ணெய் பிரிந்து வரும் போது, திக்கான தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும்.

• இது பரோட்டா, சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை போன்ற டிபன் வகைகளுக்கும் சாப்பாட்டுக்கும் ஏற்றது.

4a207c7b 3c8d 41cd 8819 1d87f40467c4 S secvpf

Related posts

கும்மூஸ் ( HUMMOOS )

nathan

சூப்பரான சைடிஷ் பெப்பர் உருளைக்கிழங்கு ரோஸ்ட்

nathan

வெங்காய சாதம்

nathan

ஆரஞ்சு தோல் குழம்பு

nathan

காரசாரமான மொச்சை பொரியல் செய்வது எப்படி

nathan

சத்து நிறைந்த வேர்க்கடலை சாதம்

nathan

வேர்க்கடலை குழம்பு செய்வது எப்படி

nathan

குதிரைவாலி அரிசி பிரியாணி

nathan

டிரை ஃப்ரூட்ஸ் புலாவ்

nathan